9/11 தாக்குதல் குறித்து எப்.பி.ஐ வெளியிட்ட பகீர் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள், உலக அரங்கில் பதிவான ஒரு மாபெரும் தாக்குதல். உலக போரின் போது அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரில் நடந்த தாக்குதலுக்கு அடுத்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

யாரும் எதிர்பாராத தருணத்தில் விமானத்தை கடத்தி உலக வர்த்தக கட்டிடமான இரட்டை கோபுரத்தை தகர்த்து பெரும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது இந்த தாக்குதல். ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு விமானங்களை கடத்தி அதிலிருந்த அனைவரும் இந்த தாக்குதலின் போது கொடூரமாக கொல்லப்பட்டனர்.

ஏறத்தாழ அந்த விமானங்களில் பயணித்த 246 பொது மக்கள் உட்பட, கடத்தலில் ஈடுப்பட்ட 19 தீவிரவாதிகளையும் சேர்த்து அனைவரும் இந்த தாக்குதலின் போது இறந்தனர். இந்த தாக்குதலில் இரட்டை கோபுரங்கள் இரண்டும் தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்தது.

இரண்டு மணிநேரம் தொடர்ந்து தீப்பற்றி எரிந்த இந்த தாக்குதலில் சிக்கி  மொத்தம் 2973 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் முன்னூறு பேர்  வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

All Image Credit: FBI

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விமானம் எண் 11

விமானம் எண் 11

இந்த விமானத்தில் பயணம் செய்த 11 பணியாளர்கள் மற்றும் 76 பயணிகளுடன் அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து கிளம்பிய விமானத்தைக் 5 கடத்தல்காரர்கள் கடத்தி, காலை 8:46 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தனர்.

விமானம் எண் 175

விமானம் எண் 175

காலை 8:14 மணிக்கு லாஸ் பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து 9 பணியாளர்கள் மற்றும் 51 பயணிகளுடன் ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய இந்த விமானத்தைக் 5 கடத்தல்காரர்கள் கடத்தி, காலை 9:03 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தை தகர்த்தனர்.

விமானம் எண் 77

விமானம் எண் 77

6 பணியாளர்கள் மற்றும் 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வொ்ஜினியாவிலிருந்து ஏஞ்சலஸ்க்கு கிளம்பிய விமானத்தைக் 5 கடத்தல்காரர்கள் கடத்தி, காலை 9:37 மணிக்கு பென்டகன் மீது மோதினர்.

விமானம் எண் 93

விமானம் எண் 93

7 பணியாளர்கள் மற்றும் 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் 4 கடத்தல்காரர்கள் காலை 10:03 மணிக்கு கடத்தி பென்னிசிலாவனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோதினர்.

எப்.பி.ஐ!

எப்.பி.ஐ!

தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் சந்தேகதிற்குள்ளன விமானிகள் மற்றும் விமான கடத்தல்காரர்கள் பட்டியலை வெளியிட்டது எப்.பி.ஐ. மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு மையம் மற்றும் ஜெர்மனியின் உளவுத்துறையும் இந்த பெரும் தாக்குதலுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் சம்மந்தம் இருக்கும் என சந்தேகத்தை வெளியிட்டது.

கடத்தல்காரர்கள்!

கடத்தல்காரர்கள்!

செப்டம்பர் 11, 2001ல் அமெரிக்காவில் நடந்த இந்த மாபெரும் தாக்குதலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் யார், யார், அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது எப்.பி.ஐ.

சவூதி அரேபியா - 15

ஐக்கிய அரபு நாடுகள் - 2

எகிப்து - 1

லெபனான் - 1

தாமஸ் கேன்!

தாமஸ் கேன்!

2002ம் ஆண்டு அமெரிக்க தேசிய தீவிரவாத தாக்குதல் ஆணையம் என்ற பெயரில் இந்த பெரும் தாக்குதல் குறித்து ஆய்வு நடத்த "9/11 ஆணையம்" என்ற பெயரில் தாமஸ் கேன் என்பவரின் தலைமையும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியது.

அறிக்கை!

அறிக்கை!

ஜூலை 22, 2004 தாமஸ் கேனின் தலைமையிலான குழு 9/11 தாக்குதல் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்த தாக்குதலுக்கும் அல்கொய்தா அமைப்பினருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றும். இந்த சதி வேலையில் ஈடுபட்டவர்கள் அவர்கள் தான் கூறப்பட்டிருந்தது.

உயிரிழப்பு!

உயிரிழப்பு!

அமெரிக்க மண்ணில் வெளிநாட்டவர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய உயிர் சேதம் ஏற்படுத்திய சம்பவம் என் 9/11 தாக்குதல் கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனம், 9/11 தாக்குதலில் பாதிப்படைந்த ஒவ்வொரு நபரை குறித்தும் தொகுப்பு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

50,000

50,000

9/11 தாக்குதலில் வீழ்த்தப்பட்ட உலக வர்த்தக மையத்தில் செப்டம்பர் 11,2001-க்கு முன்னர் ஒரு வேலைநாளில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

18 பேர்!

18 பேர்!

9/11 தாக்குதலில் ஏறத்தாழ மூவாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு பிறகு தீயணைப்புப் படைவீரர்களால் 18 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது. விபத்து ஏற்பட்ட ஓரிரு மணி நேரங்களில் மொத்த கட்டிடங்களும் இடிந்து விழுந்ததால் பெரும் உயிர் சேதத்தை தவிர்க்க முடியாமல் போனது.

குப்பைகள்!

குப்பைகள்!

9/11 தாக்குதலுக்கு பிறகு, அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட குப்பையின் எடை மட்டுமே 1.4 மில்லியன் டன்கள் ஆகும். சம்பவ இடத்தில் இருந்து 19,435 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டன.

அணு மின் நிலையங்கள்

அணு மின் நிலையங்கள்

ஆரம்பத்தில் அல்கொய்தா அமெரிக்காவின் அணு மின் நிலையங்கள் மீது தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், அதன் தாக்கம் எப்படியானதாக இருக்கும் என்பதை அறிய முடியாமல் போனதால், உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னரே...

ஒரு மாதத்திற்கு முன்னரே...

அன்றிய ஜனாதிபதியாக இருந்த ஜியார்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு 9/11 தாக்குதல் நடந்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்னேரே பின்லேடன் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்றும். அது நியூயார்க் நகராக இருக்கலாம் என்ற தலைப்பில் ஒரு மெமோ வந்துள்ளது. அதில், விமானங்களை கடத்தி தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேம்ஸ் வூட்ஸ்!

ஜேம்ஸ் வூட்ஸ்!

நடிகர் ஜேம்ஸ் வூட்ஸ் என்பவர் ஆகஸ்ட் 2001ல் தனது விமான பயணத்தில் நான்கு பேரை சந்தேகிக்கும்படி கண்டேன் என ஒரு புகார் அளித்திருந்தார். ஆனால், அதிகாரிகள் அதை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜேம்ஸ் கூறியிருந்த அந்த நால்வர் 9/11 தாக்குதலில் இடம்பெற்றிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

FBI Released 9-11 Attacks Investigation Related Photographs!

FBI Released 9-11 Attacks Investigation Related Photographs!