பிறந்த மேனி க்ளீனிங் சர்வீஸ். பட்டையைக் கிளப்பும் பிரிட்டிஷ் நிறுவனம்!

By Staff
Subscribe to Boldsky

நமது ஊர்களில் பெரும்பாலும் அனைவரும் தினமும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போகும் நடுத்தர குடும்பத்தார் நேரம் கிடைக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். அதிகளவு சம்பாதிக்கும் நபர்கள் வீட்டுக்கு ஒரு வேலைக்கார பெண்ணை பணியமர்த்தி தினமும் காலை - மாலை சுத்தம் செய்ய கூறுவார்கள்.

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வாழும் பேச்சுலர் ரூம்கள் பெரும்பாலும் குப்பை மேடு போல தான் இருக்கும். எப்போதாவது ஒரு நாள் அவர்களாக சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

சில டீசண்டான பேச்சுலர்கள் வாரம் ஒரு நாள் மட்டும் அல்லது தங்களுக்கு வேண்டிய பொழுது வேலை ஆட்களை நாள் சம்பளத்துக்கு அழைத்து வீட்டை சுத்தம் செய்துக் கொள்வார்கள்.

இப்படியான வழக்கத்தை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், வெளிநாடுகளில் வேறுவிதமான வழக்கமும் இருக்கிறது. வீட்டில் இருந்துக் கொண்டே ஆன்லைனின் ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் நபர்களிடம் நேரம் புக் செய்து வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு போக கூறுவார்கள்.

இது ஏறத்தாழ டீசண்டான பேச்சுலர்கள் பின்பற்றும் வகையறா என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் தான் வெர்ஷன் 2.O-வை புதியதாக அறிமுகம் செய்துள்ளது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். அது தான் பிறந்த மேனியாக க்ளீனிங் செய்யும் சர்வீஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேச்சரிஸ்ட் க்ளீனர்ஸ்!

நேச்சரிஸ்ட் க்ளீனர்ஸ்!

நேச்சரிஸ்ட் க்ளீனர்ஸ் (Naturist Cleaners) என்பவர்கள் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு பிரத்தியேக ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் நிறுவனம். இவர்கள் வீடு, அலுவலகங்களுக்கு தங்கள் ஊழியர்களை அனுப்பி சுத்தம் செய்து தருவார்கள். நாள், நேரம் முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

உடையுடன் ஊழியர்கள் வந்து வீட்டை சுத்தம் செய்து தர வேண்டும் என்றால் புக்கிங் சார்ஜ் உட்பட ஒரு மணி நேரத்திற்கு 25 யூரோக்கள் செலுத்த வேண்டும். ஆடைகள் இன்றி நிர்வாணமாக வீட்டை சுத்தம் செய்து தர வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 45 யூரோக்கள் செலுத்த வேண்டும்.

க்ளீனிங் சர்வீஸ்!

க்ளீனிங் சர்வீஸ்!

இதில் 45 யூரோக்கள் செலுத்தி நிர்வாண க்ளீனிங் சர்வீஸ் தேர்வு செய்யும் போது, பேச்சுக்கும் அவர்கள் உடை அணிந்திருக்க மாட்டார்கள். கைகளில் கையுறை மற்றும் கால்களில் செருப்பு தவிர வேறு எதையும் அணிய கூடாது என்பது நிறுவனத்தின் கட்டளை.

வீடு சுத்தம் செய்வதில் இருந்து, துணைகளை இஸ்திரி செய்து தருவது வரை எல்லா வேலைகளும் செய்து தருவார்கள். இதில், இந்த நிறுவனம் கூடுதலாக எந்த வயதில், எந்த உடல் வடிவத்திலான பெண்கள் வேலைக்கு வேண்டும் என்ற தேர்வுகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள்.

(நிஜமாவே இது க்ளீனிங் கம்பெனி தானா?)

நிபந்தனைகள்!

நிபந்தனைகள்!

அடடே! இது சுலபமா இருக்கேன்னு யாரும் தப்பா நினைச்சிட கூடாது. இந்த நிறுவனம் உடை அணிந்து, உடை அணியாமல் என்று இரு வகையில் க்ளீனிங் சர்வீஸ்க்கு ஆட்களை அனுப்புகிறது. இதில் உடை அணியாமல் வந்தாலுமே கூட, அவர்களை தொடவோ, புகைப்படங்கள், வீடியோ எடுப்பதற்கோ தடைப் போடப்படுகிறது. இதை நிபந்தனையாக முன்கூட்டியே தங்கள் வாடிக்கையாளர்களிடம் கூறிவிடுகிறார்கள்.

ஊழியர் கருத்து...

ஊழியர் கருத்து...

24 வயதுமிக்க அண்ணா எனும் பெண் கடந்த ஐந்து மாதங்களாக இந்த நேச்சரிஸ்ட் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த வேலை குறித்து அவர் கூறியதாவது...

"நான் இந்த நேச்சரிஸத்திற்கு புதியவள். இது போன்ற வேலையை நான் இதற்கு முன்பு செய்ததில்லை. நான் நியூட் பீச்சுகளுக்கு கூட சென்றதில்லை. தனிமையில் வீட்டில் இப்படியான நிலையில் இருந்ததுடன் சரி. நிர்வாணமாக தனிமையில் இருப்பது எனக்கு பதட்டமாக இல்லை. நான் இந்த வேலையை விரும்பி தான் செய்கிறேன். என் வீட்டில் என்றால் சரி... ஆனால் வேறொருவர் வீட்டில் எப்படி என்ற அசௌகரியம் மட்டும் மனதில் இருந்தது."

முதல் முறை...

முதல் முறை...

"முதல் முறையாக இந்த நிறுவனத்தின் சார்பாக வேலைக்கு சென்றபோது தான் பதட்டம் அதிகமாக இருந்தது. யார் வந்து கதவை திறப்பார்கள், எனக்கு இந்த வேலை பாதுகாப்பாக இருக்குமா என்று அஞ்சினேன்.

ஆனால், வாடிக்கையாளர் கனிவாக நடந்துக் கொண்டார். நான் சௌகரியமாக இருக்கிறேனா என்று கேட்டறிந்துக் கொண்டார். இது ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது" என்று கூறி இருக்கிறார் அண்ணா

பெரும்பாலனவர்கள்...

பெரும்பாலனவர்கள்...

வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை இந்த நிறுவனத்தின் சார்பாக நான் பகுதி நேர வேலையாக க்ளீனிங் சர்வீஸ் சென்று வருகிறேன். இதுவரை நான் ஒரே ஒரு முறை மட்டும் தான் உடை அணிந்த க்ளீனிங் சர்வீஸ் சென்று வந்துள்ளேன். இதர சர்வீஸ் எல்லாமே நிர்வாணமாக அழைத்தவர்கள் தான்.

நிர்வாண க்ளீன் சர்வீஸ் வேண்டி அழைப்பவர்கள் பெரும்பாலும் தனியாக வாழும் சிங்கிள் ஆண்களாக தான் இருப்பார்கள். இருபது முதல் ஐம்பது வயதிலான ஆண்களை இதுநாள் வரை நான் இந்த சர்வீஸ் போது சந்தித்துள்ளேன். குறிப்பாக இவர்கள் அனைவரும் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

யாருக்கும் தெரியாது...

யாருக்கும் தெரியாது...

அண்ணா இந்த க்ளீனிங் சர்வீஸ் வேலையை பகுதி நேரமாக தான் செய்து வருகிறார். அவரது முழுநேர வேலை வேறு. அண்ணாவின் உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் இவர் இப்படி ஒரு வேலை பார்ப்பது தெரியாது என்கிறார். நெருங்கிய சில தோழிகளுக்கு மட்டுமே அண்ணா இந்த வேலைக்கு சென்று வருவது தெரியும். அவர்களும் நெகட்டிவாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்கிறார் அண்ணா.

இது 'அது' அல்ல...

இது 'அது' அல்ல...

சிலர் இந்த க்ளீனிங் சர்வீஸை தவறானதாக காண்கிறார்கள். ஆனால், இதில் தவறாக எதுவுமே இல்லை. இணையத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் வரை தவறாக நடந்துக் கொள்ள கூடாது. புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.

சுத்தம் செய்ய வரும் ஊழியர்களை பேச்சுவாக்கில் கூட தொட அனுமதி இல்லை என நிறுவனம் கண்டிப்புடன் கூறி வருகிறது. இங்கே வேலைக்கு வரும் பெண்கள் பாதுகாப்புடன் தான் இருக்கிறார்கள். இந்த நிறுவனம் பெண்களுக்கான பாதுக்காப்புக்கு தான் முன்னுரிமை அளிக்கிறது என்று அண்ணா தெரிவித்துள்ளார்.

அனுபவம் வாய்ந்தவர்கள்!

அனுபவம் வாய்ந்தவர்கள்!

நேச்சரிஸ்ட் க்ளீனர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண்கள் சுத்தம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். சிறப்பாக வேலை செய்யக் கூடியவர்கள். இங்கே பணிபுரியும் பெண்கள் யாரும் தவறாக நடந்துக் கொள்பவர்கள் இல்லை. ஆடை என்பது அளிக்கும் சர்வீஸில் மட்டுமே வேறுபடுகிறது.

மேலும், இந்த நிறுவனத்தில் பெண்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.

லாரா!

லாரா!

இந்த நிறுவனத்தை துவங்கியவர் லாரா என்பவராவர். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களது பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியமானது.

கையுறை, செருப்பு தவிர வேறு எந்த உடையும் நிர்வாண க்ளீனிங் சர்வீஸ் செய்யும் பெண்கள் அணிய மாட்டார்கள். அதே போல அதிக கெமிக்கல் திறன் கொண்ட பொருட்களை அவர்கள் கையாள மாட்டார்கள்.

அவர்களது ஆரோக்கியம் சார்ந்த கவனமும், அக்கறையும் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் லாரா.

புக்கிங்!

புக்கிங்!

கடைசி நேரத்தில் அழைத்து புக் செய்பவர்களை நாங்கள் ஏற்பது இல்லை. எங்கள் நிபந்தனைகளுக்கு உட்படும் அழைப்புகளை மட்டுமே நாங்கள் புக் செய்கிறோம். எங்கள் நிறுவனத்தை அணுகும் பெரும்பாலானவர்கள் நிர்வாண சேவையையே எதிர்பார்க்கிறார்கள்.

நாங்கள் இதை ஒரு ஆப்ஷனாக மட்டுமே வைத்துள்ளோம். உடை அணிந்த சர்வீஸ் கேட்பவரும் இருக்கிறார்கள் என்று லாரா மேலும் மெட்ரோ.யு.கே தளத்திற்கு தான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

All Images Source: Naturist Cleaners

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Naked Cleaners: British Company Offers Clothes Free Servants for 45 Euros!

    Naturist Cleaners is a professional cleaning service provider with naturist believes. For a nude cleaning service provided by one of our nude cleaners: the rate is £45 per hour. Each booking is also subject to a £30 booking fee per appointment. The minimum booking time for the nude cleaning service is 1 hour.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more