Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
உங்க பெயர் 'வி'ல துவங்குதா? அதோட சிறப்பு என்னன்னு தெரிஞ்சுக்க இதப்படிங்க முதல்ல!
தமிழ் எழுத்துகளில் "வி" எனும் சொல் கொண்டிருக்கும் சிறப்பு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
தமிழ் மொழியானது பழமையான தொன்மையான மொழி ஆகும். இதன் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதில் இருந்து, ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும், செய்ய கூடாது எனவும் கற்பித்துள்ளது.

தமிழ் மொழியில் மயங்கொலி சொற்கள் மற்றும் ஒரு எழுத்தில் பொருள் தரும் எழுத்துகள் என அற்புத தன்மைகளை நாம் காண முடியும். அதில் வி எனும் எழுத்து முற்சேர்க்கையாக வரும் போது ஒரு வார்த்தையின் பொருளை எப்படி சிறப்பாக மாற்றுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்...

நாயகன்!
நாயகன் - ஒரு கதையில் தலைமை வகிப்பவன்!
விநாயகன் - முதற்முதல் கடவுள்!

பூதி!
பூதி - சாம்பல்!
விபூதி - கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் / வெற்றில் இட்டுக் கொள்ளும் பொருள்.

வேகம்!
வேகம் - ஓட்டத்தின் அளவை குறிக்கிறது.
விவேகம் - அறிவு, புத்திசாலித்தனத்தின் அளவை குறிக்கிறது.

வாதம்!
வாதம் - பேசுதல்!
விவாதம் - ஒரு கரு கொண்டு சிறப்பாக பேசுதல்.

தரணி!
தரணி - உலகத்தை குறிக்கும் சொல்.
விதரணி - வள்ளல், கொடையுள்ளம் கொண்டுள்ளதை குறிக்கும் சொல் ; (விதரண் என்பதன் பெண்பால் சொல்)

லட்சணம்!
லட்சணம் - அழகை குறிக்கும் சொல்.
விலட்சணம் - சிறப்பு இயல்பை குறிக்கும் சொல்.

குணம்!
குணம் - ஒரு மனிதனின் செயலை குறிப்பது.
விகுணம் - தவறான குணம் கொண்டவர்களை குறிப்பது.



Click it and Unblock the Notifications
