உங்கள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க, இந்த 8ல ஒன்னு சூஸ் பண்ணுங்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒவ்வொரு ராசியை வைத்து அவர்கள் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்பார்கள். அதே போல தன் விருப்ப, வெறுப்பு மற்றும் அது சார்ந்த தேர்வுகள் குறித்து ஒருவரது தனி நபர் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும் கூற முடியுமாம்.

Pick A Symbol & Know About Your True Personality Type

இங்கே இந்த கட்டுரையில் எட்டு பழங்கால இலட்சினைகள் உள்ளன. இதில் உங்களது தேர்வை வைத்து உங்களது பொது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

உங்கள் தேர்வு ஒன்றாக இருந்தால்... நீங்கள் தாராள மற்றும் நேர்மையான மனம் கொண்டிருப்பீர்கள். இந்த இலட்சினையை தேர்வு செய்ததன் மூலம், நீங்கள் வாழ்வில் சிறந்த விஷயங்களுக்காக போராடுவீர்கள் என்பது அறியவருகிறது.

மேலும், எத்தனை பெரிய உயரத்தை அடைந்தாலுமே கூட, நீங்கள் ஆரம்பக் காலத்தில் கடைப்பிடித்த அதே சட்டத்திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை பின்பற்றி வருவீர்கள். தனி மனிதராக காணும் போது உங்களிடம் நற்பண்புகள் அதிகம் காணப்படும்.

உங்கள் வாழ்க்கை மட்டுமின்றி, பிறர் வாழ்க்கையும் அழகாக, சிறப்பாக அமைய செயற்படுவீர்கள். சில சமயங்களில் மக்கள் உங்களை தொடர்பு கொள்வதை கடினமாகவும் உணர்வார்கள்.

#2

#2

உங்கள் தேர்வு இரண்டாக இருந்தால்... ஒரு தனி நபராக காணும் போது உங்களிடம் வசீகரம் அதிகம் காணப்படும். எதையும் பொறுப்பாக செய்வது இயற்கையாக உங்களிடம் காணப்படும் பண்பு.

கடின உழைப்பும், நேர்மையாக இருப்பதும் மற்றவர்கள் உங்களிடம் விரும்பும் செயல். உங்கள் குணாதிசயங்கள் வைத்து மக்கள் உங்களை அதிகம் நம்புவார்கள். எதையும் வேகமாக சிந்தித்து செயற்படுவீர்கள்.

#3

#3

உங்கள் தேர்வு மூன்றாக இருந்தால்... நீங்கள் செய்யும் வேலைகள் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் நிறைய சிறந்த யோசனைகள், சிந்தனைகள் இருக்கும். ஒரு தனி நபராக காணும் போது, தனியாக அமர்ந்திருக்கும் போது நிறைய புதுபுது விஷயங்களை யோசிப்பீர்கள்.

பிறர் நீங்கள் தனிமை விரும்பும் நபர்கள் என்று கருதினாலும், வெகு சிலரே உங்களுக்குள் இருக்கும் அந்த தனித்துவம் கொண்ட நபரை அறிவார்கள். உங்களுக்கு போலியாக நடிக்க தெரியாது, தார்மீக விஷயங்களுக்கு அதிக மதிப்பு அளிப்பீர்கள். உங்களுக்கு சரி என்று பட்டால், தனியாக கூட போராடுவீர்கள்.

#4

#4

உங்கள் தேர்வு நான்காக இருந்தால்... எதையும் நுட்பமாக ஆராய்ந்து, யோசித்து செய்யும் நபராக நீங்கள் இருப்பீர்கள். தனித்துவம் கொண்ட கதாபாத்திரம் உங்களுடையது. உங்களை முழுமையாக அறிவது என்பது மக்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும்.

உங்கள் தனிப்பட்ட நிலைபாட்டை மேம்படுத்த நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்கள். உங்களுக்குள் ஒரு கிரியேட்டிவ் நபர் இருக்கிறார். இதெல்லாம் போக உணர்வு ரீதியாக எல்லாரயும் மதிக்கும் உங்கள் குணம் மேம்பட்டு காணப்படும்.

#5

#5

உங்கள் தேர்வு ஐந்தாக இருந்தால்... சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது உங்களது இயல்பு குணாதிசயம். உங்களுக்கு நீங்கள் விதித்துக்கொண்ட தனிப்பட்ட நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு அதற்கு உட்பட்டு வாழ்ந்து வருவீர்கள். தனிப்பட்ட நபராக காணும் போது, நீங்கள் உங்கள் குடும்பத்தை காக்கும் ஒரு தூணாக இருப்பீர்கள்.

என்ன நடந்தாலும் உங்கள் கனவை விடாப்படியாக விரட்டிப்பிடிக்கும் நபராக இருப்பீர்கள். உங்கள் தைரியம், துணிச்சல் உங்கள் கனவுகளை ஒரு நாள் நிச்சயம் வெல்ல உறுதுணையாக இருக்கும். உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள்.

#6

#6

உங்கள் தேர்வு ஆறாக இருந்தால்... உறவுகளை கட்டமைப்பதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். அனைவரும் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர் என்று கூறுவார்கள்.உங்களை சுற்றி எப்போதும் ஒரு நட்பு, உறவு கூட்டம் இருக்கும். உங்களுடன் இருக்கும் போது அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். ஒவ்வொரு நாளும் உங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பீர்கள்.

#7

#7

உங்கள் தேர்வு ஏழாக இருந்தால்... கவர்ச்சிகரமான மற்றும் தன்னிச்சையான நபராக இருப்பீர்கள். கேலி, நகைச்சுவை நிறைந்த குணாதிசயம் கொண்டிருப்பீர்கள். அனைவரையும் மகிழ்விப்பது, சிரிக்க வைப்பது நீங்கள் வாங்கி வந்த வரம். உங்கள் உற்சாகத்திற்கு ஒரு எல்லையே இருக்காது. உங்களுடன் பழகும் நபர்களிடமும் உங்கள் பர்சனாலிட்டி எதிரொலிக்கும்.

#8

#8

உங்கள் தேர்வு எட்டாக இருந்தால்... எதையும் நேர்மறையாக சிந்திக்கும் மனம் உங்களுடையது. இந்த வாழ்க்கை ஒரு வரம், அதன் இயக்கத்தில் முடிந்த வரை நிறைய விஷயங்கள் வெளிக்கொண்டு வந்த செய்திட வேண்டும் என்று எண்ணுவீர்கள். வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்தவை மற்றும் சாதித்தவை கண்டு பெருமை அடைவீர்கள். எந்த கருத்தாக இருந்தாலும் வெளிப்படையாக நண்பர்கள் உறவினர் முன் கூறிவிடுவீர்கள்.

Images Source: Link

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pick A Symbol & Know About Your True Personality Type

You wont believe that these results can be so apt! All that you need to do is pick a symbol and it will help reveal your personality. Check it out and let us know on how well your personality can be defined.
Story first published: Thursday, April 12, 2018, 9:36 [IST]