Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
300 ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகும் 3 யோகத்தால் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Ganesh Chaturthi 2023: நவகிரகங்களின் இயக்கம் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அதுவும் பண்டிகைக் காலங்களில் கிரகங்களின் சேர்க்கை அல்லது நிலைகளால் யோகங்கள் உருவாகும் போது, அது இன்னமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் முதன்முதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ஆம் தேதி வருகிறது. இது இந்துக்களின் மிகவும் முக்கியமான விழாவாகும்.

இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. அவை சுக்ல யோகம், பிரம்ம யோகம், சுப யோகம் ஆகும். இந்த மூன்று யோகங்களும் 300 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகின்றன.
இந்த யோகங்களால் 3 ராசிக்காரர்களுக்கு விநாயகரின் அருளால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட் அடித்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
விநாயகர் சதுர்த்தி அன்று உருவாகும் 3 யோகங்களால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தடைப்பட்ட வேலைகள் விநாயகரின் அருளால் வெற்றிகரமாக முடிவடையும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் 3 சுப யோகங்களானது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை உரிய நேரத்தில் வெற்றிகரமாக முடிப்பார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் 3 யோகங்களால் பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் தங்களின் சிறப்பான செயல்திறனால் அலுவலகத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications