Latest Updates
-
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க..
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
Aadi Amavasai Special Parangikai Payasam Recipe in Tamil: இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆடி அமாவாசை அன்று கடவுள் மற்றும் முன்னோர்களை வழிபட்டு விஷேச உணவு தயாரிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். மற்ற அமாவாசை நாட்களை விட ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆடி அமாவாசை நாளில் பொதுவாக மக்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்து சமைப்பார்கள். இந்த நாளில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

இந்த ஆடி அமாவாசைக்கு உங்கள் வீட்டில் பாயாசம் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் சேமியா அல்லது பால் பாயாசம் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக பரங்கிக்காயை வைத்து அருமையான பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் வழக்கமான பாயாசம் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்களுக்கு ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரங்கிக்காய் பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துருவிய பரங்கிக்காய்
- 2 1/2 கப் பால்
- 15 பாதாம் பருப்பு
- 6 முந்திரி பருப்புகள்
- 3 ஏலக்காய்
- 10 உலர்ந்த திராட்சை
- 5 ஸ்பூன் வெல்லம்
- 1/2 ஸ்பூன்நெய்
- 2 ஸ்பூன் பால் பவுடர்
செய்முறை:
- பரங்கிக்காய் பாயசம் செய்ய, முதலில் கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் பாலைச் சூடாக்கி, அதில் துருவிய பரங்கிக்காயைச் சேர்க்கவும். பரங்கிக்காய் பாலில் 2-3 நிமிடங்கள் வேகட்டும்.
- 10 பாதாம், ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து, பூசணிக்காயுடன் சேர்த்து வேகவிடவும்.
- பூசணிக்காய் மற்றும் பால் கலவையை மேலும் 10-15 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வேகவைக்கவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறிவிடவும்.
- பூசணிக்காய் மென்மையாகவும் நன்றாகவும் வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆறவிடவும்.
- இந்தக் கலவை ஆறிய பிறகு, அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி, நைசான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை மிதமான தீயில் சூடாக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் விழுதைச் சேர்க்கவும். நன்கு கலந்து, அவ்வப்போது கிளறிவிட்டபடியே 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
- பால் மற்றும் பூசணிக்காய் கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதில் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, வெல்லம் நன்றாகக் கரையும் வரை கலக்கவும். கலக்கிய பிறகு, அதில் உலர் திராட்சையைச் சேர்க்கவும்.
- இறுதியாக மீதமுள்ள பாதாம் பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பரங்கிக்காய் பாயாசம் ரெடி!



Click it and Unblock the Notifications
