இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை!

Posted By:
Subscribe to Boldsky

சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான் இது.

சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ. இவர் ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப்மெண்ட் மூலமாக பெரும் பணக்காரராக திகழ்கிறார்.

நினைத்தால் எதையும் சாத்தித்து காட்டும் அளவிற்கு பணம் இருக்கும் இவரால் ஒன்று மட்டும் முடியவில்லை. இவரது ஒரே மகள் ஓரினச்சேர்க்கையாளர்.

இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியோ அவருக்கு தான் தலைப்பில் கூறியிருக்கும் பரிசு தொகை போய் சேரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2012-ல்

2012-ல்

2012-ல் தான் முதல் முறையாக செசில் சாவோ உலகை உலுக்கும் அளவிற்கு ஒரு தலைப்பு செய்தியை உருவாக்கினார். அப்போது இவர் தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார்.

Image Source

எகிறி நிற்கும் பரிசு தொகை!

எகிறி நிற்கும் பரிசு தொகை!

இந்த 60 மில்லியன் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. 2014-ல் 120 மில்லியன் டாலர்கள் ஆனது, இப்போது கடைசியாக 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. அதாவது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 1,164 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும்.

Image Source

கிகி!

கிகி!

செசில் சாவோவின் லெஸ்பியன் மகளான கிகி தனது தந்தை அறிவிக்கும் சலுகை மற்றும் சன்மானம் போன்றவற்றை மறுத்து வருகிறார். அவர் தனது லெஸ்பியன் துணையுடனே வாழ விரும்புகிறார்.

Image Source

பொதுவெளி கடிதம்!

பொதுவெளி கடிதம்!

பொதுவெளியில் கிகி தனது தந்தை செசில் சாவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் செசில் சாவோ தன்னையும், தனது துணை சீன யேவ்-யும் சாதாரணமான, கண்ணியமான மனிதர்களாக பார்க்க வேண்டினார்.

Image Source

ஒத்துப்போகாது...

ஒத்துப்போகாது...

"உங்கள் மகளாக உங்களை மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், உறவு என வரும் போது, உங்கள் எதிர்பார்ப்பில் நானும், ரியாலிட்டியில் நானும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போக முடியாது." என மேலும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

Image Source

மனம் ஒவ்வாத தந்தை...

மனம் ஒவ்வாத தந்தை...

ஆனால், மகளின் முடிவில் செசில் சாவோவிற்கு துளியும் சம்மதம் இல்லை. இன்று இது உலகிற்கு பரிச்சயம் ஆன உறவு முறையாக இருப்பினும், 77 வயதான செசில் சாவோவிற்கு இதை ஒப்புக்கொள்ள மனமில்லை.

Image Source

என்ன செய்வது?

என்ன செய்வது?

ஒரு பேட்டியில், தனது மகளின் முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவளை மதிக்க வேண்டும். தனது தந்தையின் இந்த மாற்றம் கிகிக்கு பெருமூச்சு விடும் நிலையாகவும், ஒரு பெரிய இடரில் இருந்து தப்பித்தது போலவும் இருக்கிறது.

Image Source

பிரிந்து வாழும் நிலை...

பிரிந்து வாழும் நிலை...

தன் மகளை மதிக்கிறேன் என்று தான் செசில் சாவோ கூறினாரே தவிர, அவரது துணையை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள அல்ல. ஆம், கிகி மற்றும் செசில் சாவோ பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Image Source

அப்பாடா!

அப்பாடா!

தந்தையின் இந்த முடிவால், கிகிக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரது தொல்லை விட்டது போதும் என்று வாழ்ந்து வருகிறார். தனது துணையுடன் நிம்மதியாக தனது வாழ்க்கை பயணத்தில் பயணம் செய்து வருகிறார் கிகி.

Image Source

இதுவும் காதல் தான்!

இதுவும் காதல் தான்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற போதிலும், இவர்கள் இருவர் மீது வைத்திருந்த காதல், கோடிகளை வென்று, அன்பும், நிம்மதியும் மட்டுமே போதும் என்பதை போதிக்கிறது.

எது எப்படியோ, இதுவும் காதலுக்கு, காதலற்கு ஒருவகையான எடுத்துக் காட்டு தான். பணத்தை வெல்ல மனதால் முடியும் என நிரூபிக்கும் எடுத்துக்காட்டு.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chinese billionaire Will Pay You 180 Million Dollar To Marry His Daughter, But There’s A Condition!

Chinese billionaire Will Pay You 180 Million Dollar To Marry His Daughter, But There’s A Condition!
Story first published: Thursday, April 20, 2017, 10:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter