Latest Updates
-
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்!
Vastu Tips In Tamil: நாம் அனைவருமே நமது வீட்டில் குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை எப்போதும் ஸ்டாக் வைத்திருப்போம். அதுவும் தற்போது பெருகி வரும் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையால், வீட்டிற்கு ஒருவராவது இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தினசரி மருந்து மாத்திரைகளை எடுத்து வர நேரிடுகிறது.
இப்படி எடுக்கும் மருந்து மாத்திரைகளை நமது வீட்டில் சரியான இடத்தில், சரியான திசையில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒருவேளை தவறான இடத்தில் வைத்து பயன்படுத்தினால், அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரிப்பதோடு, மருத்துவ செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும்.

ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒருவர் மருந்துகளைத் தவறான திசையில் வைத்தால், அவரால் நோய்களிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது. அப்படி கீழே வீட்டில் எந்த இடத்தில் மருந்துகளை வைத்து பயன்படுத்தக்கூடாது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த இடத்தில் மருந்துகளை வைக்கக்கூடாது?
* வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் மருந்துகளை வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அந்த மருந்து எடுப்பவரை கடுமையான நோய்க்கு உள்ளாக்கும். அதோடு வாழ்வில் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
* வாஸ்துப்படி, மருந்துகளை வைக்க என்று எப்போதும் ஒரு தனி இடத்தை ஒதுக்காதீர்கள். இல்லாவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாகப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வாஸ்துப்படி வீட்டினுள் முதலுதவி பெட்டியை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அந்த வீட்டில் எப்போதும் நோய்கள் சூழ்ந்திருக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்துகளை எப்போதும் படுக்கைக்கு அருகிலோ அல்லது தலைக்கு அருகிலோ வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது ராகு-கேது தோஷத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக அந்நபர் நோய்களைத் தவிர வாழ்வில் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்திக்க நேரிடும்.
* முக்கியமாக மருந்துகளை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையில் மருந்துகளை வைத்து பயன்படுத்தினால், எப்போதும் ஆரோக்கிய பிரச்சனை தீராது. அதுமட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளை அதிகரித்துவிடும்.
* பலர் தங்கள் வீட்டின் சமையலறையில் முதலுதவி பெட்டியை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, சமையலறையில் மருந்து பெட்டியை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஆரோக்கியத்தில் தான் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்தில் மருந்துகளை வைக்கலாம்?
* வாஸ்துப்படி, மருந்துகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுபடலாம். மேலும் கிழக்கு திசைகளிலும் மருந்துகளை வைத்து பயன்படுத்தலாம்.
* அதுவும் வடகிழக்கு திசையில் மருந்துகளை வைப்பதாக இருந்தால், பூஜை அறைக்கு அருகில் வைத்து மருந்துகளை பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
* வீட்டின் ஓனர் தங்களின் மருந்துகளை தென்மேற்கு திசையில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மருந்துகளை வைத்தால், சாதகமான பலன்கள் கிடைக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

