பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க

Tomato Pulao Recipe in Tamil: கேஸ் தட்டுப்பாடு இன்னும் தீராத நிலையில் தினமும் என்ன சமைப்பது என்பது பெரும்பாலான இல்லத்தரசிகளின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. தினமும் குழம்பு, ரசம் மற்றும் பொரியல் என்று செய்து கொண்டே இருக்க முடியாது. எனவே ஈஸியாக மதிய உணவை முடிக்க விரும்புகிறவர்கள் இந்த தக்காளி புலாவை முயற்சி செய்யலாம். இந்த தக்காளி புலாவ் செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையானது.

இந்த தக்காளி புலாவ் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது, அதேசமயம் இதன் சுவை பிரியாணி போலவே இருக்கும். அதனால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் பிரியாணிக்கு சிறந்த மாற்று விரும்பினால் இந்த புலாவை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

Tomato Pulao Recipe How to Make Thakkali Pulao Recipe

உங்களுக்கு பிரியாணி சுவையில் தக்காளி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரிசி - 1 கப்
- தக்காளி - 3 (அரைத்துக் கொள்ளவும்)
- தண்ணீர் - ஒன்றரை கப்
- சின்ன வெங்காயம் - 10(இரண்டாக நறுக்கியது)
- பூண்டு - 5 பல்
- முந்திரிப் பருப்பு - 5 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 (கீறியது)
- உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்

அரைக்க:

- இஞ்சி - 1 இன்ச் அளவு
- நறுக்கிய கொத்தமல்லி - 2 ஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - 2 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 5
- பிரியாணி இலை - 1
- அன்னாசிப்பூ - 1
- ஏலக்காய் - 2

அலங்கரிக்க:

கொத்தமல்லி - 2 ஸ்பூன்

செய்முறை:

- கொத்தமல்லி இலை மற்றும் இஞ்சியைத் தண்ணீருடன் சேர்த்து 2 ஸ்பூன் விழுதாக அரைக்கவும். அதைத் தனியாக வைக்கவும். அதேபோல முந்திரியை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

- அரிசியைக் கழுவித் தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

- அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்த பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.

- பின்னர் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-கொத்தமல்லி இலை விழுதைச் சேர்க்கவும்.

- ஒரு நிமிடம் வதக்கியா பின் அரைத்த முந்திரி விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும்.

- அனைத்தையும் நன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கிளறவும். இது முழுவதும் நன்றாக வற்றும் அளவுக்கு வதக்கவும்.

- இப்போது ஊற வைத்துள்ள அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- இந்த கலவை முழுவதையும் ஒரு பிரஷர் குக்கருக்கு மாற்றிக், ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.

- அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு, சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறினால் சுவையான தக்காளி புலாவ் ரெடி!

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, April 8, 2026, 12:00 [IST]
Desktop Bottom Promotion