Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 4 பொருட்களால் விநாயகரை செய்து வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுமாம்...
Ganesh Chaturthi 2023: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் தங்களின் வீடுகளில் விநாயகரின் சிலையை வைத்து, விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், லட்டு மற்றும் பல உணவுப் பொருட்களை செய்து படைத்து, விநாயகரை மகிழ்வித்து, அவரது அருளைப் பெற முயற்சிப்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18 ஆம் தேதி வருகிறது. இந்த கொண்டாட்டமானது செப்டம்பர் 28 ஆம் தேதி வரை இருக்கும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் ஆன விநாயகரை வாங்கி வைத்து வழிபடுவார்கள்.

ஆனால் களிமண் விநாயகரை விட, ஒருசில மங்களகரமான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபட்டால், விநாயகரின் அருளால், வீட்டில் செல்வம் பெருகும். இப்போது விநாயகர் சதுர்த்திக்கு எந்த பொருட்களால் ஆன விநாயகரை வாங்கி வழிபடுவது நல்லது என்பதைக் காண்போம்.
மரத்தாலான விநாயகர்
உங்கள் வீட்டில் ஒரு அழகான விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், மரத்தாலான விநாயகர் சிலையை வையுங்கள். அதுவும் அரச மரம், மாமரம் அல்லது வேப்ப மரத்தாலான சிலைகளை வீட்டில் வையுங்கள். ஏனெனில் இந்த மரங்கள் அனைத்துமே இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான மரங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இந்த மர விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் நிரம்பி, செல்வம் பெருகும்.
மஞ்சள் விநாயகர்
மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள். பொதுவாக ஒரு பூஜை செய்யும் போது, அங்கு மஞ்சளைக் கொண்டு விநாயகரைப் பிடித்து வைத்து தான் அந்த பூஜையையே செய்வார்கள். அப்படிப்பட்ட மஞ்சளை எடுத்து நீர் சிறிது சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து விநாயகர் உருவத்தை செய்ய வேண்டும். மஞ்சளை அரைக்க முடியாதவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து செய்யலாம். சொல்லப்போனால் கடைகளிலேயே மஞ்சள் கட்டிகளில் விநாயகர் உருவம் செய்து விற்கப்படுகிறது. அதை வாங்கி வைத்தும் வழிபடலாம்.
மாட்டு சாணத்தால் ஆன விநாயகர் சிலை
பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் அதை வீட்டில் வைப்பது இன்னமும் நல்லது. ஏனெனில் மாட்டு சாணத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக கூறப்படுகிறது. எனவே வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், களிமண்ணால் ஆன விநாயகருக்கு பதிலாக, மாட்டு சாணத்தால் ஆன விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுங்கள்.
உலோக சிலை
விநாயகர் சதுர்த்தியின் போது வீட்டில் உலோகத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. அதுவும், உங்களால் முடிந்தால் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications