Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க..
Summer Special Homemade Malai Ice Cream Recipe In Tamil: கொளுத்தும் கோடை வெயிலுக்கு அனைவருக்குமே உடல் வெப்பத்தைக் குறைக்க குளுகுளுவென்று ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், எத்தனை ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தாலும் கட்டுபடியாகாது. ஆனால் அந்த ஐஸ்க்ரீம்மை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தால், செலவும் மிச்சம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த ஐஸ்க்ரீம்மை வாங்க வெயிலில் சுற்ற வேண்டியிருக்காது.

இந்த ஐஸ்க்ரீம்மை பலவாறு செய்யலாம். உங்களுக்கு அதிகம் சிரமப்படாமல் சட்டென்று செய்யக்கூடிய ஐஸ்க்ரீம்மை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் மலாய் ஐஸ்க்ரீம்மை செய்யுங்கள். இந்த ஐஸ்க்ரீம் செய்வதற்கு அடுப்போ, முட்டையோ, பீட்டரோ எதுவும் தேவையில்லை. மிக்ஸி இருந்தாலே போதும், சட்டென்று செய்யலாம்.
இந்த மலாய் ஐஸ்க்ரீம் குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு மலாய் ஐஸ்க்ரீம்மை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மலாய் ஐஸ்க்ரீம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஃபுல் க்ரீம் மில்க்/ஹெவி க்ரீம் மில்க் - 3 கப்
* கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
* ஏலக்காய் - 5 (பொடித்தது)
* மில்க் பிரட் - 3 துண்டுகள்
* குங்குமப்பூ - சிறிது (விருப்பமிருந்தால்)
* பொடித்த நட்ஸ் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 3 கப் ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹெவி
க்ரீம் மில்க்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் விருப்பமிருந்தால் குங்குமப்பூவை சேர்த்துக்
கொள்ளலாம்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் 3 பிரட் துண்டுகளை சேர்த்து,
நன்கு விட்டு விட்டு அடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அடிக்கும் போது
நன்கு ஐஸ்க்ரீம் போன்று கெட்டியாக வரும்.
* பின்னர் ஒரு மூடியைக் கொண்ட எந்த ஒரு பாத்திரத்தையும் எடுத்து,
அதனுள் ஒரு ஃபுட் வ்ராப் கவரை வைத்து, பின் அதன் மேல் அடித்து
வைத்துள்ள ஐஸ்க்ரீம்மை சேர்த்து சமமாக பரப்பி, மூடி வைத்து,
ஃப்ரீசரில் 1/2 நாள் வைத்து எடுக்க வேண்டும். அதாவது காலையில்
வைத்தால், மாலை வேளையில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த
ஸ்க்ரீம்மை ஐஸ் க்ரீம் மோல்ட்டில் ஊற்றியும் வைத்து எடுக்கலாம்.
எல்லாம் உங்கள் விருப்பம்.
* ஐஸ்க்ரீம் செட்டானதும், அதை வெளியே எடுத்து, ஒருமுறை குழாய் நீரில்
அலசி, பின் மூடியைத் திறந்து, கவிழ்த்துப் போட்டு, கவரை நீக்கிவிட்டு,
கத்தியால் துண்டுகளாக்கி, மேலே பொடியாக நறுக்கிய நட்ஸை தூவினால்,
சுவையான மலாய் ஐஸ்க்ரீம் தயார்.



Click it and Unblock the Notifications