நேதாஜியை காப்பாற்ற தன் உடலில் மூன்று குண்டுகளை தாங்கி 117 வயது வரை உயிர் வாழ்ந்த அதிசயம்!

Subscribe to Boldsky

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அன்றைக்கு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவையாகவே இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக பலரும் தங்களின் உயிரைக்கூட தியாகம் செய்து தான் இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானதாக மட்டும் அல்லாமல் வலி நிறைந்ததாகவும் இருக்கும்.

முன்னால் போராடிய வீரர்களை நினைவில் கொள்வதே இன்றைக்கு பெரிய வேலையாக இருக்கும் போது அவர்கள் முன்னால் நிற்க துணை நின்றவர்களை என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா? அப்படிப்பட்ட ஓர் நபர் தான் கர்னல் நிஜாமுதீன். நேதாஜி சுபாஸ் சந்திர போஸுக்கு உறுதுணையாய் பாதுகாவலனாய் இருந்தவர் இவர். நேதாஜியை காப்பாற்றுவதற்காக மூன்று புல்லட்களை தாங்கியிருக்கிறார். நேதாஜி தான் இவருக்கு கர்னல் என்ற பட்டத்தை கொடுத்தார். அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நிஜாமுதின் இயற்பெயர் சைஃபுதின். உத்திரபிரதேசத்தில் இருக்கும் தாக்வான் என்ற ஊரில் 1901 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை இமாம் அலி ரங்கூனில் உணவுக்கூடம் நடத்த.

தாயுடனேயே வாழ்ந்து வந்திருக்கிறார் நிஜாமுதீன். தன்னுடைய இளமைப் பருவத்தில் வீட்டை விட்டு ஓடிய நிஜாமுதீன் பிரிட்டிஷ் ஆர்மியில் சேர்ந்தார்.

அங்கே பிரிட்டிஷ் ஆர்மி வீரர்களை பாதுகாப்பது, அவர்களுக்கான உணவு, தளவாடங்களை சுமந்து செல்வது ஆகியவை தான் இந்திய வீரர்களுக்கு வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய சிப்பாய்களை காப்பாற்றுவதை விட கழுதைகளை காப்பாற்றுங்கள்... தொடர்ந்து உங்களுடைய சுமைகளை சுமந்து செல்ல உதவும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

Image Courtesy

#2

#2

இந்த வார்த்தைகளால், பாரபட்சமான நடைமுறைகளால் பெரும் கோபமடைந்த நிஜாமுதீன் பிரிட்டிஷ் ஆபிசரை சுட்டுக் கொன்று விட்டு சிங்கப்பூருக்கு தப்பியோடிவிட்டார்.

இதன் பிறகு தான் தன்னுடைய உண்மையான பெயரான சைஃபுதின் என்பதை நிஜாமுதீன் என்று மாற்றிக் கொண்டார். அதே பெயரில் இந்திய ஆர்மியில் சுபாஸ் சந்திர போஸ் உடன் இணைந்து கொண்டார்.

Image Courtesy

#3

#3

1943 ஆம் ஆண்டு நேதாஜி சிங்கப்பூர் வந்தடைகிறார். இந்திய ராணுவ வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கே நிஜாமுதீன் நேதாஜியின் நம்பிக்கையைப் பெறுகிறார். மலேசியா மகாராஜா நேதாஜிக்கு பரிசாக வழங்கிய 12 சிலிண்டர் காரின் டிரைவராக நிஜாமுதீன் நியமிக்கப்படுகிறார்.

1943-44 கால கட்டத்தில் நேதாஜியுடன் சேர்ந்து பிரிட்டிஷ் படையினருக்கு எதிராக போராடியிருக்கிறார். மியான்மர் காடுகளில் நடத்தப்பட்ட இந்த போரில் தான் நேதாஜியைக் காப்பாற்ற மூன்று குண்டுகளை தன் உடலில் தாங்கியிருக்கிறார் நிஜாமுதீன்.

Image Courtesy

#4

#4

இது குறித்து நிஜாமுதீன் கூறுகையில், நாங்கள் காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது புற்கள் வேகமாக அசைந்தது கன நேரத்தில் எங்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

நான் சிறிதும் தாமதிக்கவில்லை. உடனடியாக என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்த நேதாஜியின் முன்னால் அவரை அணைத்தபடி நின்றுவிட்டேன்.பாய்ந்த குண்டுகளில் மூன்றும் என் உடலை துளைத்தது.

உடனே சுதாரித்த நாங்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டோம். நான் அங்கேயே மயக்கமாகிவிட்டேன்.

Image Courtesy

#5

#5

கேப்டன் லக்‌ஷ்மி சேகல் தான் என் உடலில் பாய்ந்த குண்டுகளை அகற்றினார். அதன் பிறகு மருத்துவ சிகிச்சைப் பெற்று சுயநினைவுக்கு வந்தேன் கண்ணெதிரே நேதாஜி நின்று கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தது 1943 ஆம் ஆண்டு. இந்த சம்பவங்கள் குறித்து 2016 ஆம் ஆண்டு ஓர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் நிஜாமுதீன்.

Image Courtesy

#6

#6

இவருடைய வீரத்தையும், நேர்மையையும் பாராட்டி, நேதாஜி கர்னல் என்ற பதவியை வழங்கினார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் வரை நேதாஜியின் மெய்ப்பாதுகாவலராகவும், டிரைவராகவும் பணியாற்றியிருக்கிறார் நிஜாமுதீன். நேதாஜி எங்கே சென்றாலும், அவருடனே இருப்பார் நிஜாமுதீன். இப்படி இவர்கள் ஜப்பான்,வியட்னாம், தாய்லாந்து, கம்போடியா என பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

ஆகஸ்ட் 1945 ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தை கலைத்த பிறகு நிஜாமுதீன் அஜ்புன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு ரங்கூனுக்கு வந்து விட்டார். இங்கே ஒரு வங்கியில் டிரைவராக பணியாற்றினார். அங்கேயே அவருக்கு குழந்தைகளும் பிறந்தார்கள். 1969 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார் நிஜாமுதீன்.

Image Courtesy

#8

#8

சொந்த கிராமத்திற்கு திரும்பினாலும் தன் வீட்டிற்கு ஹிந்த் பவன் என்று தான் பெயர் வைத்திருந்தார். அதோடு தன் வீட்டின் கூரையில் மூவண்ண கொடியை பறஜ்ஜ விட்டிருந்தார்.

மக்களிடையே ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டேயிருப்பாராம் நிஜாமுதீன். இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்றாலும் அதற்காக போராடியவர்கள் தொடர்ந்து ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#9

#9

கடந்த ஆண்டு 2017,பிப்ரவரி 6 ஆம் தேதி தன்னுடைய 117 வது வயதில் காலமானார் நிஜாமுதீன். இவர் இறந்த பிறகு தான் உலகிலேயே வயதான நபர், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நபர் குறித்தும் நேதாஜிக்காக தன் உயிரையும் இழக்கத்துணிந்த அவருடைய பெருமைகள் பரவியது. இவருடைய மனைவிக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  True Story Of Hero Who helped Nethaji

  True Story Of Hero Who helped Nethaji
  Story first published: Wednesday, June 6, 2018, 12:48 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more