Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?
குடிச்சா எத எத சாப்பிடனும்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு, சைடிஸ்னு நினைச்சு ரூம் கீயை சாப்பிட்ட கொடுமைய பாருங்க. நாட்டுல என்னென்னவோ நடக்குது. இத பத்தி தெரிஞ்சிக்கங்க.
குடிகாரன் சொன்ன பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அவர்கள் சொல்ற விஷயம் மட்டுமல்ல செய்கின்ற செயலும் அப்படித்தான். ஆல்கஹால் உள்ளே போனால் ஆப்போஷிட்ல யார் வர்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு குடிக்கிறது தான் நிறைய பேரோட பழக்கமாக உள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பது தன்நிலை மறந்து உயிருக்கே சில நேரங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடுகிறது.

அப்படித்தான் ஒருவர் எக்குத் தப்பா குடிச்சு பேதையில என்ன செய்ஞ்சு இருக்காருன்னு பாருங்க. குடிச்சாலே போதும் சிலர் முரட்டுத்தனமாக கூட நடந்துப்பாங்க. நினைவே இல்லாமல் இருந்தால் இந்த பையன் நிலைமை தான் உங்களுக்கும்.
தன்னுடைய குடிபோதையில் சைடிஸ்னு நினைச்சு சாவிய விழுங்கின கொடுமைய பாருங்க.

நடந்த விபரீதம்
ஷாங் என்ற சீன நாட்டைச் சார்ந்த 26 வயது இளைஞன் தன்னுடைய வார விடுமுறையை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டியில் நல்லா தண்ணிய போட்டு ஆடி கூத்தடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது தான் வீட்டுச் சாவி காணோம்ங்றது தெரிய வந்துள்ளது. வீட்டிற்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி தன்னுடைய சாவி தொலைந்ததை தெரிவித்துள்ளார்.

மார்பகத்தில் வலி
அடுத்த நாள் காலையில் எழும் போது அவனுக்கு நெஞ்சு முழுவதும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடி உள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது தான் அவனது மூச்சுக் குழாயில் சாவி சிக்கியது தெரிய வந்திருந்தது. அந்த பையனுக்கே தெரியவில்லை கீ எப்படி தன் வாய்க்குள் போனது என்று. அந்தளவுக்கு இரவில் பேதை தலைக்கேறி இருந்துள்ளான்.

அறுவை சிகிச்சை செய்யும் நிலை
மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்து சாவியின் நிலையை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கி உள்ளனர். மேலும் இந்த சாவி அந்த பையனின் குடலை கிழித்து உள்ளதாகவும் உணஙுக்குழாயையும் கிழித்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எப்படியோ மருத்துவர்கள் சாவியை எடுத்துவிட்டனர்.

என்ன ஆகும்?
காயங்கள் ஆற மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை இவர் குடிக்காமல் இருந்தால் நல்லது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத பத்தி நீங்க என்ன நினைக்கீங்க. தன்நிலை மறக்கும் குடி அவசியம் தான, யோசிங்க மக்களே!



Click it and Unblock the Notifications