Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ருசியான... எள்ளு கொழுக்கட்டை
Ganesh Chaturthi 2023: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. பலரும் தங்கள் வீடுகளில் விநாயகரை நிறுவி, அவரை அவருக்கு பிடித்த பொருட்களால் அழகாக அலங்கரித்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டைகளை செய்து படைத்து வழிபடுவார்கள். கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் அதில் எள்ளு பூர்ண கொழுக்கட்டை மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
நீங்கள் மாலை வேளையில் விநாயகரை வழிபட என்ன கொழுக்கட்டை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எள்ளு பூர்ண கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த எள்ளு கொழுக்கட்டை விரைவில் செய்யக்கூடியவாறு ஈஸியான செய்முறையைக் கொண்டது. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு எள்ளு கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாவிற்கு...
* அரிசி மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 3/4 கப்
உள்ளே வைப்பதற்கு..
* கருப்பு மற்றும் வெள்ளை எள்ளு - 1/2 கப்
* வெல்லம் - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
நீர் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உப்பு மற்றும்
எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவை மெதுவாக சேர்த்து கரண்டியால் கிளறி, சிறிது
நேரம் மூடி வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து
ரோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதன்
பின் வெல்லத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை
கிளறி, ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மாவை நன்கு மென்மையாக பிசைந்து, அவற்றை உருண்டைகளாக உருட்டி
பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே ஒரு
ஸ்பூன் எள்ளு பூர்ணத்தை வைத்து, மோதகம் வடிவில் பிடித்துக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை
நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் இட்லி தட்டில் செய்து வைத்துள்ள
மோதகங்களை வைத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 8-10 நிமிடம் வேக
வைத்து இறக்கினால், எள்ளு கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications









