Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் லட்டு ரெசிபிக்கள்!
லட்டுக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. முக்கியமாக லட்டு செய்வது மிகவும் சுலபம். கீழே விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக செய்யக்கூடிய சில லட்டு ரெசிபிக்கள் செய்முறையுடன் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து, விநாயகரை அழகாக அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வணங்குவார்கள். வீட்டில் விநாயகர் சிலையை வைத்திருந்தால், விநாயகருக்கு மூன்று வேளையும் சாப்பிட எதையாவது படைக்க வேண்டும். விநாயகருக்கு கொழுக்கட்டை, மோதம், லட்டு போன்றவை மிகவும் பிடிக்கும்.

பெரும்பாலானோர் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைத்து வணங்குவார்கள். ஆனால் விநாயகருக்கு லட்டும் பிடிக்கும். எனவே இந்த வருட விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு லட்டு செய்து படையுங்கள். லட்டுக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. முக்கியமாக லட்டு செய்வது மிகவும் சுலபம். கீழே விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக செய்யக்கூடிய சில லட்டு ரெசிபிக்கள் செய்முறையுடன் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றில் பிடித்ததை செய்து படைத்து விநாயகரின் அருளைப் பெறுங்கள்.

1. மோத்திசூர் லட்டு
கடைகளில் விற்கப்படும் மோத்திசூர் லட்டு உங்களுக்கு பிடிக்குமா? அப்படியானால் அந்த மோத்திசூர் லட்டுக்களை வீட்டிலேயே செய்து, உங்கள் வீட்டிற்கு வந்துள்ள விநாயகருக்கு படையுங்கள்.

2. ரவா லட்டு
வீட்டில் ரவை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஒரு சுவையான ரவா லட்டு செய்யுங்கள். இந்த ரவா லட்டுவை செய்வது மிகவும் சுலபம். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

3. தேங்காய் லட்டு
தேங்காய் லட்டு ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள விநாயகருக்கு ஒரு வித்தியாசமான லட்டு செய்து படைக்க நினைத்தால், தேங்காய் லட்டு செய்யலாம். இதை செய்வதும் மிகவும் சுலபம்.

4. பாதாம் லட்டு
உங்கள் வீட்டு விநாயகருக்கு இன்னும் ருசியான லட்டு செய்ய விரும்பினால், பாதாம் லட்டு செய்து படையுங்கள். இந்த பாதாம் லட்டு செய்வது மிகவும் ஈஸி. அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.

5. சப்பாத்தி லட்டு
சப்பாத்தியைக் கொண்டும் லட்டு செய்யலாம் என்பது தெரியுமா? இந்த சப்பாத்தி லட்டு சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

6. வேர்க்கடலை லட்டு
5 நிமிடத்தில் ஒரு லட்டு செய்ய வேண்டுமா? அப்படியானால் வேர்க்கடலை லட்டு செய்யுங்கள். இதை செய்வதற்கு 2 பொருட்கள் இருந்தாலே போதும். நிமிடத்தில் ருசியான வேர்க்கடலை லட்டுக்களை செய்துவிடலாம்.



Click it and Unblock the Notifications