For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ganesh Chaturthi 2022: விநாயகர் எடுத்த 8 அவதாரங்கள் பற்றி தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த தருணத்தில் உலகைக் காக்க விநாயகர் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இப்போது காண்போம்.

|

இந்து சமயத்தில் முதன்மைக் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த நாளாகும். இந்த விநாயகர் சதுர்த்தியானது 10 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்வில் உள்ள தடைகளை நீக்குவதால், விநாயகர் விக்னஹர்தா என்ற சிறப்பு பெயரைப் பெற்றார்.

Ganesh Chaturthi 2022: Different Avatars of Lord Ganesha In Tamil

இந்து புராணங்களின் படி, விநாயகர் ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கடவுளாவார். பொதுவாக கடவுள்களில் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் விநாயக பெருமானும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த தருணத்தில் உலகைக் காக்க விநாயகர் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வக்ரதுண்டா

வக்ரதுண்டா

விநாயகரின் முதல் அவதாரம் தான் வக்ரதுண்டா. விநாயக பெருமான் மட்சரா என்ற அரக்கனை அழிக்கவும், மூன்று உலகங்கள் மற்றும் தேவர்கள் இழந்த ராஜ்யங்களை மீட்டெடுப்பதற்கும் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார். இந்த அவதாரத்தில் விநாயகர் சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பார்.

ஏகதந்த

ஏகதந்த

விநாயகரின் இரண்டாவது அவதாரம் தான் ஏகதந்த. இந்த இரண்டாவது அவதாரம் மிக உயர்ந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. இந்து புராணங்களின் படி, சிவனை சந்திக்க விடாமல் பரசுராமரை தடுத்ததால், பரசுராமர் கோபம் கொண்டு விநாயகரின் ஒரு தந்தத்தை உடைத்ததாக கூறப்படுகிறது.

கஜானன்

கஜானன்

விநாயக பெருமான் 'கஜானன்' என்றும் அழைக்கப்படுவார். கஜானன் என்றால் யானைத் தலை என்று பொருள். இந்து புராணங்களின் படி, கஜ் என்றால் யானை மற்றும் அனன் என்றால் தலை என்று பொருள். விநாயகர் உலகில் பேராசையை எதிர்த்துப் போராட இந்த அவதாரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

லம்போதரா

லம்போதரா

க்ரோதசுரனை எதிர்த்துப் போராட விநாயகர் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார். க்ரோதசுரன் கோபத்தின் அரக்கன் ஆவார். விநாயகர் இந்த அரக்கன் மற்றும் அவரது கோபத்தில் இருந்து உலகை மீட்டெடுக்க இந்த அவதாரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

விக்னராஜ்

விக்னராஜ்

இது விநாயகரின் மிகவும் பிரபலமான அவதாரங்களில் ஒன்றாகும். காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக இந்த அவதாரத்தில் பிறந்தார். விக்ன என்றால் தடைகள் என்று பொருள். விநாயகர் இந்த அவதாரத்தில் தான் தடைகளில் இருந்து பாதுகாத்து வெற்றியின் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

மயூரேசர்

மயூரேசர்

விநாயகரின் மற்றொரு அவதாரம் தான் மயூரேசர். இந்த அவதாரத்தில் விநாயகர் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, கமலாசுரன் என்ற அசுரன் திருடிச் சென்ற போது, மயில் வாகனத்தில் சென்று, அவனை வென்று வேதங்களை மீட்டெடுத்தார்.

கணேசர்

கணேசர்

விநாயகரின் மிகவும் பிரபலமான ஓர் அவதாரம் தான் கணேசர். இந்த அவதாரத்தில் பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்திய போது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தார்.

சிந்தாமணி

சிந்தாமணி

ஒருமுறை கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப் பொருளை, கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். இந்த சிந்தாமணி உயிரைக் காக்கக்கூடியது. இந்த சிந்தாமணியை மீட்டு கொண்டு வந்ததால், சிந்தாமணி என்ற பெயரைப் பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi 2022: Different Avatars of Lord Ganesha In Tamil

Ganesh Chaturthi 2022: In this article, we shared what are the 8 different avatars of Lord Ganesha. Read on...
Story first published: Tuesday, August 30, 2022, 15:47 [IST]
Desktop Bottom Promotion