இந்த பொருட்களை வீட்டில் சரியான திசையை நோக்கி வைத்தால் செல்வ வளம் அதிகரிக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.

Common Household Items That Bring Good Luck & The Correct Direction To Place Them

மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடிகாரம்

கடிகாரம்

நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எந்த திசை சிறந்தது?

எந்த திசை சிறந்தது?

* கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது.

* வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும்.

* கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி

கண்ணாடி

வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.

எந்த திசை சிறந்தது?

எந்த திசை சிறந்தது?

* வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.

* அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது.

* குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.

7 குதிரைகள் கொண்ட ஓவியம்

7 குதிரைகள் கொண்ட ஓவியம்

பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

எந்த திசை சிறந்தது?

எந்த திசை சிறந்தது?

* குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது.

* அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது.

* இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.

மணி ப்ளாண்ட்

மணி ப்ளாண்ட்

இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள்

ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள்

பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.

எந்த திசை சிறந்தது?

எந்த திசை சிறந்தது?

இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Household Items That Bring Good Luck & The Correct Direction To Place Them

We bring 5 most common items of home decor that will not only beautify your house, but also keeping them in the right location can boost good energy in the surroundings. Check out what these things are!
Story first published: Friday, February 24, 2017, 12:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter