For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓகேனு டைப் பண்றதுக்கு பதில் இமோஜி அனுப்பிருக்கு ஒரு பொண்ணு... பாஸ் வேலைய விட்டே தூக்கிட்டாராம்...

ஒரு பெண் ஊழியர் தனது பாஸ் அனுப்பிய செய்திக்கு ஒகே என்று ஒரு ஈமோஜி அனுப்பியதற்காக வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

|

சில எதிர்பாராத காரணங்களுக்காக நம்மில் பலர் மற்றவர்களிடமிருந்து திட்டு வாங்கிய தருணங்கள் இருக்கலாம். சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்லாமல் இருப்பது, வேலையை சரியாகச் செய்யாமல் இருப்பது போன்றவை ஒரு ஊழியர் தங்கள் முதலாளியிடமிருந்து திட்டு வாங்கும் சில காரணங்கள் ஆகும். ஆனால் ஒரு சிலர் தெரியாமல் காபியை கொட்டியதாலும் வேறு சில சிறிய விஷயங்களுக்கெல்லாம் திட்டு வாங்கி இருக்கலாம்.

Woman

ஒரு பெண் ஊழியர் தனது பாஸ் அனுப்பிய செய்திக்கு ஒகே என்று ஒரு ஈமோஜி அனுப்பியதற்காக வாங்கி கட்டி கொண்டுள்ளார் என்பது சிரிப்பை வரவழைக்கிறதா? வாருங்கள் அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இமோஜி அனுப்பிய பெண்

இமோஜி அனுப்பிய பெண்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்க்ஷா என்னும் இடத்தில் உள்ள மதுபான நிறுவன மேலாளர் "வீ சாட்" என்னும் குழுவில் தன்னுடைய ஊழியர்களையும் இணைத்துள்ளார். அவர் ஒரு பெண் ஊழியரிடம் தனது மீட்டிங் தொடர்பான முக்கிய ஆவணங்களை அனுப்புமாறு அந்தக் குழுவில் செய்தி அனுப்பியுள்ளார்.

அதற்கு அந்தப் பெண் ஊழியர் " ஓகே " ஈமோஜியைத் தனது பதிலாக அனுப்பியுள்ளார். இந்த பதில் பெரும்பாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரையில் அது தவறாகக் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் தனக்கென ஒரு விதியை வகுத்துள்ளது.

MOST READ: வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...

வேலை காலி

வேலை காலி

அந்த நிறுவனத்தின் விதிகளின்படி, ஊழியர்கள் 'ரோஜர்' ஐப் பயன்படுத்த வேண்டும் அல்லது அந்தந்த முதலாளிகளுக்கு செய்திகளுக்கு பதிலளிக்க முழுமையான சொற்களை எழுத வேண்டும். அந்தப் பெண் தனது முதலாளிக்கு ஒரு "ஓகே " ஈமோஜியை அனுப்பியதால், அவர் நீக்கப்பட்டார்!

நீண்ட நாள் ஊழியராம்

நீண்ட நாள் ஊழியராம்

"நீங்கள் செய்தியைப் பெற்றிருந்தால் அதற்கு பதிலளிக்க முழு சொற்களைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு இந்த நிறுவனத்தின் விதிகள் பற்றி தெரியாதா? இது தான் நீங்கள் பதிலளிக்கும் முறையா? என்று முதலாளி அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அந்தப் பெண் மனித வளத்துறை அதிகாரியிடம் பேசி ராஜினாமா செய்யும்வரை அந்த மேலாளர் பிடிவாதமாக இருந்தார்.

ராஜினாமா

ராஜினாமா

இந்த வழக்கு உண்மையா என்பது பற்றி அறிந்துக் கொள்ள அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டபோது, அது உண்மைதான் என்றும், தற்போது அவருடைய ராஜினாமா செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார். அந்தப் பெண் இந்த நிறுவனத்தின் நீண்ட நாள் ஊழியர் என்பது ஒரு பரிதாபப்பட வேண்டிய செய்தியாகும்.

MOST READ: குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?

விதிமுறைகள்

விதிமுறைகள்

வேலை இடத்தில் அவர்கள் மேற்கொள்ளும் விதிகள் பற்றிய முழுமையான புரிதல் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை என்பதும், அலுவலக விஷயங்களில் ஈமோஜியைப் பயன்படுத்துவது தவறு என்பதும் இந்த செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ளும் தகவலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Gets Fired For Sending An OK Emoji To Her Boss

People get fired for several unexpected reasons. Not being punctual and not performing at the job are some of the common reasons why employees get fired. On the other hand, people also do get fired for some unusual reasons like spilling coffee on the floor or a few other petty cases.
Desktop Bottom Promotion