அசாத்திய வீரமும், வானுயர பெருமைகளும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க வாள்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வாள் இன்றி அமையாத போரில்லை... வாள் படிக்க பயந்தால் வாழ்வே இல்லை... என வாழ்ந்தவர்கள் பண்டையக் காலத்து அரசர்கள். ஓர் அரசரின் வீரத்தை தாங்கி நிற்பது அவனது வெற்றிகள். அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவை அவன் ஏந்தி சண்டையிட்ட வாள்கள். வாள் தான் அந்த காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கை தந்தது என்பதே உண்மை.

ஏறத்தாழ ஆறடி நீளம் கொண்டிருந்ததாம் ராஜராஜ சோழனின் வாள். அந்த வாளை இன்று ஒருவரால் தூக்கக் கூட முடியாது. ஆனால், ராஜராஜன் அதை தூக்கி, சுழற்றி தனது எதிரிகளின் தலைகளை கொய்து வெற்றி மகுடம் சூடியுள்ளான்.

Top 10: Most Terrifying Historical Swords!

Image Credit

ஓர் அரசனின் வாள் அவனது வெற்றிகள், வலிமை, ஆதிக்கம் போன்றவற்றை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் புத்தகம் மற்றும் அவனை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள உதவிய கருவி என வரலாற்றில் கூறியிருக்கிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் அமைந்திருந்த ஒவ்வொரு ராஜ்ஜியமும் அவரவர்களுக்கு ஏற்ப பலவகை வாள்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பெரும் சாம்ராஜ்ஜியங்கள் யாராலும் உருவாக்க முடியாதபடி தனித்துவமான வாள்களும் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு வாளுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது.

இதோ! உலக உலக வரலாற்றில் பயங்கரமானவை என புகழப்படும் டாப் 10 வாள்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோப்பேஷ்

கோப்பேஷ்

கோப்பேஷ் (The Khopesh)! இது பண்டையக் காலத்து எகிப்தில் பயன்படுத்த வாளாக கருதப்படுகிறது. பொதுவாக வாள்கள் இருப்பக்கமும் கூர்மையாக இருக்கும். ஆனால், இந்த வாளில் வெளிப்பகுதி மட்டுமே கூராக இருக்கிறது. இது அதிகார வர்க்கத்திடம் மட்டுமே காணப்பட்ட வாளாகவும், அவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த வாளாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் ரம்சேஸ் மற்றும் துட்டன்கமன் போன்ற எகிப்து அரசர்களின் இந்த வாள்கள் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Wikimedia Commons

உல்ப்ஃபெர்ட்

உல்ப்ஃபெர்ட்

உல்ப்ஃபெர்ட் (The Ulfbehrt Sword)! இந்த வாள் எடை குறைவாக இருந்தாலும், மிகவும் வலிமையானது, வளையதக்கது. வைக்கிங் உல்ப்ஃபெர்ட் வாள்களின் பிளேடுகள் மிகவும் தூய்மையான இரும்பாக கருதப்படும் குரூசிபிளில் (Crucible) உருவாக்கப்பட்டவை. இன்றைய கொல்லர்களால் இதை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம் என்றும். நாம் வரலாற்றில் இடைக் காலங்களில் கண்ட வாள்களை கட்டிலும் இவை மிகவும் அட்வான்ஸ்டு வாளாக கருதுகிறார்கள்.

Wikimedia Commons

கஹ்ந்தா

கஹ்ந்தா

கஹ்ந்தா (The Khanda)! இந்த வகை வாள்களின் முன் பகுதி கொஞ்சம் மழுங்கியது போல தான் இருக்கும். இது குத்திக் கிழிக்க பயன்படுத்தும் வாள்கள் அல்ல. எதிரிகளின் கழுத்தை அறுக்க உதவும் வால்கள். இதன் இருபுறமும் முற்கள் (ரம்பம் போன்ற) போன்ற கூர்மை இருக்கும். இது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாளாக காணப்படுகிறது. இது பயங்கரமான வாளாக திகழ்ந்துள்ளது.

Wikimedia Commons

ங்கொம்பே

ங்கொம்பே

ங்கொம்பே (Ngombe) எனப்படும் இந்த வகை வாள்கள் போர்களில் சண்டையிட பயன்படுத்தப்பட்டவை அல்ல. இது போர்களில் சிக்கியவர்கள், அடிமைகள், அல்லது தவறு செய்து மாட்டிக் கொண்ட குற்றவாளிகள் மற்றும் துரோகிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட வாளாகும். இந்த வாள்கள் மரண தண்டனையை நிறைவேற்றும் நபர்களிடம் மட்டுமே இருக்கும். இது ஐரோப்பிய பகுதிகளில் உபயோகப்படுத்திய வாளாக காணப்படுகிறது.

Wikimedia Commons

தி ஃப்ளம்மர்ட்

தி ஃப்ளம்மர்ட்

தி ஃப்ளம்மர்ட் (Flammard), இவை அலை போன்ற வடிவத்தில் கூர்மையான பிளேடுகள் கொண்டவை. இது மறுமலர்ச்சிக்கு பிரதானமானது என்கிறார்கள். இது மிக கொடூரமான முறையில் கொலை செய்ய பயன்படுத்திய வாளாக இருக்கலாம் என சிலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில், மற்ற வாள்கள் அனைத்தும் பிளைனாக இருக்கும். எதிரி வாளை கொண்டு தாக்க வரும் போது, இது போன்ற அலை வடிவத்திலான வாள்கள் தற்காக்க பெரிதும் உதவும்.

இது எதிரி வாளின் வேகத்தை குறைக்கும். ஒருமுறை வீசிய வாளை , மீண்டும் தூக்கி தாக்க வீசுவது சிரமமாக இருக்கும். அலை வடிவத்தில் தடுக்கி வாள் வீச்சின் தாக்கத்தை குறைக்க செய்யும் இந்த ஃப்ளம்மர்ட் வகை வாள்கள்.

Wikimedia|savagecats - flickr

சைனீஸ் ஹூக்

சைனீஸ் ஹூக்

சைனீஸ் ஹூக் (Chinese Hook Sword)! இவை கொஞ்சம் அபாயமான வாள்கள் ஆகும். பிளேடு மட்டுமின்றி, இதன் கைப்பிடி தற்காப்பு பகுதியும் ஷார்ப்பாக இருக்கும். இந்த வகை சைனீஸ் ஹூக் வாள்களை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு தான் சண்டை போடுவார்கள்.

Wikimedia Commons

கிளிஜ்

கிளிஜ்

கிளிஜ் (Kilij), இந்த வகை கிளிஜ் வாள்கள் முதன் முறையாக துருக்கியில் 400 கி.பி தான் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. போரின் போது குதிரை படையில் சண்டையிடும் வீரர்களுக்கு இது ஏற்ற வாளாக இருந்திருக்கிறது. 1400 ஆண்டுகளில் இந்த வாளின வடிவமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளனர். நல்ல திறமையான வீரனிடம் இந்த வாள் சிக்கினால், பேரழிவை ஏற்படுத்த இந்த வாள் வெகுவாக உதவும் என வரலாற்றில் கூறியுள்ளனர்.

Wikimedia Commons

எஸ்டாக்

எஸ்டாக்

எஸ்டாக் (The Estoc)! கேடயம் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக இருக்காது என்பதற்கான வாள் இது. எஸ்டாக் வாளானது மறுமலர்ச்சி ஏற்படுத்தும் உணர்வோடு போரில் ஈடுபட்டிருக்கும் வீரனின் கையில் இருந்தால்... எந்த கேடயத்தையும் கூட துளைத்து எதிரியின் மரணத்தை ஊர்ஜிதப்படுத்தும் என்கிறார்கள்.

Wikimedia Commons

ஸ்வெய்ஹான்டர்

ஸ்வெய்ஹான்டர்

ஸ்வெய்ஹான்டர் (Zweihander) என்றால் இரண்டு கைகள் என்று பொருள். இந்த வாளை ஒரே கையில் பிடித்து சண்டையிடுவது மிகவும் கடினம். இது மிகவும் நீளமானது, பெரியது. எனவே, இதை தூக்கி சுழற்றி சண்டையிட வேண்டும் எனில், நிச்சயம் அந்த வீரன் இரண்டு கைகளை பயன்படுத்த வேண்டும். வரலாற்றில்... ஓரி சிறந்த வீரன் இந்த வாளை எடுத்து சுழற்றினால்... ஒரே வீச்சில் ஏழு நபர்களின் உயிரை எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

Wikimedia Commons

உருமி!

உருமி (The Urumi Sword)! மிக சிறந்த கூர்மையான போர் கருவி. இது நன்கு வளையும் தன்மை கொண்டிருக்கும். சுழன்று அடித்து பலரை ஒரே நேரத்தில் தாக்கும். சாட்டை போன்ற தன்மை கொண்டிருக்கும் இந்த கருவி மிகவும் பயங்கரமானது. இதை எதிர்கொள்ளும் நபர்கள் மட்டுமல்ல, இதை வீசும் நபரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும், இதை சுழற்றும் நபரையே கூட தாக்கிவிடும். இதன் யுக்தியை அனைவராலும் சிறப்பாக கையாள முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10: Most Terrifying Historical Swords!

Top 10: Most Terrifying Historical Swords!