Latest Updates
-
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும்
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த ஒவ்வொரு பொருளுமே சரியான திசையில், சரியான இடத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் தான் ஃப்ரிட்ஜ். இந்த ஃப்ரிட்ஜ்ஜின் உள்ளே பொருட்களை வைத்து பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அதன் மேல் பரப்பில் ஒருசில பொருட்களை வைத்து, மேஜை போன்று பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் சில பொருட்களை வைப்பது அசுபமானதாக கருதப்படுகிறது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டும். இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் எந்த பொருட்களையெல்லாம் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
1. மருந்து பொருட்கள்
எக்காரணம் கொண்டும் மருந்து பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி மருந்துகளை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்து பயன்படுத்தினால், அது ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக, இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். எனவே வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், மருந்துகளை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
2. மின்னணு பொருட்கள்
சிலர் தங்கள் வீட்டில் சார்ஜர், பல்ப் போன்ற மின்னணு பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் வாஸ்துப்படி மின் சாதனங்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது மின்காந்த ஆற்றலை உருவாக்கி, வீட்டில் ஆற்றல் சமநிலையை சீர்குலைக்கும். இதன் விளைவாக வீட்டில் எப்போதும் சண்டைகளும், வாக்குவாதங்களும் நீடித்திருக்கும்.
3. செடிகள், மீன் தொட்டி
சிலர் வீட்டின் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் அழகுக்காக செடிகள் அல்லது சிறிய மீன் தொட்டிகளை வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது வாஸ்துப்படி நல்லதல்ல. இந்தப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைப்பது ஆற்றல் சமநிலையைச் சீர்குலைக்கும். ஆகவே இதுவரை உங்கள் வீட்டில் இவற்றை வைத்திருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள்.
4. கனமான பொருட்கள்
வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பாத்திரங்கள், பெட்டிகள் போன்ற கனமான பொருட்களை வைத்திருந்தால், அதை அகற்றுங்கள். வாஸ்துப்படி, இந்த பொருட்களை வைத்திருப்பது, வீட்டின் ஆற்றல் சமநிலையை சீர்குலைத்து, அதன் விளைவாக மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பகுதியில் அதிக எடையுடனான கனமான பொருட்களை வைக்காதீர்கள்.
5. ஆன்மீக பொருட்கள்
சிலர் எளிதில் வைத்து எடுப்பதற்காக ஃப்ரிட்ஜ்ஜின் மேல் சாமி தொடர்பான புத்தகங்களை, பூஜை பொருட்கள், கடவுள் படங்களை வைத்து எடுப்பார்கள். வாஸ்துப்படி, இந்த பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைப்பது முறையற்றதாக கருதப்படுகிறது. ஒருவேளை அப்படி வைத்தால், அது கடவுளின் மீதான மரியாதையை குறைக்கிறது. எனவே இந்த வகை பொருட்களை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












