Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்!
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு முடிவடையும். அதுவும் இந்த சூரிய கிரகணம் ஒரு முழு சூரிய கிரகணமாகும். சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் போது இந்நிலை ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் இல்லை.

இருப்பினும் ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறுது. அதுவும் இந்த சூரிய கிரகணம் கடக ராசியில் நிகழ்கிறது. மேலும் இந்த கிரகணத்தின் போது கடக ராசியில் சூரியன், சந்திரன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றிணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன.
இப்படியான கிரகங்களின் நிலைகளினாலும், கிரகணத்தினாலும் இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இப்போது ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். தொழில் மற்றும் நிதி விஷயங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தடைபட்ட வேலைகள் வேகமாக நடக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறு பிரச்சனைகளைப் புறக்காதீர்கள். தேவையற்ற பயணங்களையும், செலவுகளையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்களும், புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் பேச்சு உறவுகளின் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தினால் கடக ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். பண விஷயங்களில் எந்த ஒரு ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது சற்று சவாலானதாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களையும், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதையும் தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகளால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் பேச்சு மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படும். இதன் விளைவாக உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடும். பெரிய முதலீடுகள் அல்லது நிதி விஷயங்கள் தொடர்பாக எந்த அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். வரவு, செலவுகளுக்கு இடையே சமநிலையை சிறப்பாக பராமரிப்பீர்கள். புதிய வேலையைத் தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறக்கூடும். மேலும் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு பெரிய முதலீடுகளையோ அல்லது புதிய நிதி முடிவுகளையோ எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேலையில் எந்தவிதமான மோதல்களையும் தவிர்க்கவும், ஏனெனில் சிறிய விஷயங்கள் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
மகரம்
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். இக்காலத்தில் யாருடைய வார்த்தைகளையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். பணம் மற்றும் முதலீடுகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். தேவையற்ற செலவுகள் நிதி நெருக்கடியை அதிகரிக்கக்கூடும் என்பதால், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது வெற்றிக்கான புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும். தொழில் முன்னேற்றங்கள் புதிய கதவுகளைத் திறக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனை முடிவுக்கு வந்து மன அமைதியைக் கொண்டு வரும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தவொரு பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





