Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா?
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
Mutta Pathri With Coconut Milk Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக செய்வீர்களா? இப்படி தினமும் இட்லி, தோசையை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் ஈஸியான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டையும், மைதாவும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு முட்டை பத்திரி செய்யுங்கள்.

இந்த முட்டை பத்திரி ரெசிபி கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான பாரம்பரிய காலை உணவாகும். இதை தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வயிறு நிறைய அசைவ உணவை சாப்பிட்ட மறுநாள் காலையில் இப்படி தேங்காய் பாலை எடுத்தால், வயிறு மட்டுமின்றி, உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த கேரளா ஸ்பெஷல் முட்டை பத்திரி மற்றும் தேங்காய் பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்பெஷல் முட்டை பத்திரி மற்றும் தேங்காய் பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை பத்திரிக்கு...
* முட்டை - 2
* மைதா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் பாலுக்கு...
* தேங்காய் - 1
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 2 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின் அதில் 2 கப் மைதா மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
அத்துடன் 1 கப் நீரை ஊற்றி கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதை கட்டிகளின்றி இருக்குமாறு நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து மூடி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் தேங்காயை துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன்
2 ஏலக்காயை சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் தேவையான அளவு நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக நீரை ஊற்றிவிட வேண்டாம்.
* பின்பு அதை வடிகட்டி, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தேங்காய் பால் ஓரளவு கெட்டியாக
இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
* இறுதியாக தவாவை அடுப்பில் வைத்து, தவா சூடானதும், கலந்து வைத்துள்ள
மாவை ஒரு கரண்டி ஊற்றி, கரண்டியால் தேய்க்காமல் அப்பம் போன்று சுட்டு
எடுத்தால், சுவையான முட்டை பத்திரி தயார்.



Click it and Unblock the Notifications