Latest Updates
-
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா?
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Summer Skin Care Tips In Tamil: வெயில் காலம் வந்துவிட்டாலே, கை, கால்கள் எல்லாம் நிறம் மாறி கருமையாகிவிடும். இதற்கு சருமமானது தொடர்ச்சியாக வெயிலில் வெளிப்படுவது தான் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு சரியான பராமரிப்பை கொடுக்காமல் இருப்பதும் தான். அதுவும் நமது முகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு, கைகளுக்கு யாரும் பராமரிப்பு கொடுப்பதில்லை. இதனால் முகச் சருமத்தை விட, கைகளில் உள்ள சருமம் மிகவும் கருமையாக காணப்படும்.

உங்களின் கைகளும் இப்படி கருப்பாக காட்சியளிக்கிறதா? இவ்வாறு கருமையான கைகளை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தாலே, வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம். ஆனால் அதற்கு தொடர்ச்சியான அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எலுமிச்சை மற்றும் தேன் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கைகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கைகளை கழுவ வேண்டும்.
2. தயிர் மற்றும் மஞ்சள் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
3. கற்றாழை ஜெல்
* நற்பதமான கற்றாழை ஜெல்லை தினமும் இரவு தூங்கும் முன் கைகளில் தடவ வேண்டும்.
* பின் அதை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு பயன்படுத்தும் போது, கைகளில் உள்ள கருமை நீங்கும்.
4. உருளைக்கிழங்கு ஜூஸ்
* உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை நேரடியாக கைகளில் தடவ வேண்டும்.
* 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கைகளை கழுவ வேண்டும்.
5. கடலை மாவு ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
6. வெள்ளரிக்காய் சாறு
* கோடையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றினை கைகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கைகளை கழுவ வேண்டும்.
7. சந்தன பவுடர் மற்றும் பால் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை கைகளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

