Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
Saturn Moon Make Vish Yog On 09 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த மீன ராசிக்குள் சந்திரன் ஜூன் 09 ஆம் தேதி நுழையவுள்ளார்.

இதன் விளைவாக மீன ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஒரு அசுப யோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளையும், பண பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர். இப்போது மீன ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அதோடு மனம் அமைதியிழந்து இருக்கும். மேலும் திடீர் நிதி இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டபவர்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கக்கூடாது. சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த காலத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். விஷ யோகத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க ஹனுமான் சாலிசாவைத் தவறாமல் பாராயணம் செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக இக்காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருந்து, வேலைகளில் இடையூறை ஏற்படுத்தலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி தொல்லையால் சிரமப்படக்கூடும். நிதி விஷயங்களில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களை மேற்கொள்ளும் போது உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். விஷ யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க துர்கா தேவியை வழிபடுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரித்து பட்ஜெட் பாழாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்க செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் தேவையில்லாத வாக்குவாதத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. விஷ யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


