Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Nellai Style Thengai Paal Chicken Kuzhambu Recipe in Tamil: சன்டே வந்தாலே அனைவரின் வீட்டிலும் அசைவ உணவுதான் என்பது எழுதப்படாத விதியாக மாற்றிவிட்டது. வாரம் முழுவதும் விதவிதமாக அசைவம் சாப்பிட்டால் கூட சன்டே அன்று வீட்டில் சமைத்து சாப்பிடும் அசைவ உணவுகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். பலருக்கும் காலையில் இட்லி, தோசையுடன் கறிக் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால்தான் சன்டேவே தொடங்கும். அதிலும் இட்லி, சிக்கன் குழம்பு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த காம்போவாகும்.

உங்கள் வீட்டிலும் சன்டே வந்தாலே இட்லி செய்து சிக்கன் குழம்பு செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் சிக்கன் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் திருநெல்வேலி ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழிக் குழம்பு செய்யுங்கள். இது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
விழுது அரைக்கத் தேவையானவை:
- 1/4 அங்குல பட்டை
- 4 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 10 மிளகு
- 4 பல் பூண்டு
- 1 அங்குல இஞ்சி துண்டு
- 6 காரமான பச்சை மிளகாய்
- 1/4 கப் தண்ணீர்
தாளிக்க:
- 1 கிலோ சிக்கன்
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 3 பிரியாணி இலை
- சிறிதளவு கல்பாசி
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் புதினா இலைகள்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலை
- 1/4 கப் நறுக்கிய தக்காளி
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
தேங்காய்ப்பால் அரைக்க:
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் கசகசா
- 4 முந்திரி பருப்பு
- 1 கப் தண்ணீர்
செய்முறை:
- முதலில் அரைக்க வேண்டிய பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் கசகசா மற்றும் முந்திரியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, அதனுடன் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி கெட்டியான தேங்காய்ப்பாலைப் பிழிந்து எடுத்துத் தயாராக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, கல்பாசி, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் மொறுமொறுப்பாகவும், பொன்னிறமாகவும் மாறும் வரை வதக்கவும்.
- பிறகு அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, அது நன்கு பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.
- பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து வதக்கவும்.
- இலைகள் சுருங்கியதும் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, சிக்கன் நன்கு வேகும் வரை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- குழம்பு கொதித்து வரும்போது, கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- குழம்பு வெந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை தூவி, சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications