For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை!

|

நிச்சயமான பெண்ணை காதலித்து கரம் பிடிக்க எல்லாரும் காதல் மன்னன் அஜித் ஆகிவிட முடியுமா என்ன? ஆனாலும், ஏனோ ஆண்களுக்கு ஒரு பெண் நிச்சயமாகி இருந்தாலும் சரி, வேறொரு ஆணை காதலித்து வந்தாலும் சரி.. ஏன் இன்னும் சிலர் திருமணமான பெண் என்றும் கூட பாராமல் பாரபட்சமின்றி ஜொள்ளுவிட்டு தொல்லை செய்வார்கள்.

அப்படி ஒரு ஆன்லைன் தொல்லை மன்னன், நிச்சயமான இளம் பெண்ணுக்கு தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து தொல்லைக் கொடுக்க. அந்த ஆணுக்கு தக்க பதிலடி கொடுத்து அதை இன்டர்நெட்டில் வைரலாக பரவும் செய்திருக்கிறார் அந்த இளம் பெண்ணின் வருங்கால கணவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜொள்ளு பார்ட்டி!

ஜொள்ளு பார்ட்டி!

எப்போதும் எல்லா ஜொள்ளு பார்ட்டிகளும் பெண்களிடம் பேச துவங்கும் அதே பாணியை தான் இந்த நபரும் பிரயோக படுத்தி இருக்கிறார். நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா? நீயும், அவரும் (வருங்கால கணவரும்) பிரிந்துவிட்டால்... அதன் பிறகு நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா? என்று கேட்டிருக்கிறார் அந்த ஜொள்ளு ஆசாமி.

நன்றி!

நன்றி!

அப்படி ஒரு பிரிவு நடக்கும் என்று நான் கருதவில்லை. என்னவாக இருக்கட்டும்... நன்றி என்று சிரித்திருக்கிறார், அந்த இளம்பெண். இது போதும், ஒருவேளை அதற்கு (பிரிவு ஏற்பட) ஏதேனும் உதவி வேண்டும் என்றால், என்னிடம் சொல் என்று அந்த இளம் பெண்ணுக்கு பதில் அளித்திருக்கிறார் ஜொ.ஆ.

உலலாச்சுக்கும்!

உலலாச்சுக்கும்!

தனது பதிலுக்கு எந்த ரிப்ளையும் வராததை அறிந்தும் கொஞ்ச நேரம் கழித்து,

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. உன் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் என்று செய்தி அனுப்பி இருக்கிறார். அந்த வேலையில் தான். அந்த இளம்பெண்ணின் அக்கவுண்டில் இருந்து நன்றி செய்தியுடன், உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஒரு அரைநிர்வாண படம் வந்தது.

நிஜமாவா?

நிஜமாவா?

உடனே அந்த ஜொ.ஆ., அது என்ன? உனக்கு நிச்சயம் ஆகிவிட்டது தானே? நான் கூறிய அந்த ஆக்ஷனுக்கு நீ தயாராகிவிட்டாயா? என்று ஒரு எக்சைட்மெண்ட்டுடன் ரிப்ளை செய்திருக்கிறார்...

அப்போது தான் நிகழ்ந்தது அந்த வடப் போச்சே மொமன்ட்...

நோஸ் கட்!

நோஸ் கட்!

இந்த ஜொள்ளு ஆசாமி உடன் அதுவரை மெசேஜ் செய்தது, மற்றும் அரைநிர்வாண புகைப்படம் அனுப்பியது அனைத்துமே, அந்த இளம்பெண்ணின் வருங்கால கணவர். அவர் தான், தனது உள்ளாடை உடனான கவர்ச்சி படத்தை அனுப்பி, அந்த ஜொ.ஆவை உணர்ச்சிவசப்பட வைத்து, தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜொள்ளு ஆசாமி ஒரு கடத்தில் எக்சைட்மெண்ட்டுடன் பதில் வேண்டி காத்திருக்க... தனது சுயரூபத்தை வெளிக்காட்டி அந்த ஜொள்ளு ஆசாமிக்கு நோஸ் கட் கொடுத்திருக்கிறார் மாப்பிளை.

இன்டர்நெட் ரெஸ்பான்ஸ்!

இன்டர்நெட் ரெஸ்பான்ஸ்!

தனது வருங்கால மனைவியை நீண்ட நாளாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து டார்ச்சர் செய்து வந்த அந்த நபருக்கு தான் கொடுத்த நோஸ் கட் சாட்டிங் மொத்தத்தையும் ஸ்க்ரீன் சாட் எடுத்து சமூக தளத்தில் பகிர்ந்தார் அந்த மாப்பிளை.

அந்த பதிவு சமூக தளங்களில் வைரலாக பரவ துவங்கியது. பலரும் அந்த மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவித்தனர். பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆண்களுக்கு இப்படியான நோஸ் கட் நிச்சயம் அவசியம் தான் என்று தங்கள் ஆதரவு மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

பாடம்!

பாடம்!

சிலர் தங்கள் வீட்டு பெண்களிடம் யாரேனும் தவறாக நடந்துக் கொண்டால், அவர்களை திட்டுவார்கள், அடிப்பார்கள், போலீஸில் புகார் அளிப்பார்கள். ஆனால், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல, இன்டர்நெட்டில் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு இன்டர்நெட் மூலமாகவே இவர் கொடுத்திருக்கும் தக்க பதிலடி பர்பெக்ட் என்று கூறி சிலர் தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

நிச்சயம் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆண்களுக்கு இந்த வைரல் பதிவு ஒரு நல்ல பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Perfect Reply From A Fiance To A Stalker Who Disturbs His Future Wife!

Guy Keeps Messaging A Girl That’s About To Get Married, Gets A Pic That Will Shut Him Up Forever
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more