Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நேர்மறையான பலன்களைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது குருபகவான் ஜூலை 14 ஆம் தேதி அஸ்தமன நிலையை அடையப்போகிறார், மேலும் ஆகஸ்ட் 12 வரை இதே நிலையில் நீடித்திருப்பார்.

ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது அது அஸ்தமன நிலை என்று கருதப்படுகிறது, ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த காலகட்டத்தில் அதன் சக்தி பலவீனமடைகிறது. குருபகவான் தற்போது அஸ்தமன நிலைக்குச் செல்வது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
குருபகவானின் அஸ்தமனம் ரிஷப ராசிகாரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் சில நேர்மறையான பலன்களை அனுபவித்தாலும் எதிர்மறையான பலன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் சொத்து தொடர்பான பிரச்சினைகளில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். குருபகவான் அஸ்தமன நிலைக்குச் செல்வது செல்வது அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் துறையில் வெற்றியை அடைவதில் தாமதத்தை சந்திக்க நேரிடும். எனவே யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும், ஏனெனில் இது உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். உங்களின் மன அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குருபகவானின் அஸ்தமனம் எதிர்பாராத பின்னடைவுகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் வேலை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற கவலைகள் ஏற்படும், பல விஷயங்களில் நீங்கள் குறுக்குவழிகளை எடுக்க வேண்டியிருக்கும், இதனால் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எந்தவொரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லயெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் துணையின் உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கருத்து வேறுபாடுகள் வாழ்க்கையில் சவால்களை உருவாக்கக்கூடும். நீங்கள் எடுக்கும் பல முடிவுகள் உங்களுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும். குருபகவான் பலத்தை இழப்பது அவர்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் சாதகமான பலன்களை கொடுக்காது. இந்த காலகட்டத்தில் உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதனால் அவர்கள் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் ரகசியங்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.
வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையிடம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

