கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றிபெற சில அடிப்படை குணங்கள் ஒருவரிடம் இருக்க வேண்டும். கடின உழைப்பு, விடா முயற்சி, கொஞ்சம் அதிர்ஷ்டம் போன்றவை இருக்க வேண்டும். ஆனால் இவற்றுடன் இன்னொரு குணமும் அவசியம் இருக்க வேண்டும், அதுதான் பொறுமை.

மற்ற குணங்கள் இருந்தும் ஒருவரிடம் போதுமான பொறுமை இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் வெற்றியை அடைய முடியாது. அதனால்தான் நம் முன்னோர்கள்' பதறிய காரியம் சிதறும் 'என்று கூறியுள்ளார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் பொறுமை என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களையும் அவசரமாக செய்யும் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களின் இந்த அவசர புத்தியே முதன்மையான காரணமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவசர புத்தியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 4 Most Impatient Zodiac Signs

மேஷம்

ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தீவிரமான ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பைக் கொண்டுள்ளனர், இது பெரும்பாலும் அவர்களை பொறுமையற்றவர்களாக ஆக்குகிறது. மேஷ ராசிக்காரர்கள் உடனடி பலன்கள் மற்றும் விரைவான வெற்றியை நோக்கியே செயல்படுவார்கள். எந்தவொரு விஷயமும் இயற்கையாக நடைபெறுவதை பார்ப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகும், மேலும் விஷயங்கள் விரும்பிய வேகத்தில் நடக்காத போது அவர்கள் பெரும் விரக்திக்கு ஆளாவார்கள். அவர்களின் பொறுமையின்மை பெரும்பாலும் அவர்களின் லட்சிய வெறி மற்றும் அளவில்லாத உற்சாகத்திலிருந்து எழுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் தகவமைப்பு மற்றும் விரைவான புரிதலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் அதீத உற்சாகம் மற்றும் பன்முகத்தன்மைக்கான அவர்களின் தொடர்ச்சியான தேவை அவர்களை மிகவும் பொறுமையற்றவர்களாக மாற்றும். மிதுன ராசிக்காரர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட பதட்டப்படுபவார்கள், எப்போதும் புதிய அனுபவங்களையும், புதிய சவால்களையும் விரும்புகிறார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் எளிதில் சலிப்படைகிறார்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்ச்சியான தூண்டுதல் தேவைப்படுகிறது, எனவே எப்போதும் பதட்டமாகவே இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறார்கள். தன்னம்பிக்கையும், வசீகரமும் கொண்ட அவர்கள் குறைவிலா கவனத்தையும், அங்கீகாரத்தையும் விரும்புகிறார்கள். அவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு வலுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர், மேலும் விஷயங்கள் தங்கள் வழியில் நடக்காதபோது அல்லது அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரும்போது எளிதில் பொறுமையிழந்து விடுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் பரந்த தொலைநோக்குகளையும் லட்சியங்களையும் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் ஏதேனும் தாமதங்கள் அல்லது தடைகளை உணர்ந்தால் அதிக விரக்தியடையலாம். அவர்களின் பொறுமையின்மை என்பது தொடர்ந்து பிரகாசிக்கவும் கவனத்தின் மையமாக இருக்கவும் வேண்டிய விருப்பத்திலிருந்து எழுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் முன்னேற்றத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சாகச மனப்பான்மைக்கும், சுதந்திரத்தின் மீதான ஆர்வத்திற்கும் பெயர் பெற்றவர்கள். உலகத்தையும் புதிய விஷயங்களையும் ஆராய அவர்களுக்கு எப்போதும் வலுவான ஆசை இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாகவும் பெரிய கனவுகள் மற்றும் இலக்குகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சலிப்பான நடைமுறைகள் அல்லது பொறுப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக உணரும்போது அவர்களின் பொறுமையின்மை வெளிப்படும். அவர்கள் தொடர்ச்சியான இயக்கத்தை விரும்புகிறார்கள், மேலும் நீண்டகால திட்டங்களில் ஈடுபட அவர்கள் ஒருபோதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion