பெண் உருவம் எப்படி இருக்கும் என்றே தெரியாமல், வாழ்ந்து, இறந்த உலகின் ஒரே மனிதன்!

Subscribe to Boldsky

தான் இருக்கும் இடத்திற்கு வெளியே, உலகின் அந்த புறம் ஏதோ நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராத வரை யார் ஒருவரும் தான் அடைப்பட்டிருப்பது போல உணர மாட்டார்கள். நாம் கண்டறியாத வரை அதுபோன்ற ஒரு பொருளோ, உயிரோ இல்லை என்று தான் கருதி வருவோம்.

Mihailo Tolotos is a Man, Who Never Seen a Single Woman in His Lifetime!

அப்படியான ஒரு நபர் தான் கிரேக்க மரபுவழி துறவி மிஹைலோ டோலோடோஸ். இவர் ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறந்தவர் என்று கருதிட வேண்டாம். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து, மறைந்தவர் தான் இந்த மிஹைலோ டோலோடோஸ்.

1938ம் ஆண்டு தனது 82வது அகவையில் இவர் மரணித்ததாக அறியப்படுகிறது. ஆச்சரியம் என்னவெனில், இவர் இறக்கும் வரை ஒரு பெண்ணை கூட கண்டதில்லையாம். பெண் என்பவள் எப்படி இருப்பாள், அவர் உருவம் எப்படி இருக்கும் என்பதை கூட இவர் அறிந்ததில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிது!

அரிது!

மிஹைலோ டோலோடோஸ் குறித்த கதைகள் பெரிதாக எங்கும் எழுதப்படவில்லை, யாராலும் பேசப்படவில்லை. பெரிதாக இணையங்களிலும் கூட டோலோடோஸ் குறித்த பதிவுகள் இல்லை. ஏன், புத்தகங்கள், நாளேடுகளிலும் கூட இவர் குறித்த பெரிய கட்டுரைகள் ஏதும் இடம்பெற்றதில்லை. இங்கே இந்த கட்டுரையில் நாம் காணவிருப்பது, ஆங்காங்கே மிஹைலோ டோலோடோஸ் குறித்து கூறப்படும் தகவல்கள் தான்.

1856!

1856!

மிஹைலோ டோலோடோஸ் பிறந்தது 1856ல். இவர் பிறந்த நான்கே மணி நேரத்தில் இவரது அம்மா இறந்துவிட்டார். இவரை அதன் பின் தத்தேடுக்கவோ, பராமரித்து வளர்க்கவோ யாரும் முன்வரவில்லை. மவுண்ட் அதோஸ் மலை உச்சியில் இருந்த மடத்தின் படிகளில் இவர் கேட்பாரற்று கிடந்தார்.

துறவிகள்!

துறவிகள்!

பிறகு, அந்த மடமும், மடத்தில் இருந்து துறவிகளும் மிஹைலோ டோலோடோஸை தத்தெடுத்துக் கொண்டனர். அந்த மடத்தின் நான்கு சுவர்களுக்குள் தான் மிஹைலோ டோலோடோஸ்-க்கு உணவு கிடைத்தது, கல்வி கிடைத்தது. அதுவே மிஹைலோ டோலோடோஸின் உலகமாக மாறியது.

தடை!

தடை!

மவுண்ட் அதோஸ் மலையில் 1045-60களில் இருந்தே பெண்கள் இருப்பதற்கு தடை இருந்தது. இந்த சட்டம் நீண்ட காலமாக இருந்தது. மேலும், டோலோடோசிற்கு வெளியுலகுடன் எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை. நாற்பது மைல் பரப்பளவு கொண்ட அதோஸ் மலையில் ஏறத்தாழ இருபது மடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எந்த மடத்திலும் பெண்கள் வர அனுமதி இல்லை. அவர்கள் காலடி கூட அந்த சுற்று வட்டாரத்தில் பதிந்தது இல்லையாம்.

Image @ Flickr / World Public Forum Dialogue of Civilizations

விலங்குகளும் கூட...

விலங்குகளும் கூட...

பெண்கள் மட்டுமின்றில்லை. எந்த ஒரு விலங்கின் பெண்பாலும் அந்த இடத்தில் நுழைய அனுமதி இல்லை என்று அறியபப்டுகிறது. பெண் பாலினம் தங்கள் துறவிற்கும், ஆன்மீகத்திற்கும் உகந்தது அல்ல என்று அவர்கள் கருதி வந்தனர். டோலோடோஸ் இருந்த மடத்தில் பெண்கள் வர அனுமதியும் இல்லை. இந்த காரணத்தால் தனது வாழ்நாளில் ஒரு பெண்ணை கூட பார்க்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Image @ Flickr / World Public Forum Dialogue of Civilizations

1983

1983

இந்த காரணத்தால் 1983ம் ஆண்டில் தனது 82வது அகவையில் மிஹைலோ டோல்டோடோஸ் மரணம் அடையும் வரை ஒரு பெண்ணை கூட அவர் கண்டிருக்கவில்லை. ஒரு பெண் என்பவள் எப்படி இருப்பாள், அவளது உருவம், உடல் அமைப்பு, அவளது கடமைகள், உறவு என எதையும் அறிந்ததில்லை மிஹைலோ டோல்டோடோஸ்.

எங்கே இருக்கிறது?

எங்கே இருக்கிறது?

மவுண்ட் அதோஸ் கிரேக்க நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த பகுதி கிரேக்க குடியரசின் தன்னாட்சிக்கு கீழ் இருக்கிறது. இங்கே மொத்தமே இருபது மடங்கள் தான் இருக்கின்றன. அதோஸ் மலையை புனித மலை என்றும் அழைக்கிறார்கள்.

 பண்டையக் காலம் முதல்...

பண்டையக் காலம் முதல்...

பண்டையக் காலம் முதலே அந்த பகுதியை சுற்றி இருக்கும் பல நாடுகளை சேர்ந்த துறவிகள் இங்கே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ருமேனியா, மால்டோவா, ஜோர்ஜியா, பல்கேரியா, செர்பியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை சேர்ந்த துறவிகள் இங்கே அதிகம் காணப்படுகிறார்கள். அதோஸ் மலையை உலக பாரம்பரிய தளமாகவும் அறிவித்துள்ளனர்.

அனுமதி இல்லை!

அனுமதி இல்லை!

இங்கே வெளி மக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. அவர்களாக அழைக்கும் வரை, கேட்கும் வரை யாரும் உள்ளே செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது. 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பகுதியில் 1811 பேர் வாழ்ந்து வருவதாக அறியப்பட்டது.

உலகில் இப்படியும் ஒரு இடம் இருக்கிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Image @ Flickr / World Public Forum Dialogue of Civilizations

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Mihailo Tolotos is a Man, Who Never Seen a Single Woman in His Lifetime!

    Mihailo Tolotos is a Man, Who Never Seen a Single Woman in His Lifetime!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more