உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயம் தெரிஞ்சுக்க இந்த 4ல ஒரு தேவதைய சூஸ் பண்ணுங்க!

By Staff
Subscribe to Boldsky

சிறு வயதில் இருந்தே தேவதை கதைகள் கேட்டிருப்பீர்கள். மனித வாழ்வின் எல்லா பாகத்திலும் தேவதையின் வருகையை நாம் காண இயலும். பிறக்கும் போதே நீங்களே ஒரு தேவதையாக காணப்படுகிறீர்கள். குழந்தை பருவத்தில் தேவதை கதைகள் கேட்டு வளர்கிறோம். பதின் வயதில் இருந்து, இளமை பருவம் வரை ஒரு தேவதைக்காக காத்திருக்கிறோம்.

பிறகு, நாமே ஒரு தேவதையை பெற்றெடுக்கிறோம்... பிறகு, அதே தேவதை நமது கடைசி நாட்களில் நம்மை கவனித்துக் கொள்ளும்... இறந்த பிறகு... நம்மை தேவதைகள் தான் மேலோகதிற்கு அழைத்து செல்வதாக நம்புகிறோம்...

வாழ்வில் நல்ல எண்ணங்கள் இருக்கும் வரை உங்களை சுற்றி எப்போதுமே தேவதைகள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

Choose a cosmic fairy to know what are you attracting in your life right now?

சரி! இந்த நான்கில் ஒரு தேவதையை தேர்வு பண்ணுங்க.. தற்சமயம் உங்க வாழ்க்கையில நடக்குற சுவாரஸ்யம், உங்கள மத்தவங்க எப்படி பார்க்குறாங்க... உங்க வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும்ன்னு எல்லாம் தெரிஞ்சுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு!

சிவப்பு!

நீங்க கொஞ்சம் சீரியஸ் மற்றும் எனர்ஜடிக் நபராக இருக்க கூடும். எதையும் சென்சிடிவாக எடுத்துக் கொள்வீர்கள். சுதந்திரமாக தனது விருப்பங்களை எதிர்நோக்கி நகரும் நபராக இருப்பீர்கள். உங்களிடம் மிக நெருக்கமாக இருக்கும் நபர்களை தவிர வேறு யாரும் உங்கள் முழுதாக அறிந்திருக்க மாட்டார்கள்.

உங்கள் வலிமையும் திறனும், உங்களை பிறர் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள செய்யும். வெளியே கடினமானவராக தெரிந்தாலும், மன ரீதியாக மென்மையான நபராக இருப்பீர்கள். மக்களை தொடர்பு கொள்வதில், முன்கூட்டியே அறிதல் மூலம் மக்களை ஈர்ப்பீர்கள்.

உங்களிடம் இருந்து மக்கள் எதை கேட்க விரும்புகிறார்கள் என்று அறிதிருந்தாலும்... நேர்மையான, உண்மையான பதிலை அளித்து அசத்துவீர்கள்.

பச்சை!

பச்சை!

உங்கள் இதயம் இயற்கையை போல பச்சைப்பசேல் என்று இருக்கும். பூங்கா, கடற்கரை, மலைகள் என இயற்கை உங்கள் தேர்வாக இருக்கும். உங்களை சுற்றி என்ன இருந்தாலும்... உங்களுக்கு பிடித்தமான விஷயம் இயற்கையாக இருக்கும். மரங்களிடம் ஆறுதல் தேடும் நபராக நீங்கள் இருக்கலாம். இயற்கை உங்களது நல்ல தோழனாக இருக்கலாம்.

தற்சமயம் நீங்கள் வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கலாம். மாற்றத்திற்காக சிலவற்றை தவிர்ப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதையும் அதன் போக்கில் செல்ல விடுங்கள். நிச்சயம் நீங்கள் வேண்டுவது உங்கள் கை வந்து சேரும். நீங்கள் சரியான பாதையும் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கை அதன் போக்கில் போக விட்டு... நிம்மதியாக அமர்ந்து ரசிக்க துவங்குங்கள்.

ஊதா!

ஊதா!

உங்களிடம் நல்ல கருத்துக்கள் குவிந்து இருக்கும். அமைதியான குணாதிசயம் கொண்டிருப்பீர்கள். மிக எளிமையாக எல்லா விஷயங்களிலும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இதன் மூலம் ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது என்பதை அறியும் திறன் கொண்டிருப்பீர்கள். மக்கள் மற்றும் அவர்களது உணர்வுகளுடன் எளிதாக தொடர்பு கொண்டு அவர்களை புரிந்துக் கொள்வீர்கள். சில சமயம் மன அழுத்தம் மற்றும் சோர்வாக உணர்வீர்கள்.

வாய்ப்புகளை ஈர்த்திழுக்கும் திறன் கொண்டிருப்பீர்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வீட்டு கதவருகே காத்திருக்கும். சிறுசிறு விஷயங்களையும் நன்கு கூர்ந்து கவனிக்கும் பழக்கம் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம், நினைத்தது போலவே நடக்கும்.

நீலம்!

நீலம்!

வாழ்க்கையை முழுதாக அனுபவிக்க விரும்பும் நபர். எப்போதும் சிரித்த முகத்துடன், தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிப்பூட்ட முயற்சிக்கும் நபர். கேலி செய்து, கிண்டல் அடித்து சிரிப்பலைகள் ஏற்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். பார்ட்டி, காதல் என்று கொண்டாட்டம் ஒருபுறமும், எப்போதும் உங்களை சுற்றி உங்களை விரும்பும் நபர்கள் சூழ்ந்திருப்பார்கள்.

மாலை வேலையில்... சிறிதளவு நெருப்பூட்டி... அதை சுற்றி நண்பர்களுடன் உட்கார்ந்து நேரத்தை ரசிக்கும் குணம் கொண்ட நபராக நீங்கள் இருக்கலாம். வாழ்க்கையில் எதையும் சவாலாக எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் வழியில் குறிக்கிடும் எந்த சவாலையும் நீங்கள் ஆழமாக புரிந்துக் கொள்வீர்கள். இதனால், உங்கள் வாழ்வில் அடிக்கடி ஒரு திருப்பம் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Choose a cosmic fairy to know what are you attracting in your life right now?

    This said let’s make this a little more interesting and find out what does your choice of cosmic fairy has in store for you and tell you what are you attracting in your life?
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more