For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏகலைவனும் துரோணாச்சாரியரும் உறவினர்களா? எப்படி? அவங்களுக்குள்ள என்ன உறவு?

|

மனிதனாகப் பிறந்தவர்கள் வணங்க வேண்டியவர்களை நமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசை படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தாய் தந்தைக்கு பிறகு தெய்வத்திற்கு முன்னர் வணங்க வேண்டியவராக குரு என்னும் ஆசிரியர் திகழ்கிறார். கடவுளை விடப் பெரிய தகுதி ஆசிரியருக்கு இருப்பதை இந்த நிலையிலிருந்து நம்மால் உணர முடிகிறது. குரு பக்தி என்பது மிக முக்கிய பக்தியாகவும் கருதப்படுகிறது.

குருவின் மீது கொண்ட அதிக அளவு பக்தியால் தனது கட்டை விரலையும் குரு தட்சணையாகக் கொடுத்த ஒரு மாமனிதன் நமது புராணத்தில் உண்டு. அவன் பெயர் ஏகலைவன். நேரடி ஆசிரியராக இல்லாமல் இருந்தாலும் குரு துரோணாச்சாரியார் அவர்கள் மேல் கொண்ட அளவு கடந்த பக்தியால் அவர் கேட்ட குரு தட்சணையாகத் தனது வலது கை கட்டை விரலை கொடுத்தான் ஏகலைவன். அந்த கதையை நாம் இப்போது முழுவதும் தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேடன் மகன் ஏகலைவன்

வேடன் மகன் ஏகலைவன்

ஏகலைவன் காட்டில் வசித்து வந்த ஒரு வேடன் ஆவான். காட்டில் ஓநாய்கள் மான்களை வேட்டையாடுவதைப் பார்த்து மனம் தாங்காமல் ஓநாய்களை வீழ்த்த வில்வித்தை கற்றுக் கொள்ள எண்ணினான். குரு துரோணாச்சாரியார் வில் வித்தையில் சிறந்து விளங்கிய ஆசிரியர் ஆவார்.

இவர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக இருந்து அவர்களுக்கு வில் வித்தையை பயிற்றுவித்து வந்தார். ஆகவே அந்த சிறந்த ஆசிரியரிடம் வில்வித்தை கற்றுக் கொள்ள எண்ணினான் ஏகலைவன்.

MOST READ: பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா? எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?

சீடனாக ஏற்க விண்ணப்பம்:

சீடனாக ஏற்க விண்ணப்பம்:

Image Courtesy

"சர்வஸ்ரேஷ்ட தனுர்தாரி" என்னும் மிகச் சிறந்த வில்வித்தை வீரன் என்று போற்றப்படும் அர்ஜுனன் துரோணரின் சீடராவார். ஒரு நாள், துரோணரிடம் சென்ற ஏகலைவன் தன்னை அவரின் சீடனாக ஏற்றுக் கொண்டு வில்வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். குரு துரோணரோ, தான் அரச குடும்பத்தின் குரு என்பதால் ஏகலைவன் போன்ற பாமரனுக்கு குருவாக இருக்க முடியாது என்று கூறி ஏகலைவனின் விருப்பத்தை நிராகரித்து விட்டார்.

சீடனாக ஏற்க மறுப்பு:

சீடனாக ஏற்க மறுப்பு:

அரச குடும்ப குரு மற்றவர்களுக்கு எந்த ஒரு கலையையும் கற்பிக்கக் கூடாது என்பது அந்நாளைய விதியாகும். ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசனைத் தவிர வேறு யாரும் தற்காப்புக் கலையில் சிறந்த விளங்கக் கூடாது என்பது இத்தகைய விதியின் நோக்கமாகும்.

அரசர் மட்டுமே தனது குடிமக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. ஏகலைவனோ ஒரு வேடனின் மகன் , அதுவும் ஏழை. ஆகவே இவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொள்ள துரோணர் மறுப்பு தெரிவித்தார்.

MOST READ: ஆடை அணியாமல்தான் விமானத்தில் பயணம் செய்வேனென்று ஏர்போர்ட்டில் அடம்பிடித்த நபர்...

குரு துரோணரின் சிலை

குரு துரோணரின் சிலை

குரு துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்த காரணத்தால் மிகுந்த மன வேதனையுடன் திரும்பினான் ஏகலைவன். ஏற்கனவே தனது மனதில் துரோணரை குருவாக வணங்கி வந்தான் ஏகலைவன். அதனால் தனது குருவாகிய துரோணரின் வடிவத்தை ஒரு சிலையாக செய்து காட்டில் ஒரு இடத்தில் வைத்து, அந்த சிலைக்கு முன்னால் தானாகவே தினமும் வில்வித்தை பயிற்சி பெற்று வந்தான்.

"முயற்சி வெற்றியைத் தரும்" என்ற வாக்கிற்கு ஏற்ப, தினமும் அவன் பயிற்சி செய்து வருவதால் நாளுக்குள் நாள் அவனுடைய திறமை வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வில்வித்தையில் சிறந்த வீரனான அர்ஜுனனை விட ஏகலைவனின் திறமை அதிகரித்தது.

அர்ஜுனன் ஏகலைவனைச் சந்தித்தான்:

அர்ஜுனன் ஏகலைவனைச் சந்தித்தான்:

ஏகலைவன் புகழையும் அவன் வில்வித்தையில் சிறந்து விளங்குவதையும் பற்றி அறிந்த அர்ஜுனன், அவனையும் அவன் திறமையையும் பார்க்க விரும்பினான். ஒரு நாள் ஏகலைவனைக் காணச் சென்ற அர்ஜுனன் தன்னை விட சிறப்பாக வில்வித்தை புரியும் ஏகலைவனைக் கண்டு ஆச்சர்யப்பட்டான். ஏகலைவனிடம் அவன் குரு யார் என்று வினவினான், அர்ஜுனன். அதற்கு ஏகலைவன், "குரு துரோணாச்சாரியார்" என்று பதிலுரைத்தான்.

பதிலைக் கேட்டு கோபம் கொண்ட அர்ஜுனன், குருவிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி குற்றம் சாட்டினான். ஏகலைவன் பற்றி முழுவதுமாகக் கூறினான். இதனைக் கேட்ட துரோணர், குழப்பமுற்ற நிலையில் ஏகலைவனைக் காண வேண்டும் என்று எண்ணினார். இதற்கு முன்னர் ஏகலைவன் பற்றி ஒன்றுமே அறியாத துரோணர், ஏகலைவனைக் காணப் புறப்பட்டார்.

குரு தட்சணை கேட்ட துரோணர்:

குரு தட்சணை கேட்ட துரோணர்:

ஏகலைவன் இல்லத்திற்கு துரோணரும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களை வரவேற்ற ஏகலைவன் தான் பயிற்சி பெரும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றான். அங்கு துரோணரின் சிலையைக் காட்டினான். இதனைப் பார்த்த துரோணர், தன் சிலை முன் பயிற்சி பெற்ற காரணத்தால், ஏகலைவனிடம் குரு தட்சணை கேட்டார். அதுவும் குரு தட்சணையாக பணம், பொருள் எதுவும் கேட்காமல், ஏகலைவனின் வலது கை கட்டை விரலைக் கேட்டார்.

MOST READ: இந்த 5 பழக்கவழக்கமும் உங்ககிட்ட இருந்தா சீக்கிரமே செத்துடுவீங்க... இனியாவது மாத்திக்கங்க

ஏகலைவனின் தியாகம்

ஏகலைவனின் தியாகம்

வலது கை கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை புரிவது சாத்தியமல்ல என்பதை ஏகலைவன் அறிவான். ஆனாலும், அதனை வெளிக்காட்டாமல், குருவிற்காக அவர் கேட்ட தட்சணையாக தனது கட்டை விரலை வெட்டி அவரிடம் கொடுத்தான். இப்படி செய்வதன் மூலம், சீடனுக்கான ஒரு சரியான உதாரணத்தை அவன் ஏற்படுத்தினான். இந்த இடத்தில் குரு துரோணாச்சாரியார் முற்றிலும் சுயநலமான, கொடூரமான ஒரு குருவாக தோன்றினாலும், இந்த சம்பவத்திற்கு மற்றொரு கருத்து உண்டு.

அதாவது, குரு துரோணர் தன் மேல் பழியை ஏற்படுத்திக் கொண்டு, தனது சீடனின் தகுதியை உயர்த்தியதாகவும் கூறலாம். ஏகலைவனின் தூய குரு பக்தி பாராட்டக்கூடியது ஆகும். குரு துரோணாச்சாரியார், ஏகலைவனிடம் கட்டை விரலைக் கேட்டதால், நாட்டின் விதியைப் பின்பற்றியதோடு மட்டுமில்லாமல், ஏகலைவனுக்கு இறவாப்புகழையும் பெற்றுத் தந்திருக்கிறார். இந்த சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், சிறந்த வில்வித்தை வீரன் என்ற புகழ் மட்டுமே ஏகலைவனுக்கு சொந்தமாக இருந்திருக்கும். ஆனால் குரு பக்திக்கு உதாரணமாக விளங்கக் கூடிய அழியாப் புகழ் ஏகலைவனை சேர்ந்திருக்காது. குரு சிஷ்யர் பற்றிய உறவைக் குறிப்பிடும்போது இன்றளவும் நாம் ஏகலைவனை நினைவு கூர்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Story Of Eklavya And Dronacharya

Since ages, the story of Eklavya( a character from the Indian epic- Mahabharata) has come to define exemplary discipleship. But there is an unheard and unseen side to the famous story.