Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்? -
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க.. -
செட்டிநாடு கவுனி அரிசி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும்
இந்திய ராஜாக்கள் செய்த இந்த தவறுகள்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்ய காரணமாக இருந்ததாம்
இந்தியா கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்தது. வணிகர்களாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் மெல்ல மெல்ல இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றி இந்தியாவின் வளங்களையும், செல்வத்தையும் சுரண்டத் தொடங்கியது. சில லட்சம் ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியா போன்ற பெரிய நாட்டை எப்படி ஆண்டார்கள் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ராஜதந்திர மற்றும் இராணுவ உத்திகளின் உதவியுடன், வணிகர்களாக இருந்து ஆட்சியாளர்களாக மாறி, தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஆங்கிலேயர்களுக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்த, ஆங்கிலேயர்கள் அனைத்து வகையான போர் முறைகளையும், தந்திரங்களையும் செயல்படுத்தினர். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் இராணுவ உத்திகள்
இந்தியர்கள் கத்தி மற்றும் ஈட்டியை வைத்து போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய ஆயுதங்களை விடச் சிறந்த சுடும் வேகம் மற்றும் வலிமை கொண்ட நவீன துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு ஆங்கிலேயர்கள் சக்திவாய்ந்த இராணுவத்த உருவாக்கினர். ஆங்கிலேயர்களின் இராணுவ வலிமையை உணர்ந்த பல இந்திய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஆயுதங்களை இறக்குமதி செய்ததோடு ஐரோப்பியர்களை இராணுவ அதிகாரிகளாகவும் பணியமர்த்தினர்; ஆனால், அவர்கள் இராணுவ உத்திகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை.
இராணுவக் கட்டுப்பாடு மற்றும் சீரான ஊதியம்
பிரிட்டிஷ் அதிகாரிகளும் வீரர்களும் விசுவாசமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், சீரான ஊதியம் மற்றும் கடுமையான ஒழுங்குமுறை ஆகியவற்றில் ஆங்கிலேயர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். அதேசமயம் இந்திய ஆட்சியாளர்களிடம் வீரர்களுக்குச் சீரான முறையில் ஊதியம் வழங்கப் போதுமான நிதி வசதி இருக்கவில்லை. சில இந்திய ஆட்சியாளர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புப் படையையோ அல்லது ஒழுக்கமும் விசுவாசமும் அற்ற கூலிப்படையினரையோ சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை
ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் அவர்களின் விசுவாசம் மற்றும் திறன்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தனர். மாறாக, பரம்பரை, சாதி அல்லது குலத்தின் அடிப்படையில் அல்ல. அவர்கள் ஒழுக்கம் மற்றும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் ஆகியவற்றில் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். அதேசமயம் இந்திய ஆட்சியாளர்கள் தங்கள் நிர்வாக மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சாதி மற்றும் தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தனர். இதனால் தகுதியும், திறமையும் இல்லாதவர்கள் உயர் பதவிகளில் அமர்ந்தனர்.
சக்திவாய்ந்த தலைவர்கள்
ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ், எல்பின்ஸ்டோன், மன்றோ போன்றோர் தங்களின் சிறந்த தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்தினர். இவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பெருமைக்காகவும் போரிட்டனர். மறுபுறம், இந்தியத் தரப்பிலும் ஹைதர் அலி, திப்பு சுல்தான், மாதவ ராவ், சிந்தியா, ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு பிற ஆட்சியாளர்களின் ஆதரவு குறைவாகவே இருந்தது. இந்திய ஆட்சியாளர்கள் ஒற்றுமையின்றி இருந்ததும், அவர்களுக்கு இடையிலான பகைமையை பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதும் ஆங்கிலேயர்களின் வேலையை எளிதாக்கியது.
அரசர்களின் ஒற்றுமையின்மை
பிரிட்டிஷார் பொருள்சார் முன்னேற்றத்தை நம்பியிருந்த நிலையில், இந்திய ஆட்சியாளர்கள் பொருள்சார் முன்னேற்றத்திலும், ராஜதந்திரத்திலும் போதிய தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. இந்திய ஆட்சியாளர்களிடம் ஒருங்கிணைந்த அரசியல் தேசிய உணர்வு இல்லாதிருந்தது. இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷார், அவர்களைத் தங்களுக்குள்ளேயே சண்டையிடச் செய்தனர். இந்திய ஆட்சியாளர்களிடையே நிலவிய அரசியல் பிளவுகளும் ஒற்றுமையின்மையுமே, பிரிட்டிஷாரை வணிகர்களாக இருந்த நிலையிலிருந்து ஆட்சியாளர்களாக மாறத் தூண்டின என்று கூறலாம். ஆரம்பத்தில் தங்கள் வணிக நலன்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மட்டுமே அவர்கள் பிரதேசங்களைக் கைப்பற்றத் தொடங்கினர். நாளடைவில் அதுவே அவர்களின் பேராசையாக மாறியது. இந்திய ஆட்சியாளர்களிடையே நிலவிய அரசியல் விரோதப் போக்கு அவர்களை ஒரு பேரரசை நிறுவும் நிலைக்குத் தள்ளியது.



Click it and Unblock the Notifications
