Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
Chanakya Niti: பண்டைய இந்தியவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆச்சார்ய சாணக்கியர். சாணக்கியர் ஒரு சிறந்த இராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதாரம் என பல துறைகளில் நிபுணராக விளங்கினார். மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தனது சாணக்கிய நீதி மூலம் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சாணக்கியரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, தொழில், உறவுகள், நட்பு, எதிரிகள் என வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். சாணக்கியர் கூறும் இந்தக் கருத்துக்கள் சில சமயங்களில் கடுமையானதாகத் தோன்றினாலும், அவை ஒருவருக்குச் சரியானது எது, தவறானது எது என்பதற்கான வேறுபாட்டை உணர்த்துகின்றன.
சாணக்கியரின் நீதிநெறிகள் மனிதர்களை வாழ்க்கையில் வெற்றிபெறத் தூண்டுகின்றன. ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, குறிப்பிட்ட குணமுள்ள பெண்களை மணக்கும் ஒருவரின் தலைவிதி சிறப்பானதாக அமையும். இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த குணமுள்ள பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் எந்தளவுக்கு அதிகம் என்றால், மகிழ்ச்சியோ அல்லது துயரமோ, எந்த உணர்வாக இருந்தாலும் அவர்கள் முதலில் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால், அத்தகைய பெண்களிடம் ஒரு சிறப்பு உள்ளது. எதற்கெடுத்தாலும் அழுது புலம்பும் பெண்களின் இந்த இயல்பு சற்று விசித்திரமானதாகத் தோன்றலாம். இருப்பினும், அத்தகைய பெண்களை மணம் முடிப்பவரின் தலையெழுத்து சிறப்பானதாக அமையும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
கண்ணீர் விடும் பெண்களின் சிறப்பு
சாணக்கியரின் கருத்துப்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக சகிப்புத்தன்மை உண்டு. ஒரு பெண் துயரத்தால் கண்ணீர் விடுகிறார் என்றால், அவர் பலவீனமானவர் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு ஆணும் அத்தகைய பெண்ணை அவசியம் மதிக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, இத்தகைய பெண்கள் உண்மையான மற்றும் உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். மேலும் மனம் விட்டுப் பேசுபவர்கள், கண்ணீர் விடுபவர்கள் அல்லது தங்கள் காதலன் அல்லது கணவனை விட்டுப் பிரிய விரும்பாத பெண்கள் ஆகியோர் குடும்பத்திற்கு மிகவும் ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். மென்மையான இதயம் கொண்ட பெண்கள் அனைவரின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். எனவே இத்தகைய பெண்களை ஆண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்று 'சாணக்கிய நீதி' கூறுகிறது.
பெண்களின் கண்ணீரில் பெரிய சக்தி உள்ளது
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தத் தவறும் செய்யாத போது கண்ணீர் விடும் பெண்ணிடம் தாய்மை உணர்வு மேலோங்கி இருக்கும். இந்த நற்பண்பின் காரணமாக, அத்தகைய பெண்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் இணக்கமாகப் பழகுவார்கள். பெண்களின் அழுகை மற்றும் கூக்குரல் பல வகையான தீவிர நோய்களைக் குணப்படுத்துவதாகவும், அழுகையானது மனதிற்கு நிம்மதியையும் மன அழுத்தத்திலிருந்து விடுதலையையும் அளிக்குமென்று சாணக்கியர் கூறுகிறார்.
அழும் பெண்கள் ஒருபோதும் பிறர் மனதை நோகடிப்பதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். பசியுடன் வருபவர்களுக்கு உணவளிக்காமல் தாங்கள் உண்ணாத பண்பு கொண்டவர்கள் அவர்கள் ஒருபோதும் மற்றவர்களை பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications

