Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதை கண்டறிவது எப்படி-ன்னு தெரியுமா?
Vastu Tips In Tamil: நாம் வாழும் வீடு வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளின் படி இருந்தால், அது வாழ்வில் அதிர்ஷ்டம், செழிப்பு, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை கொடுக்கும். ஆனால் வாஸ்துப்படி இல்லாவிட்டால், அது வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
ஒரு வீடு வாஸ்து குறைபாடு/ வாஸ்து தோஷத்துடன் இருந்தால், அது எதிர்மறை ஆற்றலை வீட்டில் ஊக்குவித்து, அந்த வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும், நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும் மற்றும் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நீங்கள் இந்த மாதிரியான வீட்டில் இருந்தால், உடனே மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அது வாழ்க்கையையே நாசமாக்கிவிடும்.

சரி, ஒருவரது வீடு வாஸ்து குறைபாடுடன் இருப்பதை எப்படி கண்டறிவது என்று நீங்கள் கேட்கலாம். வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
* நீங்கள் குடியிருக்கும் வீடு ஒரு புத்துணர்ச்சியுடன் நல்ல உணர்வை கொடுக்காமல் இருந்தால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம். அதாவது நீங்கள் எவ்வளவு நன்கு சாப்பிட்டு தூங்கினாலும் நல்ல தூக்கம் கிடைக்காது, மனம் எப்போதும் ஒருவித அழுத்தத்துடன் இருக்கும். இம்மாதிரியான அறிகுறிகள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பதை உணர்த்துகிறது.
* எவ்வளவு தான் பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் முன்னேற்றம் ஏதும் இல்லையா அல்லது வியாபாரத்தில் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடுகிறதா? அப்படியானால் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்க வாய்ப்புள்ளது. வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருப்பதோடு, அந்த வீட்டில் உள்ளோரின் நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறைக்கும்.
* உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்களா? அப்படியானால் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
* வீட்டில் பணம் நிலைத்திருப்பதில்லையா? வருமானத்திலும் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லையா? அப்படியானால் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
* அடிக்கடி பண இழப்புக்கள் அல்லது நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ச்சியாக எற்படுகிறதா? அப்படியானால் வீட்டில் வாஸ்து தோஷத்தால் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியுள்ளது என்று அர்த்தம்.
* வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்தவாறு உள்ளதா? அப்படியானால் அதற்கு வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு தான் காரணம். வாஸ்து குறைபாட்டினால் வீட்டில் உள்ளோரின் மனநிலையில் தேவையல்ல எரிச்சல் ஏற்பட்டு, வீட்டில் உள்ளோர் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடும்.
* வாழ்க்கையை வாழ ஆர்வமில்லாமல் இருப்பது, எப்போதும் விரக்தி அல்லது சோகத்தால் சூழப்பட்டிருப்பதும் வாஸ்து குறைபாட்டின் அறிகுறியாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு அல்லது வாஸ்து தோஷம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாகும். உங்கள் வீட்டிலும் இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே கவனித்து சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications