Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Kaiyendhi Bhavan Parotta Salna in Tamil: வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமாக செய்யும் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு கையேந்தி பவன் பரோட்டா சால்னா பிடிக்குமா? அப்படியானால் அந்த பரோட்டா சால்னாவை வீட்டில் செய்யுங்கள்.
இந்த சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15-20
* கசகசா - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு,
பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய், கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில்
வைத்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின்
சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து மிதமான தீயில் 10
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கையேந்தி பவன் பரோட்டா
சால்னா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications