Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Ketu Transit In Magha Nakshatra On 20 April 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகம் தான் கேது. இந்த கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார். மேலும் கிரகங்களில் கேதுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை.

இப்படிப்பட்ட கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கேது ஏப்ரல் 20 ஆம் தேதி தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணிக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் கேது டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
கேதுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சொந்த ராசிக்கு செல்லும் கேதுவால் அடுத்த 8 மாத காலம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் நிதி ரீதியாக எந்த ஒரு ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். எந்த முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், புத்திசாலித்தனமாக நன்கு யோசித்து பின் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். தொழிலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தம்பதிகளிடையே தவறான புரிதல்கள் வரலாம். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதுவும் ஏற்கனவே கும்ப ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்நிலையில் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் சவால்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளிலும் விரிசல்கள் ஏற்படலாம். பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே மற்றவர்களுடன் பேசும் போது அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழிலில் சரிவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் இப்படி ஏற்படும் சரிவில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருக்கும். பொறுப்புக்கள் எதிர்பாராத அளவில் அதிகரிக்கலாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் காரணமாக நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். வியாபாரிகள் போட்டியாளர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு வலிமிக்க காலமாக இருக்கும். மன கவலைகள் அதிகரிக்கும். கேதுவால் வாழ்வில் கஷ்டங்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக யாரிடமும் கடன் வாங்கி வாகனம் ஓட்டாதீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா மற்றும் உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுங்கள். அதோடு வாழ்க்கை முறையையும் மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

