பெண்களை அச்சுறுத்தும் ‘கொழுப்பு பண்ணை’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா?

Posted By:
Subscribe to Boldsky

இது கேட்கவே கொஞ்சம் வித்யாசமாக உங்களுக்கு தோன்றலாம். ஆம், நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இன்னும் சொல்லப்போனால் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அடியோடு மறுத்து, அதற்கு எதிரான செயல்களிலும் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த மக்கள்.

Reason behind women forced to be fat

Image Courtesy

பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பது தான் உடல் எடைக்கு ஆபத்து என்று பேசியிருக்கிறோம். உடல் எடை குறைக்க வேண்டும் என்று என்னென்ன பிரயத்தனங்கள் டயட், உடற்பயிற்சி என்று என்னென்னவோ முயன்றுகொண்டிருக்கிறோம் ஆனால் ஆஃப்ரிக்காவில் உள்ள ஒரு ஊரில் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள்.

ஆஃப்ரிக்காவில் இருக்கும் ஆண்களுக்கு அதீதமாக குண்டான பெண்களைத் தான் பிடிக்குமாம். அதனால் திருமணத்திற்கு தயாராகும் தங்கள் பெண்களை குண்டாக இருக்க என்னென்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்களைப் பொருத்தவரையில் பெண்கள் என்றால் குண்டாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடரும் பாரம்பரியம் :

தொடரும் பாரம்பரியம் :

இந்த நடைமுறை அங்கே பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது.காலனித்துவ ஆண்டு என்று சொல்லப்படும் காலத்திலிருந்தே இந்த நடைமுறை இருக்கிறதாம். ஆஃரிக்காவில் இருக்கும் மௌரிடானியா என்ற ஊரில் தான் இப்படியான நடைமுறை இருக்கிறது.

பெண்கள் குண்டாக இருப்பது தான் அங்கே செல்வமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் உடம்பில் இருக்கக்கூடிய ஸ்ட்ரச் மார்க் அவர்களுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆபரணம் என்கிறார்கள். பதினோறாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய ஸ்பெயினில் இந்த நடைமுறை தோன்றியிருக்கலாம் என்கிறார்கள்.

இன்னமும் நைஜீரியாவின் காலபர் மாநிலம் மற்றும் வடக்கு கேமரூன் ஆகிய இடங்களில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

Image Courtesy

பண்ணை :

பண்ணை :

பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களது நான்கு அல்லது ஐந்து வயதிலிருந்து அதீத உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். திருமண வயதை எட்டப்போகிறாள் என்றதும் ‘ஃபேட் கிராம்ப்ஸ்' எனப்படுகிற பண்ணையில் தங்கள் குழந்தையில் விடுகிறார்கள்.

Image Courtesy

 ஒரே நோக்கம் :

ஒரே நோக்கம் :

பாலைவனத்தின் நடுவில் ஆல் ஆரவாரமற்று இருக்கும் அந்த கொட்டகையில் ஒரேயொரு மூதாட்டி மட்டும் இருக்கிறார். அவர் இக்குழந்தைகளை சகட்டுமேனிக்கு உணவு கொடுத்து குண்டாக்கி அனுப்புவார். தங்கள் குழந்தை குண்டாக வேண்டும் என்பதற்காகவே இங்கே சேர்கிறார்கள்.

Image Courtesy

உணவு :

உணவு :

இங்கே ஒரு நாளைக்கு பதினைந்தாயிரம் கலோரிகள் வரை கொடுக்கப்படுகிறது. காலை உணவாக ஆலிவ் ஆயில் தடவிய பிரட்,ஒட்டகப்பால் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரும் தொடர்ந்து ஆட்டுறைச்சி,அத்திப்பழம்,கொஸ்கொஸ், என வரிசையாக உணவினை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

Image Courtesy

தண்டனை :

தண்டனை :

அவர்களது கணக்கு ஒரு நாளைக்கு இதையெல்லாம் சாப்பிட்டாக வேண்டும். சாப்பிடாமல் முரண்டு பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

கால் பாதங்களை இரண்டு குச்சிகளுக்கு நடுவில் வைத்து மிரட்டுகிறார்கள். சாப்பிடவில்லை என்றால் குச்சிகளுக்கு நடுவில் இருக்கும் பாதம் நசுக்கப்படுகிறது. வலி பொறுக்காத அந்த குழந்தை சாப்பிட்டு விடுகிறது.

அந்தக்குழந்தை ஓடியாடி விளையாடவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. நாளெல்லாம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றே நிர்பந்திக்கப்படுகிறது.

Image Courtesy

ஊக்கமருந்து :

ஊக்கமருந்து :

உணவுடன் சிலர் விரைவில் குண்டாக வேண்டும் அல்லது அதீத குண்டாக வேண்டும் என்பதற்காக ஸ்டராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. அவர்களது ஹார்மோனை தூண்டச் செய்து அதீத பசியை உண்டாக்குகிறது.

வயிறு,மார்பகம், முகம் ஆகியவை எல்லாம் பெரிதாக தெரியவேண்டும் என்றும் மருந்துகள் எடுக்கப்படுகிறது.

அங்கே மேல் பகுதி எல்லாம் பெரிதாக இருக்க வேண்டும் என்றும் கால் பகுதி ஒல்லியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

Image Courtesy

பல அடுக்கு கொழுப்பு :

பல அடுக்கு கொழுப்பு :

இதுப்பற்றி இந்த பண்ணையை நடுத்தும் பெண்கள் சிலர் கூறுகையில், ஆரம்பத்தில் சில குழந்தைகள் முரண்டு பிடிக்கும்,அழும்,பயப்படும்... அவர்களை பேசிக்கொண்டே சமாதானம் செய்ய முயல்வோம் முடியவில்லை என்றால் அடி தான்.

இது அவர்களின் நலனுக்காகத்தானே. இங்கே வந்த சேர்த்ததும் அறுபது முதல் நூறு கிலோ வரை அதிகரித்து தான் அனுப்புகிறோம்.

நிறைய நிறைய சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் அதேயளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். அப்போது தான் பல அடுக்குகளாக கொழுப்பு சேரும் .

Image Courtesy

ஒரே வேலை :

ஒரே வேலை :

இங்கே கரண்ட் வசதி எதுவும் இருக்காது, அவர்களுக்கு பொழுது போக்கும் என்பதும் கிடையாது. அவ்வளவு எளிதாக அவர்களால் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது. அவர்களது ஓரே வேலை சாப்பிடுவது மட்டுமே.

Image Courtesy

விருப்பமில்லை :

விருப்பமில்லை :

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், எங்களில் பலருக்குமே இதில் விருப்பமில்லை பாரம்பரியம் என்று சொல்லி இதற்கு நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம்.

ரத்த அழுத்தம், மாரடைப்பு,சர்க்கரை நோய் என பல நோய்கள் எங்களை தாக்குகிறது. சராசரியாக ஒரு மனிதன் எளிதாக செய்யக்கூடிய வேலையைக் கூட எங்களால் செய்ய முடியவில்லை. நடக்கும் போதும் பயங்கரமாக மூச்சு வாங்கும்.

Image Courtesy

நிர்பந்தம் :

நிர்பந்தம் :

இப்போது எனக்கு இருபத்தாறு வயதாகிறது. நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அந்த பண்ணையில் என்னை சேர்த்தார்கள் அங்கே தினமும் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு எனக்கு கொடுக்கப்படும்.

நான் வாந்தி எடுத்து விடுவேன், பல நேரங்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டேன். ஆனாலும் அவர்கள் விடவில்லை.

அதற்குரிய மருந்துகள் சிலவற்றை கொடுத்து மீண்டும் அதிகமாக சாப்பிட நிர்பந்திக்கப்பட்டேன். குண்டாக இருப்பது தான் அழகு என்று எங்களுக்கு எல்லாம் சொல்லப்பட்டது.

Image Courtesy

ஜின்ஸும் ஹைஹீல்ஸ் செருப்பும் :

ஜின்ஸும் ஹைஹீல்ஸ் செருப்பும் :

எனக்கும் பிறரைப் போன்று உடம்பை குறைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஜீன்ஸ் பேண்ட்டும் ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிய வேண்டும் என்ற பெருங்கனவும் இருக்கிறது.

எங்கே என் ஆசைக்காக உடம்பை குறைக்க நினைத்து என்னை எந்த ஆண்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டால் என்னை யார் திருமணம் செய்வார்கள்? பிறகு என் எதிர்காலமே கேள்விக்குறியாகிடும் என்று நினைக்கையில் பெரும் போராட்டமாக இருக்கிறது.

மாற்றம் :

மாற்றம் :

பெண்கள் மனதில் இப்படியான மாற்றம் உதித்திருக்கும் இதே நேரத்தில் தான் ஆண்களும் தங்களுக்கு குண்டான பெண் வேண்டாம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் கடந்து பெண்களை போகப்பொருளாக பார்த்த இடத்திலிருந்து சற்று முன்னேற காத்திருக்கிறது.

ஒரு பெண் என்ன சாப்பிட வேண்டும், அவளது உடல் எப்படியிருக்க வேண்டும் என்பது கூட இன்னொருவரால் முடிசெய்யப்பட்ட காலம் விரைவில் முற்றுப்பெற வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reason behind women forced to be fat

Reason behind women forced to be fat
Story first published: Monday, November 6, 2017, 11:33 [IST]
Subscribe Newsletter