இதுக்கெல்லாம் கூடவா பாலியல் வன்முறை கேஸ் போடமுடியும்... படிச்சா ஷாக் ஆகிடுவீங்க...

Subscribe to Boldsky

வாய்மொழி துஷ்பிரயோகம், கேவலமான (கெட்ட) வார்த்தை அல்லது உயர்ந்த தொனி பேச்சுடன் மட்டும் சம்பந்தப்படுத்திகொள்ளத் தேவையில்லாத ஒன்று. யாரோ ஒருவர் நம்மை அச்சுறுத்துவதற்கு அல்லது தாழ்வாக உணரச் செய்ய இதுபோன்ற கீழ்த்தரமான வழிகளைப் பயன்படுத்தலாம். "துஷ்பிரயோகம்" என்ற வார்த்தையை நாம் கேட்கும்போது வழக்கமாக உடல்ரீதியான தொந்தரவுகளைப் பற்றியே சிந்திக்கிறோம். எவ்வாறாயினும், சிலசமயங்களில் வாய்மொழி துஷ்பிரயோகமும் கூட, எந்தவிதமான தீங்கு அறிகுறிகள் இல்லாமல் உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை.

Verbal Abuse

இந்தவித தாக்குதல் வெளிப்படையாகத் தெரியும் தன்மை இல்லாததன் காரணமாக, ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அதை எளிதில் உணர முடியாது. அதனால்தான் நீங்கள் பின்வரும் அறிகுறிகளுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. திட்டாதபோதும் உங்களுக்கு பயமாக இருக்கிறது:

1. திட்டாதபோதும் உங்களுக்கு பயமாக இருக்கிறது:

வாய்மொழி துஷ்பிரயோகமென்பது எப்போதும் மூன்றாம் நபர் உங்களை நோக்கி கத்துதல் அல்லது திட்டுதல் மட்டும்தான் என்று நாம் தவறாக நினைக்கலாம். சிலசமயங்களில் அது உண்மை, ஆனால் எப்போதுமே அல்ல. உண்மையில், வாய்மொழி அல்லது உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்பவர் பாதிக்கப்படுபவர்களை குழப்பி அவர்களுக்கு தங்கள் மீதே சந்தேகம் ஏற்படுத்தும் முறையையே முயற்சிக்கிறார்கள்.

பாதிப்பை உருவாக்குபவர் ஒரு மென்மையான குரல் மற்றும் அன்பான தொனியைக் கூட பயன்படுத்தலாம். அதனால், கோபப்பட்டு கத்தாமல் அமைதியாக இருப்பவர்கள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவதில்லையென்று அர்த்தமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அச்சுறுத்தல் வெளிப்படையாக அல்லது மறைமுகமானவைகளாகக் கூட இருக்கலாம்.

நீங்கள் ஏதாவது செய்யாவிட்டால் அந்த நபர் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றி கவலைப்படுகிறீர்களா? உங்கள் கருத்துக்களினால் எப்போதும் பயப்படுகிறீர்களா ? உங்கள் ஒவ்வொரு வார்த்தையும், நடவடிக்கைகளும் அவர்களைத் தொந்தரவு செய்யாதவாறு கவனித்துக்கொள்கிறீர்களா?

2. குற்றம் சாட்டுதல்

2. குற்றம் சாட்டுதல்

நாம் அனைவரும் நமது தனித்துவத்தை மதிக்கிறோம் மற்றும் நாம் நம்மை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும், வாய்மொழி துஷ்பிரயோகமானது ஒப்பீடுகள் மற்றும் குற்றங்களின் மூலம் சுய நம்பிக்கையை குறைக்கும் நிலைக்கு நம்மை உட்படுத்துகிறது. பரிகாசிக்கும் யாரும் எதிராளியின் புத்திசாலித்தனம் , அழகு அல்லது விஷயங்களை சிறப்பாகச் செய்பவர் போன்றவற்றை பற்றிப் பேசுவதில்லை மாறாக புண்படுத்துவது, கேலிக்கூத்து அல்லது கொடூரமான ஒரு தொனியைப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் இதைக் கேட்பது நமது சுய மரியாதைக்கு ஒரு பெரும் அடியாகும்.

• நீங்கள் ஒரு பிரச்சனையைப் பார்க்கும்போது அல்லது உணரும்போது அந்த சூழ்நிலையை விட்டு முடிந்த அளவு சீக்கிரம் வெளியேற வேண்டும்.

• எந்த சூழ்நிலையிலும் உங்களை தாழ்த்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• ஒப்பீட்டுக் குற்றங்களில் உங்களை அகப்படுத்தும் போது சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக்கூட உங்களை குற்றவாளியாக உணரச்செய்வது துஷ்பிரயோகிகளின் வழக்கம்.

3. மிரட்சியிலிருக்கிறீர்கள்

3. மிரட்சியிலிருக்கிறீர்கள்

நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருக்கும்போது மிரள்வதாக உணரும்பொழுது, அவர் உங்களைப் பற்றி தவறாகப் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த சிக்னல் மிகவும் நுட்பமானதாக இருக்கலாம். கீழ்த்தரமான நகைச்சுவை மற்றும் தவறான கருத்துகள் ஆகியவற்றிலிருந்து ஆரம்பித்து உங்கள் சுய மரியாதையை முற்றிலும் பாதிக்கும் பொருத்தமற்ற மொழியில் அமையலாம்.

நாளுக்கு நாள் இந்த அச்சுறுத்தல் இன்னும் மோசமான நிலையை அடைந்துவிடும். நீங்கள் விரும்பாத அல்லது செய்யக்கூடாத ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உங்களைத் தள்ளும்.

4. குற்றம் சொல்லுதல்

4. குற்றம் சொல்லுதல்

பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையற்ற தன்மையால் உருவாகும் வன்முறையால் விக்டிம்களுக்கு ஏற்படும் நேரடி தாக்குதல்கள், வாய்மொழி துஷ்பிரயோகத்தின் மற்றொரு அறிகுறியாகும். பொதுவாக, இந்த நம்பிக்கை இன்மையானது சுயமரியாதைக் குறைவுடன் தொடர்புடையது, இது உங்களின் அனைத்து செயல்கள் மற்றும் இயக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்த கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் படிப்படியாக அதிகரிக்கும் நிலைமையில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

• உங்கள் அச்சத்தை சாந்தப்படுத்த விளக்கங்களை வழங்குவது ஒரு பொதுவான தவறு ஆகும். இதனால் காலப்போக்கில், நிலைமை மேலும் மோசமாகிவிடும்.

5. எதிர்மறை மாற்றங்கள்:

5. எதிர்மறை மாற்றங்கள்:

மனிதர்களாக இருப்பதால், நம்மைச் சுற்றியுள்ள எல்லாமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சில வகையான வாய்மொழி துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுத்தும் தொடர்ச்சியான விளைவுகளை சிறிது கவனம் செலுத்தினால் எளிதாக உணரலாம்.

• நீங்கள் மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது உங்கள் மனநிலையைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக உணரவைக்கிறார்களா? அல்லது மோசமான நிலைக்குத் தள்ளுகிறார்களா ? என உங்களால் வித்தியாசப் படுத்த முடிகிறதா? எப்பொழுதுமே ஒருவர் உங்களுக்கு அசௌகரியம் அல்லது சோகம் மட்டுமே கொடுப்பதை உணர்ந்தால், அவர்களைத் தவிர்ப்பது நல்லது.

• சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுத்தும் நபரை உணர்வது கடினமாக உள்ளது.எனவே அதை ஏற்றபின் சரி செய்வது நல்லது.

• உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அப்யூஸர்ஸ் பொதுவாக தங்கள் துஷ்பிரயோகத்தை செயல்படுத்துவதில் மிகவும் நுட்பமானவர்கள்.அவர்கள் உங்கள் பங்குதாரர் அல்லது நீங்கள் நேசித்த ஒருவர் என்றால் அவரின் நேச / பாச வலையை விட்டு வெளியேவந்து அவர்கள் ஏற்படுத்தும் சேதத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில், உங்கள் நிலைமையை சரிசெய்ய நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

6. வேறொரு நபரின்மீது

6. வேறொரு நபரின்மீது

தாங்கள் பார்க்கும் நடத்தைகளிலிருந்தும் மனிதர்கள் கற்றுக் கொள்கிறார்கள். துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் துரதிருஷ்டவசமாக துஷ்பிரயோகி ஆகிவிடுகிறார்கள்.

உதாரணமாக, தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத பெற்றோரின் சூழலில் வளர்ந்து ஒரு குழந்தை, வயது வந்தவுடன் வாய்மொழி துஷ்பிரயோகியாகிறார், ஏனென்றால் அந்தப் பெற்றோருக்கு உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாததாலேயாகும்.

நிச்சயமாக, இந்த பிரச்சனைகளை குணப்படுத்தவும் உடைக்கவும் வழிகள் உள்ளன. இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் சிறப்பு நிபுணரை அணுகுவதே இதற்கான சரியான தீர்வாகும். துஷ்பிரயோகத்தை நீங்கள் சமாளிக்க உதவவும், ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தும் வழிகாட்டுதல்களை வழங்கவும் அவர் உங்களுக்கு உதவுவார்.

எதிராக செயல்படுங்கள்.

எதிராக செயல்படுங்கள்.

நீங்கள் வாய்மொழி துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. உங்கள் நலன், நீங்கள் வாழும் நிலைக்கு நீங்கள் கொடுக்கும் கவனத்தை சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்க.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அல்லது வேறு எதாவது காரணி எப்படி உங்களிடம் நடந்துகொள்வார்கள் என்பதை சிந்திக்கும் முன்,உங்கள் முக்கிய அக்கறை நீங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    6 Symptoms That You Are a Victim of Verbal Abuse

    Verbal abuse does not have to be accompanied by aggressive language or a high tone.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more