டைம் பாஸ் பண்ணலாம் வாங்க! ஜப்பானியர்களோட விந்தையான 20 கண்டுபிடிப்புகள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஜப்பானியர்கள் எப்போதுமே சுறுசுறுப்பு, உழைப்புக்கும் பெயர் போனவர்கள். அவர்களது உழைப்ப்பு மிகவும் கடினமானது. அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு விவசாயமே செய்ய முடியாது என்ற நிலை வந்த போது கப்பலில் விவசாயம் செய்து சாத்தித்தவர்கள் ஜப்பானியர்கள்.

வருடா, வருடம் அதிக எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் இடமும் ஜப்பான் தான் என்று உலக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட சுற்றிலும் எரிமலைகளுக்கு நடுவே அமைந்திருக்கிறதாம் ஜப்பான்.

உழைப்புக்கும், தரத்திற்கும் பெயர் போன ஜப்பானியர்கள், கொஞ்சம் விந்தையான, விசித்திரமான கண்டுபிடிப்புகளும் கண்டுள்ளனர். அதிநவீன ரோபாட்டுகள் கண்டிபிடித்த இவர்களா? இதை எல்லாம் கண்டுப்பிடித்துள்ளனர் என்ற வியப்பு நிச்சயம் உங்களுக்கு வரலாம்.

சரி! வாங்க கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு போகலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

இதழ்களுக்கு சரியாக சாயம் பூச எல்லா பெண்களுக்கும் தேவைப்படும் ஒரு அரிய வகை சாதம் இந்த லிப்ஸ்டிக் கவர். இதை முகத்தில் அணிந்துக் கொண்டு லிப்ஸ்டிக் எடுத்து கண்டமேனிக்கு அப்பிக் கொண்டாலும் கூட, சரியாக இதழ்களை மட்டும் கலர் செய்து, உங்கள் இதழ்களை பளிச்சிட ஜொலிக்க செய்யும் இந்த லிப்ஸ்டிக் கவர்.

துடப்பம்!

துடப்பம்!

குனிந்து, நிமிர்ந்து வீடு பேருக்கு கஷ்டமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்... உங்களுக்கெனவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த செருப்பு துடப்பம். இதை நீங்கள் நடந்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் எளிமையாக வீடு கூட்ட உதவும். ஒரு காலில் கூட்டலாம், மற்றொரு காலில் குப்பையை எளிமையாக எடுத்து போடலாம். எப்பூடி....

உணவு கருவி...

உணவு கருவி...

பெரும்பாலும் அம்மா, மனைவி, சகோதரி உணவு சமைக்கும் போது அதில், மசாலா பொருட்களுடன் அவர்களது முடியும் நீளமாக காணப்படும். அதை தவிர்க்கவும், சாப்பிடும் போது உங்கள் முடியே உங்கள் உணவில் விழுந்திடாமல் இருக்கவும் இந்த உணவுக் கருவி.

நின்னுக்கிட்டே தூங்கலாம்...

நின்னுக்கிட்டே தூங்கலாம்...

இது பெரும்பாலும் தினமும் ஐடி வேலைக்கு மெட்ரோ, லோக்கல் ரயில் மற்றும் பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்ட நின்னுக்கிட்டே தூங்க உதவும் கருவி. எப்படியும் பேருந்தில் ஐம்பது பேருக்கு மேல் அமர முடியாது. மெட்ரோவில் இருக்கை கிடைப்பது எல்லாம் அதிகாலை பயணிக்கும் நபர்களுக்கு மட்டுமே சாத்தியம். எனவே, இதை நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி பயன் பெறலாம்.

துணி அழுக்கே ஆகாது...

துணி அழுக்கே ஆகாது...

பெரும்பாலும் தவழும் வயதில் இருக்கும் குழந்தைகளின் துணி அதிகம் அழுக்காகும். ஆனால், இந்த உடையை நீங்கள் குழந்தைக்கு வாங்கி தருவதால் உடையும் அழுக்காகாது, வீட்டு தரையை நீங்கள் துடைக்கவும் தேவையில்லை, குழந்தை தவழ்ந்து செல்லும் போது அதுவாகவே தரையை துடைத்துவிடும். இது டூ இன் ஒன் உடை.

சளித்தொல்லை, இனியில்லை..

சளித்தொல்லை, இனியில்லை..

சளி பிடித்துவிட்டால் போதும் மூக்கில் ஒழுகிக் கொண்டே இருக்கும். ஒரு டஜன் கர்சீப் அல்லது ஒரு பாக்கெட் டிஷ்யூ இருந்தாலுமே கூட பத்தாது. அது போன்ற நேரத்தில் நீங்கள இந்த ஹெட் செட் பேப்பர் ரோலர் வாங்கி மாட்டிக் கொண்டு ஜாலியாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இதற்காகவே நீங்கள் ஜப்பானியர்களுக்கு கோவில் கட்டலாம்.

மழை நீர் சேகரிப்பு!

மழை நீர் சேகரிப்பு!

இதுக்குறித்த சில செய்தி தாள்களில் நாம் கேலி சித்திரங்கள் கூட கண்டதுண்டு. ஆனால், இதுவொரு அரிய கண்டுபிடிப்பு மக்களே. மழைநீரை பூமிக்கு கீழே சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து, முதலில் வீட்டுக்குள் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே, இந்த ரிவர்ஸ் குறை பிளஸ் சேவ் வாட்டர் கருவி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கரப்பான்பூச்சி!

கரப்பான்பூச்சி!

வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா... இனிமேல் சின்ன செருப்பை எடுத்துக் கொண்டு அதன் பின்னே ஓட வேண்டிய அவசியம் இல்லை. இந்த செருப்பு ஸ்டிக் நீங்கள் நின்ற இடத்தில் இருந்து கரப்பான்பூச்சியை அடித்து கொல்ல வெகுவாக உதவும். மேலும் இதை நீங்கள் படுத்து கொண்டே, உட்கார்ந்து கொண்டேவும் கூட பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு...

பெண்களுக்கு...

பெண்களுக்கு நெயில் பாலிஷ் என்றால் கொள்ளை பிரியம். அதை அழகாக அடித்து முடித்த பிறகு சரியாக காய வைக்க வேண்டும். பொறாமை குணம் படத்தை சகோதர சகோதரிகள் அதை கலைக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு வந்து தொல்லை செய்வார்கள். அது போன்ற அபாயகரமான தருணத்தில் நெயில் பாலிஷ் அடித்து முடித்த உடனே அதை காய வைக்க இந்த நெயில் பாலிஷ் ட்ரையர் கருவி.

டூத் பிங்கர்!

டூத் பிங்கர்!

இது நமது பழங்கால முறை தான். நாம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் டூத் பிரஷா பயன்படுத்தினோம், நமது விரல்களை தானே பயன்படுத்தினோம். அதை அடிப்படையாக கொண்டு இந்த டூத் பிங்கர் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வாய்க்கு சௌகரியமாக இருக்கும். அவரவர் சைஸ்க்கு பொருத்தமாகவும் இருக்கும். அடடே ஜப்பானியர்களுக்கு எவ்வளவு அறிவு.

வெங்காயம்!

வெங்காயம்!

வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவது இயற்கை. இதில் இருந்து தப்பிக்க சிலர் ஹெல்மட் அணிந்துக் கொள்வதும் உண்டு. ஆனால், இந்த ஆனியன் க்ரை ட்ரை கருவியானது. கண்ணீர் வராமல் பாதுகாக்கும். கண்களை வெங்காயம் வெட்டும் போதும் அழாமல் அழகாக வைத்துக் கொள்ளும்.

சிங்கில்களுக்கு!

சிங்கில்களுக்கு!

இன்னும் காதலி கிடைக்காமல், காதலன் கிடைக்காமல், திருமணமாகாமல் இருக்கும் சிங்கில்கள் கமிட்டட் ஆனவர்கள் போல ஜாலியாக தூங்க ஏதுவான லவ்வர் ஆர்ம், லேப் பில்லோ. கமிட்டட் ஆகி காதலரை அல்லது துணையை பிரிந்து வாழ்ந்து வருபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தூக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தர்பூசணி!

தர்பூசணி!

உருண்டையாக இருப்பதால் சில சமயம் தர்பூசணியை அறுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். இனிமேல் அந்த கவலை இல்லை. இந்த சதுர தர்பூசணியை அறுப்பதும் எந்த சண்டையும் வராமல் சரியாக பங்கிட்டு உண்பதும் மிகவும் எளிது.

முதுகு பிரச்சனையா..

முதுகு பிரச்சனையா..

முதுகுவலி, முதுகு பிரச்சனை மற்றும் சோம்பேறிகளால் அதிக நேரும் உட்கார முடியாது, மலைப்பாம்பு போல படுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு சௌகரியமாக படுத்துக் கொண்டே டிவி பார்க்க, மொபைல் நோண்ட இந்த பில்லோ. இனிமேல் ஜாலி பண்ணுங்க பாஸ்.

அட்டகாசம்!

அட்டகாசம்!

அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு போகும் நபர்களாக இருந்தால், இந்த பிரெஸ்ட் நிப்பிள் மில்க் ஃபீட் கருவி நிச்சயம் அப்பாக்களுக்கு வேண்டும். அம்மா நைட் ஷிப்ட் அல்லது வேலையில் பிசியாக இருந்தால், அப்பாவே பாலூட்டலாம். அடடே ஆச்சரியக்குறி!

NSFW!

NSFW!

NSFW படங்கள், வீடியோக்கள்பார்க்க இந்த சிறப்பு ஜாக்கெட் பயனளிக்கும். கேட்டால் டிஸ்டர்ப் இல்லாமல் வேலை செய்கிறேன் என்று வேலை இடத்திலும், டிஸ்டர்ப் இல்லாமல் படிக்கிறேன் என்று வீட்டிலும் கூறிக் கொள்ளலாம். ஜப்பானியர்கள் எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்களேன்.

போதையா?

போதையா?

சில சமயம் போதை தலைக்கு ஏறிவிட்டால் சிலர் பாத்ரூமில் சென்று உச்சா போகிறேன் என்று, அதை படுக்கை அறை என்று நினைத்து படுத்துவிடுவார்கள். இல்லையேல் சரியாக நின்று உச்சா போக முடியாமல் தடுமாறுவார்கள். அப்படியான குடிமகன்களுக்கு பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட முட்டிப்போட்டு உச்சா போக உதவும் ஸ்டூல்.

குழந்தை பருவம்!

குழந்தை பருவம்!

குழந்தையாக இருக்கும் உடையக் கூடிய தன்மை உடைய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இந்த பாப்பப் கவர் உடன் பேக் செய்யப்பட்டு தான் வரும். அது வீடியோ கேமாக இருந்தாலும் சரி, டிவி, குளிசாதானப் பெட்டியாக இருந்தாலும் சரி. அந்த கவரை உடனே எடுத்து உடைத்து விளையாட துவங்குவோம். இனிமேல் அப்படி காத்திருக்க வேண்டும். இந்த பாப்பப் கீசெயின் வாங்கி விளையாடுங்கள்.

மாணவ செல்வங்களே...

மாணவ செல்வங்களே...

தேர்வு நாட்களில் தலையணையில் படுத்து உறங்குவதை காட்டிலும், புத்தகங்களில் படுத்து உறங்குவது என்பது மாணவர்களுக்கு பிடித்த காரியம். அந்த தேர்வு முடிந்து விட்டால், அந்த தூக்கம் பறிபோய்விடும். இனிமேல் அந்த கவலை இல்லை. இந்த புக் பில்லோ வாங்கிக்கிங்க. சந்தோசமா படுத்து தூங்குங்க.

தப்பா நினைக்காதிங்க...

தப்பா நினைக்காதிங்க...

இதை பார்த்ததும் சிலர் செக்ஸ் பொம்மை என்று தவறாக நினைக்கலாம். உங்க டர்ட்டி மனதை கொஞ்சம் மாத்திக்கிங்க. இது வாழைப்பழத்தை தனியாக போட்டு வைத்து சேமிக்கும் கருவி. டிப்பன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் மாதிரி இது பனானா பாக்ஸ் அம்புட்டு தான்.

ஆண்களுக்காக..

ஆண்களுக்காக..

இது கொஞ்சம் ஏடாகூடமான கருவியாகும். ஆண்களுக்காக ஜப்பானியர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி ஆண்கள் சுய இன்பம் காண கண்டுபிடிக்கப்பட்ட கருவியாம். புரிய்யுத், இதுக்கெல்லாம் எதுக்கு கருவின்னு. ஆனாலும், சில சமயம் அதிமேதாவித்தனம் இருக்கும் போது இப்படி எல்லாம் யோசிக்க தோணும் போல.

மூக்கு புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்ன்னு வைகை புயல் சொல்லிருக்காரு. ஆனால், சப்பையா இருந்தா மிக கொடூரமா எல்லாம் யோசிக்க வைக்கும் போலவே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy Inventions of Japanese That You Would Not Believe But Actually Exist!

Crazy Inventions of Japanese That You Would Not Believe But Actually Exist!