Latest Updates
-
மழைக்காலம் ஆரம்பிக்குது! இந்த வாஸ்து செடிகளை வீட்ல வச்சா… கஷ்டம் எல்லாம் பறந்துடும்! -
இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த ஜப்பான்: உலக புகழ்பெற்ற இந்திய மாம்பழ வகைகளும்.. அவற்றின் பிறப்பிடமும்.. -
மணி பிளான்ட் செடியை இந்த திசையில் வைத்தால் போதும்… பண வரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
அடுத்தடுத்து 4 முறை நிலையை மாற்றும் சனி பகவான்: ஜூலை முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
சாமை கார கொழுக்கட்டையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப்போகுதாம் -
ஜூன் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
3 கத்திரிக்காயும், 4 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எல்லாத்துக்கும் பக்காவா இருக்கும்.. -
வீட்டில் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கா? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நீங்களே இப்படித்தான் அழிக்கிறீர்கள்! -
முகத்தில் உள்ள கருமையை போக்கணுமா? அப்ப ஓட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க..
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க!
Summer Health Tips In Tamil: கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளுக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி வெயில் கொளுத்துவதால், பலர் நீரிழப்பு, உடல் சூடு போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவார்கள். முக்கியமாக குழந்தைகள் கோடைக்காலத்தில் பெரியவர்களை விட அதிகமாக உடல் சூட்டினால் அவதிப்படுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், வெயிலில் சுற்றுவதை நிறுத்திவிட்டு, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டுமானால், அதற்கு நீரை அதிகம் குடிப்பது மட்டுமின்றி, ஜூஸ்/பானங்கள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தினமும் சமைக்கும் போது உணவில் குறிப்பிட்ட காய்கறிகளை சேர்த்து வரும் போது, கோடையில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணரான சந்தியா மணியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொளுத்தும் கோடை வெயிலைத் தணிக்க சாப்பிட வேண்டிய 4 காய்கறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த காய்கறிகளை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்து வர, உடல் சூடு, நீரிழப்பு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை தவிர்க்கலாம். இப்போது அந்த காய்கறிகள் எவையென்பதைக் காண்போம்.
1. வாழைத்தண்டு
"வாழைத்தண்டு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறி மட்டுமின்றி, நார்ச்சத்து அதிகம் கொண்டதும் கூட. இப்படி நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது. ஏனெனில் நமது குடலில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடித்தது என்றால், அது நார்ச்சத்து தான். இந்த நார்ச்சத்து வாழைத்தண்டு ஏராளமான அளவில் இருப்பதால், குடல் எப்போதும் குளுகுளுவென்று ஆரோக்கியமாக இருக்கும்" என்று கூறினார். எனவே உடல் சூடு பிடிக்கக்கூடாது என்று நினைத்தால், வாழைத்தண்டை கோடைக்காலத்தில் அதிகமாக உணவில் சேர்த்து வாருங்கள்.
2. சுரைக்காய்
"சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அதுமட்மின்றி, இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுக்களும் அதிகம் உள்ளன. கோடைக்காலத்தில் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது நீரிழப்பு தான். இந்த காய்கறியை அடிக்கடி வாங்கி சாப்பிடும் போது, அப்பிரச்சனையை சரிசெய்யலாம்" என்று கூறினார்.
3. நீர் பூசணி/வெள்ளை பூசணி
"சுரைக்காயைப் போன்றே வெள்ளை பூசணியிலும் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த பூசணியை கோடைக்காலத்தில் அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடும் போது, உடல் வறட்சி, உடல் சூடு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்" என்று டாக்டர் கூறினார். ஆகவே மார்கெட்டில் இந்த காய்கறியை கண்டால், தவறாமல் வாங்கி வந்து சமைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
4. கீரைகள்
" நான்காவது, கீரை. இந்த கீரைகளில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது மற்றும் உடல் சூட்டை கட்டுப்படுத்தக்கூடிய பண்புகளும் அதிகம் உள்ளன. அதோடு கோடைக்காலத்தில் விலைக் குறைவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒன்று. முக்கியமாக கீரைகளில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே கட்டாயம் கீரையை வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை உணவில் சேர்த்து வர வேண்டும்" என்று கூறினார்.
"அதுவும் மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் கூட்டு போன்று செய்து சாப்பிட்டால், வெரைட்டியான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டிய அவசியமும் இருக்காது மற்றும் ஒரே உணவின் மூலம் ஏராளமான சத்துக்களையும் பெற முடியும்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

