Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க!
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Summer Special Cucumber Idli Recipe In Tamil: தற்போது கோடைக்காலம் என்பதால் வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும். இந்த வெள்ளரிக்காயை வெயில் காலத்தில் அதிகம் உட்கொள்வதன் மூலம் நீரிழப்பு ஏற்படும் அபாயம் குறையும். அதுவும் அந்த வெள்ளரிக்காயை எப்போதும் வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக, அதைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிடுங்கள். இதனால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இதுவரை நீங்கள் வெள்ளரிக்காயை சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு இட்லி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், ஒருமுறை செய்து சாப்பிடுங்கள். இந்த வெள்ளரிக்காய் இட்லிக்கு தக்காளி சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
இந்த வெள்ளரிக்காய் இட்லி ரெசிபி குறித்து ஹேமா சுப்ரமணியன் தனது ஹோம்குக்கிங்ஷோ என்னும் யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு வெள்ளரிக்காய் இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் - 2
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* ரவா - 1 கப் அல்லது 1/4 கிலோ
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெள்ளரிக்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய வெள்ளரிக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் சேர்த்து
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காயை வெள்ளரிக்காயுடன் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிது கொத்தமல்லி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து, அத்துடன் 1 கப்
ரவையை சேர்த்து, நன்கு ஒருசேர கலந்துவிட்டு, மூடி வைத்து 10 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறிவிடும் போது, மிகவும்
வறண்டு போயிருந்தால், அதில் சிறிது நீரை தெளித்துவிட்டு கிளறி விட
வேண்டும்.
* பின்பு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் அல்லது நெய்யை
தடவி, கலந்து வைத்துள்ள மாவை எடுத்து குழிகளில் வைத்து, இட்லி
வேண்டும்.
* பின் இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி 8 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், பஞ்சு போன்று மென்மையான வெள்ளரிக்காய் இட்லி
தயார்.



Click it and Unblock the Notifications











