Latest Updates
-
அக்டோபர் 09-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சனி பகவான்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும்
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம்
Vastu Tips for Home in Tamil: வாஸ்து சாஸ்திரம் ஒருவரின் வீட்டில் உள்ள ஆற்றலை சமநிலைப்படுத்தவும், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டுவரவும் வகுக்கப்பட்ட ஒரு சாஸ்திரமாகும். நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள் மற்றும் திசைக்கும் வாஸ்து சாஸ்திரம் சில விதிகளை வகுத்துள்ளது. வாஸ்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் இல்லத்திற்குச் செழிப்பையும் செல்வத்தையும் ஈர்த்துத் தரும்.
அதேசமயம் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றா விட்டால் , உங்கள் வீட்டில் சமநிலையின்மை, எதிர்மறை ஆற்றல் மற்றும் குழப்பங்கள் ஏற்படக்கூடும். நாம் நேரத்தை பார்க்க உதவும் கடிகாரம் நம் வீட்டின் வாஸ்து சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடிகாரத்தை வீட்டில் சரியான இடத்தில் வைக்காவிட்டால் அது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் எந்தெந்த இடங்களில் கடிகாரத்தை மாட்டக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.

நுழைவாயிலுக்கு மேலே அல்லது இதில் மாட்டக்கூடாது
பிரதான நுழைவாயிலுக்கு மேலே அல்லது அதற்கு எதிரே கடிகாரத்தை ஒருபோதும் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது வீட்டில் எப்போதும் அவசர உணர்வையோ அல்லது பதற்றத்தையோ ஏற்படுத்தக்கூடும். இதனால் உருவாகும் எதிர்மறை ஆற்றலானது, ஒரு வீட்டில் நிலவவேண்டிய அமைதியான சூழலுக்குத் தடையாக அமையலாம். மேலும், நீங்கள் வீட்டிற்குள் நுழையும்போதோ அல்லது வீட்டிலிருந்து வெளியேறும்போதோ, உங்களின் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வை இது ஏற்படுத்தக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி இது அசுபமான விஷயமாகக் கருதப்படுகிறது.
தெற்கு சுவரில் மாட்டக்கூடாது
தெற்கு திசையானது, மரணத்தின் கடவுளான எமனுக்கு உரிய திசையாகக் கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த திசை தேக்க நிலையுடன் தொடர்புடையதாகும். தெற்கு திசையிலோ அல்லது தெற்குச் சுவரிலோ கடிகாரத்தை மாட்டி வைப்பது, குடும்பத் தலைவருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் அல்லது வாய்ப்புகளையும் மந்தமாக்கக்கூடும். இந்த திசையில் கடிகாரத்தை மாட்டுவது வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நிதி நெருக்கடிகளையோ அல்லது தொழில்ரீதியான தேக்கத்தையோ ஏற்படுத்தக்கூடும்.
படுக்கைக்கு மேல் மாட்டக்கூடாது
வாஸ்து படி உங்கள் படுக்கைக்கு மேலே, குறிப்பாகப் படுக்கையின் தலைப்பகுதிக்குப் பின்னால் உள்ள சுவரில் கடிகாரத்தை வைக்கக் கூடாது. இவ்வாறு செய்வது உங்கள் தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், மன அழுத்தத்தையும் உருவாக்கக்கூடும். கடிகாரத்தை படுக்கைக்கு நேர் மேலே மாட்டி வைத்தால், அது உங்கள் வாழ்க்கையில் அழுத்தமான சூழலை ஏற்படுத்தலாம். இதுவே காலப்போக்கில் பதற்றம் மற்றும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
குளியலறையுடன் இணைக்கப்பட்ட சுவரில் மாட்டக்கூடாது
குளியலறையுடன் இணைக்கப்பட்ட சுவரில் ஒருபோதும் கடிகாரத்தை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக, குளியலறைகள் ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல்களின் மையமாகவே கருதப்படுகின்றன. குளியலறையுடன் இணைந்த சுவரில் நீங்கள் ஒரு கடிகாரத்தை மாட்டி வைத்தால், அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்களை அதிகளவில் ஈர்க்கும். இது குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஜன்னலுக்கு மேல் இருக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஜன்னலுக்கு மேலே உள்ள சுவரில் கடிகாரத்தை மாட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த இடத்தில் மாட்டி வைப்பது, அந்த குடும்பத்தினரின் அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்கு தேடிவரும் வாய்ப்புகளையும் இழக்க வைக்கும் அல்லது குறைக்கும் என்று நம்பப்படுகிறது. கடிகாரத்தின் ஆற்றல் வீட்டிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது ஏதேனும் திறந்த வெளி வழியாக வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்படக்கூடாது. அது வீட்டில் ஆற்றல் சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும்.



Click it and Unblock the Notifications

