Just In
- 1 hr ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- 2 hrs ago
உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும் உங்க உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago
தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்...!
- 3 hrs ago
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Don't Miss
- News
நோய் பரவல்.. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது.. அரசுக்கு புகழேந்தி கடிதம்
- Automobiles
உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்!.. வேற லெவல் டிசைன்ல காரை வடிவமைச்சிருக்காங்க!
- Movies
கையில் கணவரின் அஸ்தி.. நிலைகுலைந்து போன மீனா.. மீளா துயரத்தில் !
- Technology
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- Finance
செய்யுற வேலையை ஒழுங்கா செய்யணும்.. வாடிக்கையாளருக்கு ரூ.39,000 கொடுங்க.. MMTக்கு குட்டு..!
- Sports
" இன்று ஒரே இரவு தான்.." ரோகித் சர்மா-க்கு திடீர் கண்டம்.. இங்கி, டெஸ்ட்-க்காக பிசிசிஐ வைத்த செக்!!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Chapati ladoo recipe : சுவையான... சப்பாத்தி லட்டு
உங்கள் வீட்டில் உள்ளோர் திடீரென்று ஸ்வீட் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மீதமுள்ள சப்பாத்தி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான லட்டு செய்யுங்கள். இந்த சப்பாத்தி லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சப்பாத்தி - 6
* பொடித்த வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நறுக்கிய பாதாம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து விட வேண்டும்.
* பின்பு சிறிது கலவையை எடுத்து, அதை இறுக்கமாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் உருட்டினால், சப்பாத்தி லட்டு தயார். இந்த லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
* இந்த லட்டு செய்வதற்கு எஞ்சிய சப்பாத்திகளை பயன்படுத்தலாம் அல்லது புதிதாக சப்பாத்திகளை செய்தும் பயன்படுத்தலாம்.
* இந்த சப்பாத்தி லட்டுக்களை 2 நாட்கள் வரை அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிடலாம்.
* சப்பாத்தி லட்டுவிற்கு பாதாமை தவிர முந்திரி, பிஸ்தா என்று எந்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெல்லம் இல்லாதவர்கள், சர்க்கரையை கொண்டும் செய்யலாம். ஆனால் சர்க்கரையை பயன்படுத்துவதாக இருந்தால், 2 1/2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்துங்கள் போதும்.
Image Courtesy: sharmispassions