Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்டிருப்பதோடு, கண்களைக் கவரும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.

ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
நீங்கள் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள், ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தால், இந்த ஆளுமை சோதனையை மேற்கொள்ளலாம். இணையத்தில் இந்த மாதிரி நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் கண்கள், மரம் மற்றும் 2 முகங்கள் என 3 விதமான உருவங்கள் உள்ளன. அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களின் உண்மையான குணம் என்ன என்பதை அறியலாம். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? அப்படியானால் இந்த படத்தை பார்த்த ஒரு நொடியில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறி, உங்கள் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
கண்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு கண்கள் தெரிந்திருந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். உங்களின் உணர்ச்சிகளை எவ்வளவு தான் மறைக்க முயற்சித்தாலும், அது அப்பட்டமாக உங்கள் முகத்தில் தெரிந்துவிடும்.
உங்கள் நண்பர்கள் குழுவில் நீங்கள் ஒரு சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள். ஒரு இடத்தில் ஏதாவது சரியில்லை என்றால் அல்லது மிகுந்த வருத்தத்தில் ஒருவர் இருந்தால், அதை மற்றவர்கள் கவனிக்கும் முன் நீங்கள் கண்டுகொள்வீர்கள். முக்கியமாக நீங்கள் மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுடன் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பை உணர்வார்கள்.
நீங்கள் எப்போதும் ஒரு உண்மையான மற்றும் நேர்மையான உரையாடல்களையே விரும்புவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு, அவர்களுடன் ஒன்றிப்போவதால், ஒருவிதத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஆனால் ஆழ்ந்த பச்சாதாபம் உங்களை மிகுந்த விசுவாசமும் கருணையும் கொண்ட ஒரு நபராக ஆக்குகிறது.
மரம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் எதையும் பரந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பீர்கள். மிகவும் உற்சாகமான நபராக இருப்பீர்கள். எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யாமல் திடீரென்று செய்வீர்கள். மற்றவர்களுடன் பேச தயங்குபவர்களையும் கலகலவென்று பேச வைத்துவிடுவீர்கள். உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த சற்றும் தயங்கமாட்டீர்கள். நீங்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் இணைந்திருக்கும் போது தான் மிகவும் நன்றாக உணர்வீர்கள்.
இரண்டு முகங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு முகங்கள் தெரிந்தால், நீங்கள் சொல்லப்படாத உணர்வுகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்ட ஒரு இயல்பான உள்முக சிந்தனையாளராக இருக்க வாய்ப்புள்ளது. மற்றவர்கள் கவனிக்க தவறும் விஷயங்களை நீங்கள் கவனிப்பூர்கள். முன்பின் தெரியாதவர்கள் நிறைந்த ஆடம்பரமான ஒரு விருந்திற்கு செல்வதை விட, மனதிற்கு பிடித்தவர்களுடன் உணவை உண்ணவே விரும்புவீர்கள். ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். ஒரு பிரச்சனையின் போது, அமைதியை நிலைநாட்ட மட்டும் பேசாமல், உண்மைக்காக பேசுவீர்கள். எதையும் ஆழ்ந்து சிந்தித்து செய்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications