ஜெயலலிதாவிற்காக தொண்டர்கள் செய்த துணிகர செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நுரையீரல் தொற்று என கூறி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான அறிக்கைகள் மருத்துவமனை நிறுவனத்திடம் இருந்து வந்தக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் இட்டிலி சாப்பிடுகிறார் என்றும், ஒரு நாள் தொற்று முற்றுகிறது என்றும், மற்றொரு நாள் அவருக்கு பிசியோதெரபி வழங்கப்படுகிறது, ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என்றும் பல செய்திகள் வெளியாகின.

அன்று அம்மா நலமாக இருக்கிறார் என மக்கள் முன்னிலையில் கூறிய பல அமைச்சர்கள், சில மாதங்களுக்கு முன்னர், நாங்கள் அம்மாவையே காணவில்லை. எங்களை அப்படி கூற சொன்னார்கள் என அதே மக்கள் முன்னிலையில் தாங்கள் கூறிய பொய்யை ஒப்புக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

ஜெயலலிதா நலமாக வீடு திரும்ப வேண்டும் என கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல தாய்மார்கள் பல வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் செய்தனர். ஆனால், எந்த பிரார்த்தனையும், மருத்துவமும் பலனளிக்காமல் 75 நாட்கள் மரண படுக்கையில் போராடி உயிரிழந்தார் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, இறந்த செய்து வந்த நாள் வரை பல தொண்டர்கள் பல பிரார்த்தனைகள் செய்தனர். அதில், மக்களை ஆச்சரியப்படுத்திய சில நிகழ்வுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலகு குத்துதல்!

அலகு குத்துதல்!

சென்னையில் இருந்த அம்மன் கோவில் ஒன்றுக்கு அதிமுக கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சீக்கிரம் உடல் நலம் பெற்று, குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வணங்கி கழுத்தில் ஜெயலலிதாவின் படத்தை மாட்டிக் கொண்டு அலகு குத்திக் கொண்டார்.

பச்சை!

பச்சை!

பச்சைக் குத்திக் கொள்வது என்பது நமது கலாச்சாரத்தில் நெடுங்காகாலமாக காணப்படும் முறை. தங்களுக்கு பிடித்த சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்களை, உருவ படத்தை உடலில் பச்சைக் குத்திக் கொள்வது ரசிகர்களுக்கு பிடித்த செயலாக இருக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து ஜெயலலிதாவின் உருவப் படத்தை அதிமுக தொண்டர்கள் அதிகமானோர் பச்சைக் குத்துக் கொண்டனர்.

மண் சோறு!

மண் சோறு!

அதிமுக அமைச்சர்கள், பொறுப்பில் இருந்த நபர்கள், செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பலரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள்களின் போதும், அவர் மருத்துவமனையில் உடல் நலம் குன்றி அனுமதிக்கப்பட்ட போதும் பல சமயங்களில் மண் சோறு உண்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.

சிறப்பு பூஜை!

சிறப்பு பூஜை!

தமிழகத்தின் முன்னாள் முதல்வல் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது ஆரோக்கியம் மிகவும் சீர்கெட்டுள்ளது என்பதை அறிக்கை மூலம் அறிந்த நாளில் இருந்து... தமிழகத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் பெயரில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

உயிர் தியாகம்!

உயிர் தியாகம்!

சேலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை கான்ஸ்டபிள் ரத்தினம் என்பவர் தன்னை தானே மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயலலிதாவின் பெயர் சொல்லி கொளுத்திக்கொண்டு தீக்குளிக்க முற்பட்டார். ஆனால், அவர் கொளுத்திக் கொள்ளும் முன்னர் சூழ்ந்திருந்த காவர்கள் ஓடி சென்று ரத்தினம் அவர்களை தடுத்து, காப்பாற்றினர்.

மரணம்!

மரணம்!

சற்குணம் எனும் அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவிற்காக தீக்குளித்தார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உடலில் தீக்காயம் ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

ஷிஹான் ஹுசைனி!

ஷிஹான் ஹுசைனி!

2015 பிப்ரவரி மாதம் தமிழகத்தை சேர்ந்த ஷிஹான் ஹுசைனி எனும் பிரபல கராத்தே மாஸ்டர் அம்மா என்று ஆங்கிலத்தில் எழுதிய டி-ஷர்ட் ஒன்று அணிந்துக் கொண்டு தன்னை சிலுவையில் ஆணிகள் கொண்டு அடித்துக் கொண்டார். ஆறு அங்குலம் கொண்ட ஆணிகளை கை, கால்களில் அடித்துக் கொண்டு அவர் ஐந்து நிமிடங்கள் அவர் சிலுவையில் இருந்தார்.

கேரள பிரமுகர்!

கேரள பிரமுகர்!

கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பிஜூ ரமேஷ் மற்றும் பிற அதிமுக ஆதரவாளர்கள் பலர் திருவனந்தபுரத்தில் இருந்த கோவில் ஒன்றில் ஜெயலலிதா சீக்கிரமே பரிபூரணமாக குணமடைந்து வர வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.

இலவச ஆட்டோ!

இலவச ஆட்டோ!

அதிமுகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள் பலர், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சீக்கிரமே குணமடைய வேண்டும் என்பதற்காக, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணத்தை சலுகையாக அளித்தனர்.

மற்றும் பல...

மற்றும் பல...

இவை எல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அதிமுக கட்சி தொண்டர்கள் செய்த செயல்களாகும். இது போகும் இன்னமும் கூட கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என பல தொண்டர்கள் பல இடங்களில் இது போன்ற பிரார்த்தனைகள் செய்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஆனால், இது போன்ற வேண்டுதல்கள் மன திருத்திக்காக மட்டுமே செய்யலாமே தவிர. இதன் மூலமாக எந்த பயனும் கிடைக்காது என்பதை அன்பின் மிகுதியால் பலரும் ஏற்க மறுக்கிறார்கள்.

ஒரு காலத்தில்...

ஒரு காலத்தில்...

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் கட்சி மேடையில் பேசி விட்டு திரும்பும் போது. அவர் குடித்துவிட்டு மீதம் வைத்த ரஸ்னா அல்லது ஜூஸை அண்டா நீரில் கலந்து தீர்த்தம் போல குடித்து வந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளது. அன்பை வெளிப்படுத்த மனம் இருந்தால் போதுமே. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாத்தி யோசிங்க!

மாத்தி யோசிங்க!

இல்லை இப்படி தான் அன்பை வெளிப்படுத்துவோம் என்றால். நீங்கள் செலவு செய்யும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு தானமாக அளிக்கலாம்.

மேலும், தங்கள் தலைவர்களுக்காக உயிர் தியாகம் செய்ய முயலும் நபர்கள், உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்கள் கட்சிக்கு வேறு தலைவர் வரலாம். ஆனால், உங்கள் குடும்பத்திற்கு வேறு தலைவர் கிடைக்க மாட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unbelievable Things Jayalalitha's Followers Done For Her!

Unbelievable Things Jayalalitha's Followers Done For Her!