For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சீன தற்காப்பு கலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

  |

  உலகில் பழமையான தற்காப்பு கலை அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதில் முக்கியமான சாவ்லின் எனப்படுகிற சீனா நாட்டின் தற்காப்பு கலையாகும். ப்ரூஸ்லியிலிருந்து குங்க்ஃபூ பாண்டா வரையிலும் இந்த தற்காப்பு கலையை வளர்த்து விட்டதில் அதாவது மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்ததில் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

  இன்னும் சொல்லப்போனால் இது தற்காப்பு கலை மட்டுமல்ல உலகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்ககூடியதாகவும் இருக்கிறது என்கிறார்கள்.இது தற்போது சீன மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது என்றாலும் இதனை கண்டுபிடித்தது, ஆரம்பித்தது சீனர் அல்ல இந்தியர் என்று சொல்லப்படுகிறது.

  இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த தற்காப்பு கலை பயின்றவர்கள் செய்கின்ற சில அசாத்தியமான செயல்களைப் பற்றியும் விரிவாக இதில் பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆரம்பம் :

  ஆரம்பம் :

  இந்த கலையை தோற்றுவித்தது பட்டுவா அல்லது புத்தபத்ரா என்பவர் தான்.இந்தியரான இவர் கிபி 464 ஆம் ஆண்டு சீனாவிற்கு சென்றிருக்கிறார். புத்த மதத்தை பரப்பும் நோக்கில் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

  பல காலங்கள் அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அந்த கலையை கற்றுக் கொடுத்தார். புத்த மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் ஹினாயானா பள்ளியில் படிப்பவர்கள் புத்த துறவிகள் ஆவர் இந்த பள்ளியில் படிப்பது என்பது இவர்களுக்கே மிகவும் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

  இவருக்குப் பிறகு தான் போதி தர்மர் சீனாவிற்கு வருகை தந்திருக்கிறார்.

  Image Courtesy

  சண்டை :

  சண்டை :

  சாவ்லின் டெம்பிள் என்று சொன்னதுமே எல்லாருக்கும் சண்டையிடுவது தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆரம்பித்தில் இங்கு சண்டைகளை ஊக்குவிக்கவில்லை, அதோடு புத்த மதம் பின்பற்றுவோரிடத்தில் சாவ்லின் பள்ளியில் தான் சண்டைகள் குறித்து பயிற்றுவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது அதுவும் தவறானது.

  Image Courtesy

  சவோலின்

  சவோலின்

  இந்த சாவ்லின் டெம்பிள் ஆரம்பிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே புத்த கோவில்களில், வழிபாட்டுத்தளங்களில் தற்காப்பு கலையை பயிற்றுவிக்கவும், ஆயுதங்களை உருவாக்கி பராமரிக்கவும் துவங்கிவிட்டார்கள்.

  முதலில் அமைதியாக பாடங்களை கற்கும் இடமாக மட்டுமே இருந்திருக்கிறது. போதி தர்மரின் வருகைக்குப் பின்னர் தான் இங்கேயும் தீவிரமாக தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

  Image Courtesy

  பிற நாடுகளில் :

  பிற நாடுகளில் :

  சீனாவைத் தவிர கொரியாவில் இருக்கக்கூடிய புத்த துறவிகள் பூல் க்யோ மு சோல் என்ற தற்காப்பு கலையை பின்பற்றுகிறார்கள். இவர்கள் நாட்டில் அவசர காலம் ஏற்பட்ட போது எதிரி நாட்டினருடன் சண்டையிட அனுமதிக்கப்பட்டார்கள். ஜப்பானில் சோஹை அல்லது துறவிப் படை என்றே ஒரு படை இருந்தது.

  இவர்கள் எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்கள்.

  Image Courtesy

  குங்பூ :

  குங்பூ :

  சீனாவில் எல்லா தற்காப்பு பயிற்சியும் ஷாவ்லினிலிருந்து தான் வந்திருக்கிறது. அங்கிருந்து பிரிந்து சென்றவை தான் மற்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் வரலாறோ வேறு மாதிரியாக நமக்கு உணர்த்துகிறது.

  சீனாவில் கிபி 618 முதல் 907 வரை ஆட்சியில் இருந்த டங் அரசாட்சியை நிறுவ இந்த துறவிகள் தான் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.அதன் போது கூட தனித்தன்மை வாய்ந்த சண்டை பயிற்சிகளையோ நுணுக்கங்களையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை.

  சவோலின் மடம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே குங்பூ மக்கள் மத்தியில் பரவலாகியிருந்தது. இது கிமு 800 முதல் 500 வரையிலான காலகட்டத்தில் பரவியிருக்கும் எனப்படுகிறது.

  Image Courtesy

  ஜெட் லி :

  ஜெட் லி :

  சீனாவில் மிகப் பிரபலமான தற்காப்பு கலை பயிற்சி இது1982 ஆம் ஆண்டு ஜெட் லி நடிப்பில் வெளியான சாவ்லின் டெம்பிள் திரைப்படத்திலிருந்து இன்றைய குங்பூ பாண்டா வரை இந்த சாவ்லின் டெம்பிளின் பெயரை மக்கள் மத்தியில் சீனாவையும் கடந்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

  1928 ஆம் ஆண்டு இந்த மடத்தில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. இதில் ஏராளமான வரலாற்று நூல்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.

  இரண்டு மடங்கள் :

  இரண்டு மடங்கள் :

  இந்த சவோலின் டெம்பிள் இரண்டு இடங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது எல்லாருக்கும் தெரிந்தது வடக்கு சவோலின் டெம்பிள் தான் ஆனால் தெற்கு சாவ்லின் டெம்பிளும் இருந்ததாக சொல்கிறார்கள்.

  இந்த தெற்கு கோவில் ஃபுஜியன் மாகாணத்தில் இருந்தது என்கிறார்கள் ஆனால் இதற்கு வரலாற்றுப் பூர்வ சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

  Image Courtesy

   ஏழு பேர் :

  ஏழு பேர் :

  1928 ஆம் ஆண்டு வார்லார்ட் ஷி யுவ்சன் என்பவர் இந்த சாவ்லின் மடத்தில் தீ வைத்து விட்டார். அதில் சாவ்லின் டெம்பிள் பலத்த சேதமடைந்தது. அரை நூற்றாண்டு வரை சிதிலமடைந்து இடிபாடுகளுடன் தான் இருந்தது. அந்த நேரத்தில் ஏழு துறவிகள் மட்டுமே உயிருடன் தப்பித்தனர். அவர்களில் மூன்று பேர் தான் குங்பூ தெரிந்தவர்கள்.

  Image Courtesy

  போதி தர்மர் :

  போதி தர்மர் :

  மிகவும் கடினமான பாதைகளை கொண்ட இந்தியா சீனா வழியில் பயணித்து புத்த மதத்தை பரப்புவதற்காக போதி தர்மர் சீனாவிற்கு வந்திருந்தார். சீனாவின் பல இடங்களுக்கு பயணித்தவர் இறுதியாக சாவ்லின் டெம்பிளுக்கு வருகிறார். அங்கேயே தங்கி தற்காப்பு கலை பயிற்சி அளிக்கிறார்.

  பின்னர் அங்கிருந்த படியே ஜென் புத்தமத பள்ளியை ஆரம்பிக்கிறார்.

  Image Courtesy

  சீனா மட்டுமா? :

  சீனா மட்டுமா? :

  சவோலின் டெம்பிளில் சீனா நாட்டில் வளர்ந்த தற்காப்பு கலைகளை மட்டுமல்லாது மனதளவில் கட்டுப்படுத்த கூட பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. இங்கே மென்மையான மற்றும் கடுமையான பயிற்சி என இரண்டு வகையிலான பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

  இவை தான் குங்பூவின் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.

  Image Courtesy

  வரலாறு :

  வரலாறு :

  சீனாவில் எல்லாவிதமான தற்காப்பு கலையும் சாவ்லின் டெம்பிளிலிருந்து தான் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல அவற்றை நிரூபிக்கும் வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. ஆனால் சாவ்லின் டெம்பிள் ஆரம்பிப்பதற்கு முன்னரே தற்காப்பு கலை தோன்றியிருந்தாலும் ஒரு குழுவாகவோ அமைப்பாகவோ அதனை நிறுவவில்லை.

  Image Courtesy

  உடல் :

  உடல் :

  மனதில் நீங்கள் உறுதியாக நம்புகிற விஷயங்களை நம் உடலால் செய்ய முடியும். நம் உடல் அதற்கு கட்டுப்படும் ஆனால் அதற்கு தீவிரமான பயிற்சியும் முயற்சியும் அவசியம்.

  இதில் வெற்றிப் பெற்றவர்கள் தான் சாவ்லின் டெம்பிளில் இருக்கும் துறவிகள். இங்கிருப்பவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

  Image Courtesy

  தயார் :

  தயார் :

  இவர்கள் மனதளவிலும் உடலளவிலும் எல்லாவற்றிற்கும் தயார் நிலையில் இருப்பார்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் இவர்களிடத்தில் அதிகம் இருக்கிறது. எத்தகைய டெம்ப்ரேச்சரையும் தாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது மனவலிமை மிகவும் உயர்ந்ததாக இருக்கும்.

  Image Courtesy

  வலி :

  வலி :

  லேசான தலைவலிக்கே அரைநாள் விடுப்பு எடுத்து தூங்கி ரெஸ்ட் எடுக்கும் நம்மவர்கள் எல்லாம் இவர்களுக்கு தூசுக்கு சமம். இந்த துறவிகள் மிக கடுமையான வலியைக் கூட தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

  ஒர் ஆயுதத்தையே தன் உடலால் வளைக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கிறது. இதே நாம் செய்தால் கடுமையான வலியுடன் காயமும் உண்டாகும்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Interesting Facts About Shaolin Temple

  Interesting Facts About Shaolin Temple
  Story first published: Friday, April 13, 2018, 14:10 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more