உலகில் மக்களால் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழிகள் தான் உதவுகிறது. உலகில் 6500-க்கும் மேற்பட்ட மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன. அதில் உலக மக்களால் அதிகம் பேசப்படும் மொழி என்று கேட்கும் போது, பலரும் ஆங்கிலம் என்று தான் சொல்வோம். ஆனால் அது தான் தவறு. ஆங்கிலத்தை விட அதிகளவு மக்களால் பேசப்படும் மொழி ஒன்று உள்ளது.

Top 10 Most Spoken Languages In The World

சரி, இப்போது உலகிலேயே மக்களால் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள் எவை என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப் #10

டாப் #10

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் டாப் 10 பட்டியலில், கடைசியாக இருப்பது பிரெஞ்சு மொழியாகும். உலகில் சுமார் 129 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.

டாப் #9

டாப் #9

அதிகம் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கும் மொழி, மலாய்-இந்தோனேசியன். சுமார் 159 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.

 டாப் #8

டாப் #8

எட்டாவது இடத்தில் இருக்கும் மொழி போர்ச்சுகீசு. இந்த மொழியை உலகில் சுமார் 191 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #7

டாப் #7

பெங்காலி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த மொழியை 211 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #6

டாப் #6

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாவது இடத்தில் இருக்கும் மொழி அரபிக் ஆகும். இதை 246 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #5

டாப் #5

ரஸ்ய மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த மொழியை 277 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #4

டாப் #4

நான்காவது இடத்தில் இருக்கும் மொழி ஸ்பானிஷ் ஆகும். இந்த மொழியை உலகில் சுமார் 392 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #3

டாப் #3

உலக மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தி மொழி. இந்த மொழியை உலகில் சுமார் 497 மில்லியன் மக்கள் பேசுகின்றனராம்.

டாப் #2

டாப் #2

நாம் அனைவரும் எதிர்பார்த்த ஆங்கில மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மொழியை உலகில் 508 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

டாப் #1

டாப் #1

மாண்டரின் மொழி தான் உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த மொழியை உலகில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Most Spoken Languages In The World

Here we listed top 10 most spoken languages in the world. Read on to know more...
Story first published: Saturday, February 25, 2017, 16:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter