2 நிமஷம் இருந்தா இப்படி வாங்க, இதுவரை நீங்க எப்படி எல்லாம் ஏமார்ந்தீங்கன்னு பார்க்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

லண்டனை பூர்வீகமாக கொண்டுள்ள ஸ்டீவ் கட்ஸ் எனும் கிராபிக் டிசைனர் மற்றும் அனிமேட்டர் இன்றைய சமூகத்தில் நாம் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறோம், எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை தனது கலை திறன் மூலம் வெளிப்படுத்தியுள்ள விளக்கப்படங்கள் இவை.

இந்த படங்கள் ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க வைக்கும். நாம் செய்துக் கொண்டிருக்கும் தவறு என்ன? நாம் ஒரு வியாபாரிகளின் சந்தையில் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம், நமது மாதாந்திர சம்பளம், எப்படி யாரோ ஒருவனின் லாப பணமாக மாறுகிறது என்று பலவற்றை நாம் இந்த விளக்கப் படங்கள் மூலமாக அறிந்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

உங்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும், உலகின் வருடாந்திர லாபப் பணத்தில் 80%திற்கும் மேலான பணமானது, உலகின் வெறும் 1% மக்களை சென்றடைகிறது. அதை தான் விளக்கிக் காண்பிக்கிறது இந்த படம். இரத்தம் சொட்ட உழைக்கிறது பெரும் கூட்டம், கொழுப்பை நிறைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கிறது ஒரு சிறு முதலைப் பண்ணை.

#2

#2

நமது உடலில் ஆங்காங்கே துளையிட்டு இரத்தம் உறிஞ்சினால் எப்படி இருக்கும்? ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் பற்களை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தால் எப்படி உணர்வீர்கள்..? உங்கள் கை, கால்களை முறித்து.. உங்களுக்குள் புற்றுநோய் செலுத்தினால்...? அப்படியான நிலையை தான் நாம் உலகில் ஏற்படுத்தி வருகிறோம். மனிதர் உன்னில் வாழ்கிறான் என்பதை அறிந்தால் உலகம் வருந்த தானே செய்யும்.

#3

#3

எதிர்க் காலத்தில் சோம்பி வாழ்க்கை சாத்தியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சோம்பி என்பது பேய் போன்று நாம் கருதுகிறோம். ஆனால், பேயோ, நோயோ அல்ல... போதை. சமீபத்தில் ப்ளோரிடாவில் பரவிய ஃப்ளக்காவின் தாக்கத்தை கண்டிருந்தால்.. உங்களுக்கு இது நன்கு புரியும். ஆனால், ஃப்ளக்கா போன்றவை மட்டுமின்றி, ஸ்மார்ட் போன் ஆடம்பரம் என நாம் பின்பற்றும் அனைத்தும் கொடிய போதை என்பதை நான் உணர்தல் வேண்டும்.

#4

#4

நாள், கிழமை கண்டு ஒரு விவசாயி அச்சப்பட்டது இல்லை. எந்த முகநூல் பதிவிலும், கல்வெட்டிலும் விவசாயி, நெசவாளி திங்களை கண்டு அச்சம் கொண்டதாக தகவலே இல்லை. அவனுக்கு மன அழுத்தம் இருந்ததில்லை, டார்கெட் கண்டதில்லை. உழைத்து முடித்த பிறகு உற்றார், உறவினருடன் மீட்டிங் வைத்து பேசி ரிலாக்ஸ் செய்தான் அவன். ஆனால், நமக்கு திங்கள் என்றால் அச்சம், மீட்டிங் எப்போது, என்ன கேள்வி கேட்பார்கள், அதற்கு என்ன பதில் கூற வேண்டும் என்று திங்களை கண்டு அஞ்சுகிறோம்.

#5

#5

ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு ஊடகம் வைத்திருக்கிறது. நடுநிலை என்ற பெயரில் உதிக்கும் ஊடகங்களும் எம்.என்.சி பின்புலத்தில் தான் இயங்குகிறது. அந்த எம்.என்.சி ஏதோ ஒரு கட்சியின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும்.

எது முக்கியம், எது சமூகத்திற்கு தேவை என்பதை எந்த ஊடகமும் அளிப்பதில்லை,சரியான நேரத்தில் தவறான தகவலை அளிக்க வேண்டும் என்றால் முண்டியடித்து ஓடுவார்கள். இராணுவ வீரனின் மரணமா? ப்ரியா வாரியாரின் புதிய வீடியோவா என்றால்... டிரெண்ட், வைரல் என்பதை முன்னிறுத்தி ப்ரியா வாரியாரை தான் முன்னிறுத்தும் ஊடகம். கண்டதை கழிக்கும் ஊடகத்தை கண்டு வியக்கும் கூட்டம் நாம்.

#6

#6

உட்கார்ந்தே இடத்திலேயே எல்லாம் வந்து சேரும்... நீங்கள் எங்கேயும் வெளியே சென்று அலைய வேண்டாம் என்ற வாசங்கள் காரணமாக நாம் உட்கார்ந்த இடத்தில் வந்து சேர்ந்தவை, பார்சல், உணவுகள், கருவிகள் மட்டுமல்ல, உடல் பருமன், கருவளம் குறைவு, முடி உதிர்தல் மற்றும் பல நோய்கள். உட்கார்ந்து கொண்டே வாழ்வது தான் உலகின் பெரிய ஊனம் என்று எப்போது நாம் அறிவோம்?

#7

#7

இன்றைய மக்களை சமூக ஊடகங்கள் தான் சங்கிலியிட்டு இழுத்து செல்கிறது. நான் எங்கே செல்ல வேண்டும் என்பதில் இருந்து, எங்கே இருக்கிறேன் என்பதை ஊரறிய பதிவிடும் வரையில்... மனிதனை ஸ்மார்ட் போன்களே முடிவு செய்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த உலகில் ஆன்ராய்டு, ஐ.ஓ.எஸ் என்று இரு சாதிகளும், ஜி.பி பிரிவுகள் மட்டுமே இருக்கும். அன்று ரோபோக்கள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்.

#8

#8

ஒரு மனிதனின் மகிழ்ச்சியை அளிப்பதும், அழிப்பதும் யாரோ ஒருவனின் கமெண்டு தான். நான் எந்நிலையில் இருக்கிறேன் என்பதை நண்பர்கள் அறியவே நாம் படங்களை பகிர்கிறோம். நாம் சந்தோசமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு யாரோ ஒருவன் ஹாஹா ஸ்மைலி போட்டுவிட்டால், அந்த நாளின் மகிழ்ச்சியை நாம் முற்றிலும் இழந்துவிடுவோம். அவன் ஏன் அப்படி போட்டான்.. என்று யோசித்து கடைசியில், அதற்கு பழிவாங்க அவன் படங்கள் அனைத்திற்கும் ஹாஹா ஸ்மைலி போட்டு தீர்ப்போம். போதா குறைக்கு கமெண்ட் செக்ஷனில் போரே நடக்கும்.

#9

#9

மணல் திருடவும், மலைகளை உடைக்கவும் யார் இவர்களுக்கு அனுமதி அளித்தனர். ஒரு ஆற்றில் இருந்து கோடிக்கணக்கான லிட்டரை யாரோ ஒரு நிறுவனத்திற்கு அவனது தனி லாபத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க யார் அரசுக்கு அனுமதி அளித்தனர். இயற்கை வளங்கள் மனிதர்களுக்கு மட்டும் தான் சொந்தமா? உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதா? இந்த தவறுகள் எப்போது, யார் ஆரம்பித்து வைத்தது என்று அறியாத போதிலும், இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

#10

#10

நாம் எங்கே செல்கிறோம், எதற்காக சம்பாதிக்கிறோம் என்று நாம் என்றாவது யோசித்து உண்டா? கல்வி கடனுக்காக வேலைக்கு செல்கிறேன், பர்சனல் லோன் அடைக்க, அதிக ஊதியம் பெற வேறு நிறுவனத்திற்கு செல்கிறோம். பிறகு, ஹவுசிங் லோன், கார் லோன்.. மீண்டும் வேறொரு நிறுவனம்.

ஐம்பது வயதை எட்டும் போது கடனுடன் சேர்ந்து வாழ்க்கையும் முடிந்துவிடும். பிறகு எதற்கானது இந்த வாழ்க்கை. நாளைக்கான கடனை அடைக்க இன்று ஓடுவது அல்ல வாழ்க்கை. இன்றைய நாளை, இன்றைய பொழுதை நாளைய வரலாறாக மாற்றவே வாழ்க்கை.

#11

#11

மூளை என்பது சிந்திக்க என்பதை மறந்து, சந்தைக்கு விட்டுவிட்டோம் (விற்றுவிட்டோம்) நாம். பண்டிகை கால சலுகை, விழா கால சலுகை, க்ளோசிங் சேல், இயர் எண்ட் சேல் என்று சலுகை விலை என்ற ஏமாற்ற வலைவிரித்து நமது ஆசைகளை அதிகரித்து, பணத்தை அபகரிக்கிறது ஒரு பெரும் கூட்டம். அதற்கு பெயர் வியாபார யுக்தி என்று வைத்துள்ளது அந்த கூட்டம்.

#12

#12

கண்களுக்கு முன்னாள் நாம் சேமிக்க வேண்டிய நினைவுகள் பலவிருக்க, ஏதோ வீடியோவை காத்திருந்த பார்ப்பது தான் வாழ்க்கை என்று நினைத்திருக்கிறோம். நமது வாழ்க்கையும் இப்படியாக தான் ஆங்காங்கே நின்று, கோளாறாகி மீண்டும் ரீ-பிரெஷ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தி ஓட்டக் கூடாது.

#13

#13

ஆஃபர் என்ற ஒரு வார்த்தை போதும், நம்மை முட்டாளாக்கிவிட. அவர்கள் ஆஃபர் அறிவிக்கும் முன்னர் அந்த பொருளின், உடையின் விலை எவ்வளவு இருந்தது என்று நாம் உற்று நோக்கியிருந்தால். அவன், ஒரு ரூபாய் கூட நமக்கு ஆஃபர் அளிக்கவில்லை. ஆப்பு மட்டமே அளிக்கிறான் என்பதை உணர்ந்திருக்க முடியும்.

#14

#14

இன்னும் நாம் உலகில் அழிந்தவை டைனோசர் மட்டுமே என்று கருதி வருகிறோம். வீட்டு வாசல் மணலில் இருந்த மண்புழு, மரங்களில் குடியிருந்த சிட்டுக்குருவி, புற்களில், புதர்களில் பறந்துக் கொண்டிருந்த வெட்டுக்கிளி, பூக்களில் ஊர்ந்துக் கொண்டிருந்த பொன்வண்டு என இயற்கையோடு ஒட்டி வாழ்ந்துக் கொண்டிருந்த பல அழகிய, அற்புதமான பூச்சிகள், உயிரினத்தை நாம் அழித்துவிட்டு.... இப்படியாக பச்சை நிறம் பூசி போலி முகத்திரையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

#15

#15

நாம் சிறு வயதில் படித்த ஆட்டு மந்தை கதைக்கும், இன்று நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன் யுகத்திற்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் வேண்டாம்.. ஒரே ஒரு வித்தியாசம் நம்மால் கூற முடியுமா? நம் முன்ன இருப்பவன், அருகே உட்கார்ந்திருப்பவன் என்ன தவறு செய்தாலும், தவறி செய்தாலும் அதை நாம் செய்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர, நம் வாழ்க்கை என்ன? நமக்கு என்ன தேவை என்று அறிந்து வாழவில்லை.

#16

#16

முன்பு நமக்கு ஆடி மாத சலுகை இருந்தது. இப்போது நவம்பர் மாத சலுகை. மேற்கத்திய நாடுகலில் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பண்டிகையோட்டி அவர்களுக்கு சலுகை விற்பனை இருந்தது. ஆனால், நமக்கு நவம்பரில் துவங்கினால்.. அப்படியே புத்தாண்டு, பொங்கல்., சித்திரை ஒன்னு, அடி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என்று வருடம் முழுக்கு சலுகைகள் தான், பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும். உண்மை என்ன தெரியுமா? நாம் இன்று வாங்கும் பொருட்களில் 50% மேல், நமக்கு தேவையற்றது. மற்றவர் நம்மிடம் பார்க்க வேண்டும் என்று வாங்கி பயன்படுத்தும் பொருட்கள்.

All Image Credit:stevecutts

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Excellent Illustrations Shows How Our Society Lives in Today World!

Excellent Illustrations Shows How Our Society Lives in Today World!