Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க
Madurai Special Thakkali Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டில் உணவுகளின் நகரம் என்றால் அது மதுரைதான். மதுரை உணவுகளுக்கு எப்போதும் தனிரசிகர்கள் உண்டு. அசைவ உணவுகள் மட்டுமின்றி மதுரையில் இட்லி, தோசைக்கு கிடைக்கும் சைடிஷ்கள் கூட மிகவும் தனித்துவமானவையாக இருக்கும். அந்த வகையில் இட்லி, தோசைக்கு மதுரையில் பரிமாறப்படும் தக்காளி சட்னி மிகவும் பிரபலமானது.

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு காலை மற்றும் இரவு உணவென்றால் அது இட்லி, தோசைதான். தினமும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி அரைக்காமல் இதுபோல வித்தியாசமாக சட்னி அரைத்துக் கொடுத்தால் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த காரசாரமான மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்.
உங்களுக்கு மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 20 சின்ன வெங்காயம்
- 5 வர மிளகாய்
- 2 தக்காளி
- 2 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உடைத்த உளுத்தம் பருப்பு
- தேவையான அளவு உப்பு
- 1/4 கப் தண்ணீர்
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 ஸ்பூன் புளி விழுது
- 1/2 ஸ்பூன் சர்க்கரை
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி, வர மிளகாய், பாதி நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் 1 நறுக்கிய தக்காளி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும். அடுப்பை அணைத்து இதை ஆற வைக்கவும்.
- இந்த கலவையை மிக்சி ஜாருக்கு மாற்றி, 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில், மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் சேர்த்து பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் மீதமுள்ள நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை சமைக்கவும்.
- இந்த நிலையில் மீதமுள்ள தக்காளியை சேர்த்து மூடி வைத்து வேகவிடவும். தக்காளி மிருதுவாக மாறும் வரை வதக்கவும்.
- இறுதியாக கடாயில் அரைத்த மிளகாய்-தக்காளி-வெங்காயம் கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- தக்காளி கொதித்ததும் அடுப்பை அணைத்தால் காரசாரமான மதுரை ஸ்பெஷல் தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications