Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
வேர்க்கடலை லட்டு
இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு லட்டு செய்து கொடுக்க விரும்பினால், வேர்க்கடலை லட்டு செய்து கொடுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம்.
விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. விநாயகரின் பிறந்தநாளையொட்டி பலரும் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். விநாயகருக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு போன்றவை மிகவும் பிடிக்கும். இந்த வருட விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு லட்டு செய்து கொடுக்க விரும்பினால், வேர்க்கடலை லட்டு செய்து கொடுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* வெல்லம் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வெல்லத்தைப் போட்டு மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை லட்டு போன்று உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
